உ.போ.ஒ: ‘அறிவாளி’ கமல்
நிச்சயம் கமல் அறிவாளி தான். காரணம், ஒரு அறிவாளியால் தான் மற்றவரை முட்டாளாக்க முடியும்.
சில கமல் படங்களுக்கு பிறகு வந்த ஒரு படம் இது. அந்த சில படங்கள், கமல் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை தோற்றுவைக்கிறது, எப்படி ரஜினி படம் என்றால் லாஜிக் பார்க்காமல், சும்மா ஒரு என்டர்ட்ரெய்னராக பார்ப்போமோ, அதை போல.
கமலில் முந்தைய படமான ‘ஹே ராம்’-ஐ எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியை கொல்லும் நோக்கத்தில் இருப்பதால் அவர் காந்தியவாதிக்கு எதிரானவர் என்றா? இல்லை கடைசியில் மனம் மாறுவதால் அவர் காந்தியை ஆதரிப்பவர் என்றா? அது படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து. காந்தியின் மீது வெறுப்பு ஏற்பட்ட சமயத்தில், கல்கத்தா நகரில் வலம் வரும்போது, காந்தியின் அறிமுக காட்சியில் கீழே மக்கள் கூடியிருக்க, மேலே ஜன்னலை திறந்து காந்தி வெளிப்படுவார். மென்மையானவராக நம்பியிருக்கும் மக்கள் முன்னிலையில் அந்த காட்சியில் அந்த ஜன்னல் கதவை சற்றே வேகமாக “படாரென்று” திறந்து காந்தி வெளிப்படுவார். அதே காந்தியை திருந்தியவாரக சாகேத் ராம் சந்திக்கும் போது மென்மையாக காட்டியிருப்பார் இயக்குநர் கமல்.
இந்த இரு காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியை ஒரு நெகடிவ் பாத்திரமாகவா? அல்லது சாகேத் ராம் பார்வையில் (அந்த சூழ்நிலையில்) காந்தி முதலில் ஒரு வெறுக்கப்படும் நபராகவா, பின் மென்மையானவராக?
ஒரு காட்சியை பார்ப்பவரின் மனநிலையை பொறுத்து அதன் அர்த்தம் மாறும். வோடஃபோன் நாய்க்குட்டி ‘டை’ எடுத்து ஓடிவரும் போது ஒரு அழகு தெரிந்தது. அந்த நாய்க்குட்டியின் பாசம் தெரிந்தது. ஆனால், வீட்டில் சிக்கன் சாப்பிடும், ஃப்ளூ க்ராஸ் அமைப்பிற்கோ அந்த நாயை கொடுமைப்படுத்துவதாக(!) தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். ஒன்று, கமல் பார்வையாளர்களை குழப்பி அதில் மீன் பிடிக்கிறார். அல்லது, அந்த பாத்திரத்தின் பார்வையில் படம் நகர்கிறது.
முதலில் “எ வெட்னஸ்டே” பாத்ததால் இயல்பாகவே “உ.போ.ஒ” பிடிக்கவில்லை. நஸ்ருதீன் ஷாவை போல் இல்லாமல் இங்கே கமல் தனியாக தெரிந்தார். ஞாநி சொல்வதை போல “என்னைப் பார், என் நடிப்பைப்பார் என்று ஒவ்வொரு பிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக் கொண்டு பல காலம் ஆகிறது”. இது தான் பிரச்சினையே. ஆனால் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு இது தான் தேவைப்படுகிறது. அதை கமல் பயன்படுத்திக் கொள்கிறார்.
“Mr. I.G.R.Maarar…I hope you are aware of the power of State of the art explosives…” – என்று அட்சரசுத்த ஆங்கிலத்தில் சொல்லும் பொழுதே அவர் காமன் மேன் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. இது கமல் தன்னை எல்லோரும் பாராட்ட வேண்டும் அன்ற மேனியாவில் மாட்டிக்கொண்டுள்ளார்.
ஆனால், வலைத்தளங்களில் பலர் பல விதமாக இந்த ஒரு படத்தை அலசியிருப்பது அதிகமோ என்று தோன்றுகிறது. தோன்றுவது என்ன. அதிகம் தான். சின்ன சின்ன விஷயத்தை கூட நோன்டி நோன்டி குறை சொல்லியிருப்பதை என்னவென்று சொல்ல? படத்தை படமாக பார்க்காமல் ஹீரோவுக்காக பார்க்கும் கலாச்சாரம் இன்னும் முடியவில்லை, தமிழ் மக்களிடம் என்பதையே இது காட்டுகிறது. இவர்கள் தான் விஜய்யையும், சிம்புவையும் நக்கலடிப்பவர்கள். ஆனால், கமல் படமென்றால் மட்டும் ‘கமல் படம்’ என்று பார்ப்பார்கள்.
கமலின் இந்த ஃபார்முலாவில் வந்த படம் தான் தசாவதாரம். அது தெரியாமல் தான் கலைஞரும், வீரமணியும் பாராட்டித் தொலைத்தார்கள். ஆத்திகத்தை வெளிப்படையாக கிண்டல் அடித்தாலும், புரிந்துகொள்ளா தெரியாத ரசிகர்கள் அதையும் ஒரு சாமி படமாகத்தான் பார்ப்பார்கள்.
ஒரு ரிப்போர்ட்டர் சிகரெட் பிடிப்பதாக காட்டியிருப்பதை கூட வக்கிரம் என்கிறார் ஞாநி. கமல் எந்த காரணத்திற்காக அந்த காட்சியை வைத்தார் என்று நமக்கு தெரியாது. ஒரு வேளை, பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதாக காட்டியிருப்பதால் பெண்கள் பல கட்டுபெட்டித்தனமான சட்டங்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்று காட்டுவதற்காக கூட அந்த காட்சியை வைத்திருக்கலாம். இவர்களாகவே அதற்கு ஒரு கற்பனை பிட்ட போடுறது (இப்போ நான் போட்ட மாதிரியே) என்ன நியாயம்? அந்த கம்ப்யூட்டர் பையன் என்ன ஜாதின்னு நான் நினைக்கவேயில்லை, அதை போன்ற புண்ணியங்களை ஞாநி போன்றவர்கள் தான் எற்றுக்கொள்கிறார்கள்.
இது ஒரு சாதாரண படம். இதை போய் அக்குவேறாக ஆணிவேறாக அலசி விளம்பரம் கொடுத்திருப்பது தேவையற்றது. இந்த தமிழகத்தில் எதையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கத்தெரியாத மக்கள் தொகை சற்றே அதிகமாக தெரிகிறது. அப்படியே இது ஒரு பிரச்சாரப் படமாக இருந்தாலும் அதற்கு எதுக்கு இவ்வளவு விளம்பரம்? நாமென்ன முட்டாள்களா? அது சரி! நைக் பேர் போட்ட டீ சர்ட்டை போடுறது கூட பேஷன் தானே. மறைமுகமாக நம்மை நைக் கம்பேனி விளம்பரமாக பயன்படுத்திக் கொள்வது கூட தெரியாத ஞான சூனியங்கள் நாம்.
“அங்கவை சங்கவை”யை கண்டிக்க மாட்டார்கள். ஏன்? ஹவாலா பணத்தை கை பாத்தி கொடுப்பது முஸ்லீம்கள் என்று பச்சையாகவே காட்டப்படுகிறது சிவாஜியில். எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் “இவனுங்க தானா இதயெல்லாம பன்னுறது?” என்று அப்பாவியாக புரிந்து கொண்டார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? காமென் மேனின் மனைவி “என்னது இன்ஷா அல்லாவா?”னு கேட்டால் உடனே கமல் தன்னை ஒரு முஸ்லீமாக காட்டிக் கொண்டார் என்று ப்ரேக்கிங் நியூஸ் போடவேண்டியது.
என்னை பொறுத்த வரையில் கமல் நம் எல்லோரையும் பயன்படுத்திக் கொள்கிறார். படத்தில் அவர் ஒரு காமன் மேன். ஆனால் உண்மையில் அவர் ஒரு பிஸினஸ் மேன். ஒரு வேளை நான் மேலே எழுதியிருப்பதை போல கமல் நினைக்கவில்லையென்றால்? கமல் என்னையும் சேர்த்து தான் முட்டாளாக்கியிருக்கிறார்
9 comments அக்டோபர் 14, 2009
அன்புத் தொகுப்பாளன் சூர்யா-வின் ‘நினைத்தாலே இனிக்கும்’
டெய்லி தூங்க நைட் மணி 12 ஆகுது. வேலை வேற. அதனால வீட்டுல இருக்கும் டி.வி.யில ஏதாச்சும் ஒரு சேனல் ஓடிக்கிட்டு இருக்கும். காமெடி இல்லைன்னா பாட்டு. சில நேரத்துல ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் நல்ல படம் போடுறாங்க. 11 மணிக்கு சன் டி.வி.யில் வரும் “அன்புத் தொகுப்பாளன் சூர்யா”-வின் ‘நினைத்தாலே இனிக்கும்’ நிகழ்ச்சி ஓடும். மனுஷன் நல்லாத்தான் நடத்துறார்…நிகழ்ச்சிய. ஏதாவது ஒரு கவுஜ அப்புறம் அவரோட தமிழ் உச்சரிப்பு. இது அந்த நிகழ்ச்சிக்கு நேயர் வட்டத்தை அதிகப்படுத்தியது. முக்கியமா பெண்கள்.
ஒன்று கவனிச்சதுல தெரிஞ்சது. போன் போடுறவங்க பெரும்பாலும், ம்ஹூம், எல்லாரும் பொண்ணுங்க/பொம்பளைங்க. “நாங்க பேங்களூர்ல இருந்து பேசுது”, “கோயமுத்தூருல மழை பெய்யுதுங்க”, “ப்ரோக்ராமு நல்லா கீது”, “சூர்யா நீங்க அழகா இருக்கீங்க”, “உங்க ப்ரோக்ராம பாக்கவே நாங்க முழிச்சிக்கிட்டு இருக்கோம்”-னு ஏகப்பட்ட போன் காலுங்க. சில நேரத்துல அதிகமா போச்சுதுன்னா (போன் கால) கட் பன்னிடறாங்க.
யோசிச்சு பார்த்ததுல, என்னடா பொம்பளைங்க மட்டுமே பேசுறாங்கன்னு தோனிச்சு. இது எதேச்சையா நடக்க சான்ஸே இல்லையே. அப்புறம்?
சரி! டெஸ்ட்டு பன்னித்தான் பார்ப்போம்னுட்டு நேத்து ஒரு கால் பன்னினேன். யூஸர் பிசின்னு வந்துச்சு. “கொஞ்ச நேரம் கழித்து டயல் செய்யவும்”ன்னு சொன்னாங்க. அவங்களே சொல்லிட்டாங்களேனு மறுபடியும் டயல் செஞ்சேன். அப்புறம் யாரோ ஒரு லேடி வந்து (இங்கேயுமா!) “உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது.”, அதனால, “லைனில் காத்திருக்கவும்”னு பிட்ட போட்டாங்க. இப்படியே ஒரு 10 நிமிஷம் போச்சு.
நடுவுல எஸ்.பி.பி. வேற “காதல் ரோஜாவே” பாடினார். அப்புறம் ஒரு “ஷார்ட் கமர்ஷியல் ப்ரேக்”. பத்து நிமிஷம் கழித்து ஒருத்தர் எடுத்தார்.
அவர்: “ஹலோ”
நான்: “ஹலோ”
அப்புறம் “டொய்ங்…”னு ஒரு பொன்னு சொல்லிச்சு. அடடா! “கால் போச்சே…”. என்ன பன்னலாம்?
சரி! இன்னொரு முயற்சி பன்னி பார்ப்போம்னுட்டு மறுபடியும் “போடுறா கால, என் டுபுக்கு”-ன்னு மனசுக்குள்ள இருந்த Id சொல்லிச்சு. Super Ego “வேண்டாம் மச்சான். பணம் வேஸ்ட்”-ன்னு சொல்லிச்சு.
வழக்கம் போல Id ஜெயிச்சுது. மறுபடியும் போன போட்டேன் சூர்யாவுக்கு, ம்ஹூம், சன் மியூசிக்கு.
மறுபடியும் அந்த பழைய ப்ராஸஸ் போச்சு. இந்த தடவ அதிக முன்னேற்றம். 18 நிமிஷம். காது சூடாக சூடாக “உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது”, அதனால, “லைனில் காத்திருக்கவும்”னு சொல்லிச்சு மறுபடியும் அந்த பொண்ணு. இந்த தடவ உஷாரா இயர் போன மாட்டிகிட்டேன். சீனுவா கொக்கா?
இந்த தடவ ரெண்டு பாட்டு, அப்புறம் ஒரு “ஷார்ட் கமர்ஷியல் ப்ரேக்”.
ஒரு வழியா பத்தொன்பதாவது நிமிஷத்துல (என் டெலிபோன் பில்லோட) ஒரு ஆபத்பாந்தவன் வந்து போன எடுத்தார்.
அவர்: “ஹலோ”
நான்: “ஹலோ”
அப்புறம் “டொய்ங்…”னு (மறுபடியும்) ஒரு பொன்னு சொல்லிச்சு.
அடப்பாவிகளா! இந்த நிகழ்ச்சி பெண்களுக்கும் / ஆன்ட்ஸ்களுக்குமா? சொல்லித் தொலைக்கக்கூடாதாடா. முப்பது ரூபா போச்சே…!!!
முப்பதோட ஒன்னு முப்பத்தொன்னு அப்படீன்னு கடுப்புல 58585-க்கு “ஏன்டா! இந்த எழவ சொல்லித் தொலைக்கக்கூடாதா? நேரமும் பணமும் பூடுச்சே”-ன்னு மனச் சாந்திக்கு ஒரு எஸ்.எம்.எஸ் போட்டு தூங்க போயிட்டேன். ஹூம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு feeling(s).
ஆனா ஒன்னு. நிச்சயமா எனக்கு சூர்யா மேல பொறமை இல்லைன்னு நீங்க நம்புறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
6 comments செப்டம்பர் 19, 2009
கொள்ளையடிப்பது ஒரு கலை…
இந்த வருட கோட்டாவாக என் தந்தையிடம் இந்த வித்தையை காட்டிய காவல் துறையினருக்கு என் வீர வணக்கங்கள். அதனால் இந்த மீள் பதிவு…
எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.
ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் ‘கார்டன் சிட்டி’ பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.
“நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)”-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. ‘சிறிய’ என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், ‘ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?”-ன்னு. “அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க”-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!
நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, “சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?”-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். ‘எப்படியும்’ திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.
(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா “வணக்கம் பாய்”-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு “இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?”. அது ஒரு தனி கூத்து…)
மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.
ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு ‘உக்காந்து யோசிச்சு’ இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்…16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி…
12 comments ஜூலை 22, 2009
ஒரு நிமிடக் கதை
இது “‘உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் போட்டிக்காக எழுதப்பட்டது.”
அடுத்த அடியெடுத்து வைத்தேன். ‘க்ரீச்’ மற்றும் ‘டமார்’. என் வலதுபக்க பக்கவாட்டில் இருந்து ஏதோ ஒரு பெரிய உருவம், மஞ்சள் நிறத்தில், என்னை நோக்கி மிக அறுகாமையில் வந்து மோதியது. மிக அருகில் வந்த போது தான் உணர்ந்தேன், அது ஒரு லாரி என்று. ரொம்ப தாமதம். இடது கையில் நுழைக்கப்பட்டிருந்த கெல்மெட்டை தாங்கியபடி, வண்டியை அப்போது தான் சாலை ஓரத்தில் பார்க் செய்துவிட்டு, வண்டியில் வைக்க முடியாததால், கையில் கொண்டுவந்திருந்தேன் அதை. மற்றும் என்னுடைய இடது கையில் கூலிங்க்ளாஸை மடக்கி பிடித்திருந்தேன். வலது கையில் இருந்த அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் சாலையை கடந்திருந்தேன். என்னை சுற்றி ஏகப்பட்ட சத்தம். எல்லோரும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடப்பது போல கத்தினார்கள். என்ன ஏது என்று சத்தம் வந்த திசைகளை நோக்கி திரும்பி பார்க்க நினைக்கையில், என் வலதுபக்க பக்கவாட்டில் இருந்து ஏதோ ஒரு பெரிய உருவம், மஞ்சள் நிறத்தில், என்னை நோக்கி மிக அறுகாமையில் வந்து மோதியது. மின்னல் வேகம் என்கிறார்களே. அது இது தான் போலும். அந்த சூழ்நிலையில் முன் வைத்த அடியை பின் வைக்க கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டது எல்லாம்.
சுத்தி இருந்தவர்கள் கத்தியது அதற்காகத்தான் என்று இப்பொழுது தான் விளங்கியது. வந்த வேகம் 60-70 இருக்கும். லாரி என் வலது பக்கம் இருந்து வந்தது. அது பழைய காலத்து லாரி. முன் பக்கம் இஞ்சின் பகுதி மட்டும் தனியாக தெரியுமே, அந்த மாடல் லாரி. வந்த வேகத்தில் கட்டுப்படில்லாமல் என் மேல் மோதியது. எங்கே மோதியது? என்னை அசால்ட்டாக தூக்கி வீசியது. லாரியின் முன்பக்கம் என்னை இடித்ததாலும், லாரி டிரைவர் இதை முடிந்தவரை தடுக்க முயன்றதாலும் சடாரென்று பிரேக் அடித்தார். ஆனாலும் என் மேல் மோதுவதை தவிற அவருக்கும், அவர் லாரிக்கும் வேறு வழி தெரியவில்லை. இஞ்சினின் உயரம் தாண்டி தலை இருந்ததால் தலையை தொடவில்லை லாரி. ஆனால், இடித்த வேகத்தில் தோளில் இருந்து தலை வலப்பக்கம் சாய்ந்து கழுத்தில் பயங்கரமாக நரம்பை வெட்டி பிடுங்கி வெளியே இழுத்தது போல் இழுத்தது. தலை முதல் கால் வரை என் உடம்பு ஒரு பெரிய “U” போல பக்கவாட்டில் வளைந்தது.
மோதிய வேகத்தில் என் உடம்பு பறக்க ஆரம்பித்தது. இடது கையில் இருந்த கெல்மெட்டும், கையில் இருந்த கூலிங்க்ளாஸும் ஒரு முறை லாரியின் மீது மோதி, கெல்மெட் பறக்க ஆரம்பித்தது. கூலிங்க்ளாஸ் உடைய ஆரம்பித்தது. சட்டைப்பையில் இருந்த சில வஸ்துக்கள் சிதற ஆரம்பித்தது. கண்ணில் அனிந்திருந்த கண்ணாடியும் என் முகத்தை விட்டு விலகியது. என் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் ஆளுக்கொரு பக்கம் சிதறினோம்.மற்றொரு கையில் இருந்த அலைபேசி கையை விட்டு விலக ஆரம்பித்தது. புதிய அலைபேசி. கிஃப்ட் வந்தது. 5 மெகா பிக்செல் காமெரா உள்ளது. அதற்காகவே பிடிக்கும். சில பிரச்சினை இருந்ததால் அதனை சர்வீஸ் செய்ய நந்தனம் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு வந்திருந்தேன். அலைபேசியை திரும்பி வாங்கி அதனை அவளுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தேன்.
என் கண்படும் தூரம் தாண்டி விழுந்தது அலைபேசி. கண்டிப்பாக இந்த சத்தங்கள் அவளுக்கு கேட்டிருக்கும். பதட்டப்பட்டுக்கொண்டிருப்பாள். வாயில் இருந்தும் தோள்பட்டையில் இருந்தும் வலி உணர ஆரம்பித்தது. அலைபேசி கீழே விழுந்த சத்தம் மெல்லிதாக கேட்டது. ஏற்கனவே மோதியதால் வலது பக்க தோள்பட்டையில் சொல்ல முடியாத அளவுக்கு வலி, இப்பொழுது என் உடம்பு கீழே விழ இடம் பார்த்துக் கொண்டிருந்தது. ஐயோ! கடவுளே!! இந்த நேரம் நான் மீண்டும் இன்னொரு வாகனம் மீது விழாமல் இருக்கவேண்டுமே! நல்ல வேளையாக விழப்போகும் இடம் சாலை. ஆனால், இன்னொரு வாகனம் என் மேல் ஏறாமல் இருக்கவேண்டும். மீண்டும் இடது தோள்பட்டை தரையில் படாமல் இருக்க வேண்டும். என் அதிர்ஷ்டம் எந்த வாகனமும் என் மேல் ஏறவில்லை. ஆனால், என் துரதிர்ஷ்டம் என் வலது பக்க தோள்பட்டையே மீண்டும் தரைவில் பட்டது. ம்கூம்…நொறுங்கியது. அம்மா…!!!
விழுந்ததும் அப்படியே விழவில்லை. தரையில் விழுந்ததும், விழுந்த வேகத்தில் உருள ஆரம்பித்தேன். முதல் முறை உருளும் போது தரையில் இருந்து மீண்டும் ஒரு அடி உயரே சென்று சுற்றிக் கொண்டிருந்தேன். பின் மீண்டும் விழுந்து, இரண்டாவது முறை, இம்முறை சற்றே தரையுடன் சேர்த்தே உருண்டேன். பின் தேர் நிலைக்கு திரும்பியது போல தரையில், வானத்தை பார்த்தபடி மல்லாக்க விழுந்து கிடந்தேன். முதம் முறை விழுந்து உருண்டதும், பின் மண்டை தரையில் ஓங்கி அடித்தது. அந்த அடி மூளை வரை எதிரொலித்தது. வெளியேறுவது ரத்தம் போல் இருந்தது. இடம் வலமாக ஒரு முறை தலையை ஆட்டி, உடம்பும் அசைவற்று கிடந்தது. எண்ணங்கள் மட்டும் இன்னும் செயல் இழக்கவில்லை போலும்.
தூரத்தில் அலைபேசி இன்னும் உயிரோடிருந்தது. கண்டிப்பாக எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கத்திக்கொண்டிருப்பாள் அவள். என் உடம்பில் பல இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. அடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியேரும் பொழுது வலி தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால், எழும்புகள் நொறுங்கியதால் வலிகளை பயங்கரமாக உணரமுடிந்தது. வலியில் கத்தலாம் என்று பார்த்தால், முடியவில்லை. வெறும் காத்து தான் வந்தது. எழ முயற்சித்தேன். முடியவில்லை. ஏதோ பாதி எழுந்து பின் விழுந்தது போல இருந்தது. ஆனால், என்னால் ஒரு அங்குலம் கூட நகர / அசைக்க முடியவில்லை என்பது மட்டும் நிஜம். கை கால்கள் இருகிப் போய் வெறும் பார்சல் போல கிடந்தேன். யாராவாது அப்புறப்படுத்தினால் மட்டுமே உண்டு.
அவசர மருத்துவ செலவுக்கு கம்பெனி பணம் கொடுக்கும். விபத்து இன்சூரன்ஸ் எடுத்தாயிற்று. 4 லட்சம் வரை பார்த்து கொள்ளலாம். ஆனால், அவளை தனியாக விட்டு விடுவேனோ என்ற பயம் தொற்றிகொண்டது. மகளை ஸ்கூலிலிருந்து கூட்டி வர வேண்டும். அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது. யார் போய் அழைத்து வருவார்கள்? அம்மா மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தாள். அவளுக்காக வாங்கி வைத்த கடிகாரம் பேன்ட் பாக்கெட்டில் இருந்தது.
சுற்றி நடப்பவை பார்க்க முடியவில்லை. ரத்தம் நிறைய வெளியேறிவிட்டதால் மயக்கம் வருவது போல இருந்தது. பார்வை மங்குகிறது. ஏதோ நிழல்கள் எதிரில் ஆடுவது போல இருந்தது. சுற்றி கேட்ட சத்தங்களில் ஒரு குழந்தை வீறிட்டு அழும் சத்தம் மட்டும் லேசாக கேட்டது. அந்த சத்தமும் கரைந்தது. கேட்கும் திறன் குறைகிறதா, மயக்கத்தினால் கேட்கவில்லையா அல்லது அம்மா அந்த குழந்தையை தூரத்தில் கொண்டு செல்கிறாளா? தெரியவில்லை.
சிலர் என்னை தூக்க முயன்றார்கள். யாரோ என்னை நெருங்கி வந்து வாயில் தண்ணீர் ஊற்றினார்கள். அதனை விழுங்க முயற்சித்தேன் முடியவில்லை. மற்றொருவர் என் சட்டை பையில் துழாவினார். இன்னொருவர் நொருங்கி கிடந்த என் செல்போன எடுத்து யாருக்கோ நம்பரை தேடிக் கொண்டிருந்தார். அவளுடைய நம்பரை அவருக்கு கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது. ‘யாராவது ஏதாவது செய்யுங்கள். அல்லது சீக்கிரம் சாகவிடுங்கள்’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது. வலி அப்படி.
ஆம்புலன்ஸுக்கு போன் போயிருக்கும். எனக்கு நம்பிக்கை இல்லை. ஆம்புலன்ஸ் வர எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும். நானாக எழுந்து மருத்துவமணை சென்றால் தான் உண்டு. கொஞ்ச நேரம் பார்த்து, கொஞ்ச நேரம் என்றால் 4-6 வினாடி, எனக்கு உடல் முழுவதும் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. வெட்டி வெட்டி இழுக்குமோ என்று தெரிந்தது. இன்னும் எத்தனை நேரம் இந்த அவஸ்தைகளை அனுபவிக்கவேண்டுமோ தெரியவில்லை.
மனதின் ஓரம் பிழைத்துவிடுவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அது ஏனோ, ஒரு அசையாத நம்பிக்கை. ஒரு வேளை காயங்கள் மரண காயங்களாக இல்லாமல் இருப்பது போன்ற உணர்வுகள் காரணமா? தெரியவில்லை. ஆனால், பிழைத்து விடுவேன். சில விஷயங்களில் எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு. அது போல தான் இதுவும். சாக மாட்டேன். சில கடமைகள் வேறு பாக்கி இருக்கிறதே. ஒரு வேளை, விபத்தென்றால் என்ன என்று நான் அறிய கடவுள் இந்த சூழ்நிலையை கொடுத்தானா? அதுவும் தெரியவில்லை. ஆனால், நம்பிக்கை. பிழைத்து விடுவேன் என்று தோன்றியது.
ஒரு வேளை, பிழைக்காமல் போனால்…? அது மட்டும் பயம் கொடுத்தது.
ரத்தம் வெளியேறியதால், எனக்கு மயக்கம் வந்துகொண்டே இருந்தது. இன்னும் சில மைக்ரோ வினாடிகளில் மயக்கம் போட்டுவிடுவேன். மீண்டும் கண் திறக்கும் போது கண்டிப்பாக ஆஸ்பத்திரியில் இருப்பேன். வலிகள் மறத்துப் போனது போல் இருந்தது. உடம்பு மறத்துக் கொண்டே வந்தது. கண்கள் சொருக ஆரம்பித்தது. வேகமாக மயங்க ஆரம்பிக்..கி…
5 comments ஜூன் 20, 2009
பெங்களூர்வாசிக்கு ரத்தம் தேவை: ஒரு நாளைக்கு 10 யூனிட், ஒரு வாரத்திற்கு
We kindly request you to donate Blood of any Blood group registering in Name of Ramnath T J in Manipal Hospital. Note: If you do not mention name Ramnath TJ, it goes to general donor. Please do not forget to mention the patient Name –Ramnath தஜ்
மேலும் விவரங்களுக்கு…கீழே…
“Kishorekumar SN”
12/01/2008 03:35 PM
To
Krittenaswamy Srinivasan/COV/CSC@CSC
cc
Subject RE: Request for Blood Donations for our Friend Ramnath TJ
Hi Srinivasan,
Could you please circulate this or put on your blog. URGENT Blood donations for one of my friend.
The person who’s co-ordinating for the blood donors as follows:
Raghavan: 99003 82120
Raja:98865 96452
Regards,
~Kishore
From: Raghavan Kuppusamy SN, EAS-Chennai
To: ’soanmw-all@hcleai.com’
Subject: Blood donors !!
Dear Friends,
One of my friend, T.J. Ramnath who is undergoing for blood transfusion at Manipal Hospital, Old airport road, Bangalore.
He requires 10 blood units per day for about a week. (Any blood group, hospital will exchange for his blood group).
Those who are interested in blood donation, please get in touch with me @ 9900382120.
Please Help.
Thanks
Raghav
From: T.K.S., GEETHANATH (Cognizant)
Sent: Monday, December 01, 2008 11:54 AM
Subject: FW: Request for Blood Donations for our Friend Ramnath TJ
Hi Friends
One of my dear friend like you in need of blood. he is admittted in manipal hospital.
see if you can donate blood as per below details. even if you can’t, pl pass on the message to your friends/colleagues if u can.
Kindly treat this email as URGENT and do help
regards,
Geethanath
Sun, 11/30/08, Dwarakanath KLSD wrote:
> From: Dwarakanath KLSD
> Subject: Request for Blood Donations for our Friend Ramnath TJ
> To: “Rubesh Babu” , “Tapas Babu” , “Vinutha Babu” , “Paramesh Babu” , balaji.vellapu@delphi.com
> Date: Sunday, November 30, 2008, 12:01 AM
> Dear Friends and Colleagues,
>
> My Friend Ramnath T.J is admitted in Manipal Hospital
> Bangalore and he is undergoing Plasma Treatment, so he needs
> 10 blood donors per day for about a week.
>
> We kindly request you to donate Blood of any Blood group
> registering in Name of Ramnath T J in Manipal Hospital.
> Note: If you do not mention name Ramnath TJ, it goes to
> general donor. Please do not forget to mention the patient
> Name –Ramnath TJ
>
> If your interested in donating, Please sms or call us at
> 9986021364 (Devi) or 9448242092 ( Dwarakanath Babu ),
> alternately contact Manipal Blood Bank – 080- 2502 4224/2502
> 4357
>
>
> Pre- Requisite for Donating Blood.
>
> 1) Should not have consumed Alcohol Previous Night.
> 2) Should not have taken Antibiotics before 24 hours.
> 3) Should have slept well the previous night.
>
> Please forward this message to your friends and Collegues.
>
> Thanks in Advance.
> Dwarakanath Babu
Add comment டிசம்பர் 4, 2008
முதலில் மீடியாவை தாக்கித் தொலையுங்கள்
கடந்த 40 மணிநேரமான என்.டி.டி.வி-யும், எச்.டி-யும், சி.என்.என் -ம், டைம்ஸ் நவ்-ம் செனையை விடவும் அதிகமாக சந்தோஷ மழையில் நனைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தான் அல்வா போல செய்திகள் கிடைத்திருக்கிறதே. தேங்க்ஸ் டு சிவராஜ் பாட்டீல் அன்ட் தேர் வொன்டர்ஃபுல் டீம். இந்த நான்கு பிரதான சேனல்களின் டிஆர்.பி ரேட்டிங் எங்கோ போயிருக்கும். இரண்டு விடுதிகளிலும் இருக்கும் தீவிரவாதிகளுக்கு தான் யாருக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற குழப்பம் அதிகம். சிவராஜ் பாட்டீலுக்கு மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்தவர்கள், இப்பொழுது இந்த மேற்கூறிய நான்கு சேனல்களுக்கும் நன்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம். துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு கையை பிசைந்து கொண்டிருப்பார்களோ என்னவோ (டெலிகேட் பொசிஷன்)!!
காரணம், 100+ உயிர்களை எடுத்தவர்களுக்கு போனஸாக சில பல கமாண்டோக்களில் உயிரையும் இலவசமாக கூட்டிக் கொடுத்திருகின்றார்களே, சாரி, காட்டிக் கொடுத்திருகின்றார்களே! இவங்க அவங்க லிஸ்ட்லயே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், நிமிடத்திற்கு ஒரு முறை என்ன நடக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்ற போர்வையில் அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அப்படியே அள்ளிக் கொண்டு தீவிரவாதிகளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். உள்ளே இருப்பவர்களுக்கு என்ன டி.வி. பார்க்கவே முடியாதா? என்.எஸ்.ஜி-க்கள் சாப்பர் மூலமாக மேல் தளத்தில் இறங்குவதை அப்படியே உயிருடன் ஒளிப்பரப்பி இவர்களை சாகடிகிறார்கள். உள்ளே இருப்பார்களால் இந்த காட்சியை பார்த்து தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாதா என்ன? தாங்கள் காமான்டர்களால் சூழப்பட்டுவிட்டோம் என்று தெரிந்ததும் உள்ளே இருப்பவர்களை கொல்ல ஆரம்பித்து, ஹோட்டலையே தகர்க்க ஆரம்பித்துவிட்டதாக் செய்திகள் தெரிவிக்கின்றன. தினமணியிலும் இன்றைய முதல் பக்கத்தில் இதனை மேற்கோள் காட்டியிருக்கிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இதற்கு காரணம் நிச்சயம் மீடியாக்கள் மட்டுமே. இதுவும் ஒருவகையில் கொலை முயற்சி தான். இந்த சேனல்களை தடை செய்தால் தான் என்ன? பிணத்தை சுற்றிலும் ஓலம் இடும் பரதேசிகள்.
மூன்றே மாதம் கூட நிரம்பியிராத குழந்தையை அனைத்துக் கொண்டு, உயிர் பிழைத்து வந்த ஒரு வெளிநாட்டவரிடம் “ஹவ் டு யு ஃபீல் நவ்?” என்று கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர். அவர் அந்த பத்திரிகையாளரை மற்றொரு கையால் தள்ளிவிட்டு சென்று காரில் ஏறினார். இது கேவலத்திலும் கேவலம். இனி இந்த நாட்டுக்கு வரமாட்டார் போல. கையெடுத்து கும்பிட்டு போனார். மற்ற நாட்டு பத்திருக்கையாளர் இந்த விஷயத்தில் மிக மிக கண்ணியமாக நாடந்து கொள்வர். இதை போன்ற நபர்களை கேள்விகளால் சாக அடிக்க மாட்டார்கள். இந்த கண்ணியம் கூட இந்த நான்கு தொலைகாட்சி நிருபர்களிடமும் இல்லை. செத்துப் பிழைத்தவர்களிடம் போய் கேட்கும் கேள்வியா “ஹவ் டு யு ஃபீல் நவ்?”. கேட்டவரின் உறவினர் இதே போல மாட்டிக்கொண்டு தப்பித்தால் கேட்கட்டும் “ஹவ் டு யு ஃபீல் நவ்?” என்று.
யாரோ ஒருவர் கையில் வெள்ளை துணியை காண்பித்தார், ஹோட்டலின் ஒரு ஜன்னலுக்கு உள்ளே இருந்து கண்ணாடி வழியாக. அவர் யாரென்று கூட தெரியாது. அடுத்த நிமிடம் எச்.டி-யில் வந்த பிரேக்கிங் நியூஸ், தீவிரவாதிகள் சரணடைய விருப்பம் தெரித்துள்ளனர் என்று. ஆனால், இன்று வரை தீவிரவாதிகள் சரணடைவதாக தெரியவில்லை. கடைசிவரை இந்த பிரச்சினையை இழுத்தடித்து தங்களின் பராக்கிரமத்தை காட்டவே விரும்புகின்றனர். முடிவு அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவர்களுக்கு தேவையெல்லாம், முடிந்த அளவு சேதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.
நேற்று ரீடிப் தளத்தில் தாஜ் ஹோட்டல் ஜி,எம். குடும்பத்துடன் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டதாக தலைப்பு செய்தியாக வந்தது. பின் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த செய்தியை காணோம். எங்கே போனது? ரீடிபுக்கே வெளிச்சம். (பிற்சேர்க்கை: தாஜ் ஹோட்டல் ஜி,எம். குடும்பத்துடன் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டது உறுதிசெய்யப்பட்டது). But still he is at work (Updated @ 1:44 PM 11/29/2008).
இபடிப்பட்ட ஆர்வக்கோளாறுகள் என்.டி.டி.வி முதல் இட்லி வடை உள்ளது (வலைப்பதிவர்கள் மீட்டிங்கை ஆர்வக்கோளாரினால் ஃபோட்டோ போட்டு வாங்கிகட்டிக் கொண்டது போல).
பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று இருந்ததே, எங்கே போனது?
அதனால் தான் சொல்கிறேன், தீவிரவாதிகளை விட, முதலில் இந்த மீடியாவை தாக்குங்கள்.
பிற்சேர்க்கை
ஆரம்பித்துவிட்டது அரசியல்
Mumbai attacks won’t affect Congress prospects: Sheila
New Delhi, November 28, 2008
As Delhi readies itself for polls on Saturday, the overwhelming question at the Congress office is whether the Mumbai terror attacks will affect the party’s prospects. Delhi CM Shiela Dikshit maintains that it won’t.
As she told her aides this morning when the question came up over breakfast, “This is not like Kandahar where the terrorists were freed. Here, decisive action was taken.” The BJP scoffs at this as bravado and maintains that Mumbai was the last nail in the coffin of a government that will be buried at the hustings largely because of its poor record on terror.
And that the effect of this will be felt at the assembly level as well, particularly Delhi where law and order is not a state subject. Unfortunately neither the Prime Minister nor the Home Minister have been very reassuring on their statements on terror. However, on the last day of the campaign, terror has replaced development on the agenda for the Delhi polls. The allegations are somewhat predictable.
The BJP has already made terror its plank even at the local assembly level and attacked the Congress for sitting on Afzal Guru’s file. The party’s chief ministerial candidate VK Malhotra told India Today that one of the first things he would do if he takes over as chief minister would be to sign the file that okays the hanging of Afzal Guru.
The Dikshit camp for its part was quick to embarrass the BJP for its U-turn on ‘hindu terror’ with slogans like: “Mumbai mein shaheed huye ATS chief Karkare ko kal tak deshdrohi kehne wali BJP ko kya hum vote de payenge ?” The rhetorical bravado aside, the Delhi Congress is worried that the Mumbai attacks could affect its urban votebank.
The BJP ofcourse will try and make the UPAs track record on terror an issue at the polls tomorrow. What may save the Congress is the fact the rather uncharacteristic swift and decisive action taken in Mumbai. For the first time in India’s history there were no negotiations with the terrorists.
This is the image that Delhites will take to the polls tomorrow. By the time the secuirty lapses come to light, and the Central government is exposed for its intelligence failure, the Delhi polls will be over. This is the only factor that may save Dikshit from losing out on the terror plank tomorrow.
5 comments நவம்பர் 28, 2008
சீனச்சிரிப்பும் சில ஜோக்ஸும்…
ஒரு சீன படத்தில் (Wheels on Meals) பார்த்த மனநோய் மருத்துவமனை.
ஜாக்கியும் அவன் நண்பனும் அவன் நண்பனின் தந்தையை பார்க்க அந்த மனநோய் மருத்துவமணைக்கு வருகிறார்கள்.
வரும் வழியில் ஒருவன் இடம் வலமாக தலை சாய்த்து சாய்த்து வருகிறான்.
நபர் 1: டிங்…டாங்…டிங்…டாங்…டிங்…டாங்…
ஜாக்கி: என்ன பன்னுற?
நபர் 1: நான் கடிகாரம். சரியான நேரத்தை சொல்லுவேன்.
ஜாக்கி: அப்படியா? இப்போ மணி என்ன?
நபர் 1: இப்பொழுது மணி 2:30
ஜாக்கி: இல்லை. இப்போ மணி 2:45.
நபர் 1: ஆ! அப்போ நான் ஸ்லோவா போறேனா. (வேகமாக) டிங்.டாங்.டிங்.டாங்.டிங்.டாங்.
உள்ளே செல்ல அங்கே அவன் நண்பனின் தந்தை ஒரு சிறு கிண்ணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருக்கிறார். கவனிக்க, அப்பா எப்பவுமே முகத்துல ஒரு சீரியஸ்னஸோட தான் பேசுவார், மிலிட்டெரி மேன் மாதிரி.
ஜாக்கி: என்ன செய்றீங்க?
அப்பா: ஷ்…சத்தம் போடாத. சத்தம் கேட்டா மீன்கள் ஓடிடும்.
அங்கே பின்னால் ஒருவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.
ஜாக்கி: அவன் என்ன பன்னுறான்?
அப்பா: அதுவா? அவன் எப்பவுமே தனக்குத்தானே ஜோக் சொல்லி சிரிச்சிக்குவான்.
திடீரென்று அவன் முகம் சுழிக்க…
ஜாக்கி: இப்போ என்ன பன்னுறான்?
அப்பா: அந்த ஜோக் அவன் ஏற்கனவே கேட்டிருக்கான். அதனால அவன் அழுவறான்.
அப்பொழுது அந்த கடிகார ஆள் அங்கே வந்து ஆ-னு கத்த (அலார ஒலி)…அப்பா அவன் தலையில் தட்டி (அலாரத்தை நிறுத்தறாராம்)
அப்பா: ஆ! மணி மூனு ஆயிடுச்சா. எனக்கு வேற வேலை இருக்கு.
என்று சொல்லி அங்கிருந்து நகருகிறார்.
“எதுக்குடா அவன அடிச்சே”
“ஆறு வருஷத்துக்கு முன்ன என்ன தேவாங்குன்னு சொன்னான்”
“அதுக்கு இப்போ ஏன் அடிக்கிறே?”
“நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்…”
“தலைவர் இப்போ சின்ன வீட்டுல இருக்கரு”
“எப்படி சொல்ற?”
“நீங்கள் டயல் செய்த என் தற்சமயம் ‘லைட் ஆஃப்’ செய்யப்பட்டுள்ளது’ன்னு சொல்லுதே…”
“அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழறே?”
“உங்கள் மாதிரி என்னால அடி தாங்க முடியாது”
“லோன்ல மாடு வாங்கிட்டு, கட்டாம போனா என்ன ஆகும்ன்னு தெரியுமா?”
“தெரியும் ஐயா…மாடு தொலஞ்சிடும்”
“என்ன…நம்ம செல் ரிங் ஆனதும் தடார்ன்னு கீழ வெச்சுட்டு விழுந்து கும்பிடுறாரு?”
“வந்திருக்கிறது தலைவரோட கால். அதான்”.
“அந்த தொழிலதிபர் கிட்ட நான் 30 லட்சம் வாங்கியிருக்கிறதா எதிர்கட்சிக்காரங்க சொல்றாங்களாமே?”
“விடுங்க தலைவரே! அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்…”
“யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பகூடாது…ஏன்னு கேள்வி கேட்கணும்…”
“ஏன்?”
மன்னர்: “யாரங்கே?”
குரல்: “யாருமில்லை…”
போலீஸ்: “ஏண்டா குடியிருந்த வீட்டுக்காரரை கொலை பன்னினே?”
கொலையாளி: “அவர்தான் அடிக்கடி காலி பன்னுன்னு சொன்னார் எசமான்…”
“சிஸ்டர். அந்த பேஷன்ட் எப்படி செத்தாரு?”
“நீங்க கிட்னி எடுத்தது தெரியம, நானும் ஒரு கிட்னியை திருடிட்டேன் டாக்டர்”
“நேத்து ராத்திரி உங்கள ஒரு திருடன் வந்து அடிச்சிருக்கான். ஏன் கத்தவேயில்ல?”
“வழக்கம் போல என் மனைவி தான் அடிக்கிறான்னு அமைதியா இருந்துட்டேன் இன்ஸ்பெக்டர்”
ஆசிரியர் : மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவன் : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
“‘இது எதிர்கட்சியோட சதி’-ன்னு சொல்றாரே தலைவர், எதற்கு?”
“‘உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு தலைவரே’-ன்னு சொன்னேன்”
SMS தத்துவம்
தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம், ஆனா, தூங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்லமுடியுமா?
கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?
கண்டக்டர் தனித்தனியா டிக்கெட் கொடுப்பார். டிரைவர் மொத்தமா டிக்கெட் கொடுத்திடுவார்.
எறும்பு நெனச்சா யார் காதை வேணும்னாலும் கடிக்கலாம்; ஆனா யார் நெனச்சாலும் எறும்பு காதை கடிக்க முடியாது.
ஒரு எறும்பு நூறு யானையை கடிக்கும். ஆனா, நூறு யானைங்க சேர்ந்தாலும் ஒரு எறும்ப கடிக்கமுடியாது.
“எங்க கட்சித்தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடத்துன கூட்டத்துல கைகலப்பாயிடுச்சு…”
“அடடே…அப்புரம்?”
“வேட்டியின்றி தேர்ந்தெடுக்கவேண்டியதாப் போச்சு”
“என்னய்யா இது…நடைபாதைல நின்ன பயணிகள்லாம் திடீட்னு தண்டவாளத்துல இறங்கி நிக்குறாங்க…!?”
“பின்னே. இரயில் 2வது நடைமேடைக்கு வரும்னுல்ல அறிவிச்சாங்க…!?”
“ஜோசியரே! நான் கபாலி பொண்ணை காதலிக்கிறேன். கை கூடுமா?”
“ம்ஹூம்! குறையும்!”
“ஆபரேஷன் பண்ணும் போது டாக்டர்கள் முகமூடி போட்டுக்கறாங்களே, ஏன்?”
“அதுவா? கிட்னி திருடினது யாருன்னு அடையாளம் தெரியாம இருக்கிறதுக்குத்தான்!”
“தலைவரே! அறிக்கை விடும் போது கொஞ்சம் கவணிக்க கூடாதா?”
“ஏன்?”
“உங்களை திட்டி நீங்களே அறிக்கை விட்டுட்டீங்க”
“ஜாக்கட்ல கையவிட்டு பர்ஸ எடுக்கிற வரை என்னம்மா பண்ணிகிட்டு இருந்த?”
“அந்த படுபாவி பர்ஸத்தான் எடுக்கறான்னு எனக்கெப்படி தெரியும் இன்ஸ்பெக்டர்?”
“நம்ம கதாநாயகன் நூறடி உயரத்துல இருந்து டூப் போடாம நானே தான் குதிப்பேன்னார்…”
“டைரக்டர் என்ன சொன்னார்?”
“அந்த ஷாட்டை மட்டும் கடைசியா எடுத்துக்கலாம்னு சொல்லிட்டார்”
பிற்சேர்க்கை:
“கடத்திட்டு வந்த பொண்ண இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கல பாஸ்”
“ஏன்டா?”
“செல்போன்ல யாரோடவோ நிறுத்தாம பேசிகிட்டே இருக்கா…”
“தோசைய ஆர்டர் பன்னிட்டு ஏன் சார் அவசரப்படுறீங்க?”
“அதுக்குள்ள விலை ஏறிடுமோங்கிற பயம் தான்…”
“ராத்திரியானா அந்த கோயில் மண்டபத்துல யாரும் படுத்துக்க மாட்டாங்க”
“ஏன்?”
“அங்க இருக்கிற யானைக்கு தூக்கக்துல நடக்குற வியாதி இருக்காம்…”
“முன்ன பிரசவதுக்கு வந்தா குழந்தை தான் மாறும்”
“இப்ப?”
“பொன்டாட்டியே மாத்தி அனுப்பறாங்க…”
“தலைவர் பிறந்த நாளுக்கு எடைக்கு எடை என்ன கொடுத்தாங்க?”
“உடம்பு பூரா வியாதிங்கறதுனால எடைக்கு எடை மாத்திரையா கொடுத்திட்டாங்க”
“மயக்கம் போட்டு விழுந்த தலைவர், கண்முழிச்சதும் என்ன கேட்டார்?”
“இப்போ நான் எந்த கட்சியில இருக்கேன்னு கேட்டார்…”
“அந்த டைரக்டர் கேட்டாருங்கிறதுக்காக அவரோட படத்துல நீங்க நடிச்சிருக்கக்கூடாது தலைவரே!”
“ஏன்யா…?”
“இப்ப பாருங்க…’இதுவரை தொகுதிப் பக்கமே தலை காட்டாதவர், எங்கள் படத்தில் தலையைக் காட்டிடுள்ளார்’னு விளம்பரம் பண்றாங்க…!”
“நான் அஞ்சு வயசுலயே அரசியலுக்கு வந்தவன்னு தலைவர் சொல்றாரே…?”
“அவர் படிக்காதவர்ங்கறதை சூசகமா சொல்றாரு…!”
“என் மனைவி ரொம்ப நல்லவ”
“அப்புறம் ஏன் ரெண்டாவது கல்யாணம் பன்னிகிட்ட?”
“அவ நல்லவன்னு ரெண்டாவது கல்யாணம் பண்ண பிறகு தான தெரிஞ்சது…”
“என்னது உங்க பேரு ‘நல்ல காலம்’மா?
“ஆமாம். எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு ‘நல்ல காலம் பொறக்குது…நல்ல காலம் பொறக்குது’ சொன்னப்போ நான் பிறந்தேனாம்…”
ஆற்காடு வீரா’ஸ்’வாமி ஸ்பெஷல்…
“நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”
“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”
“இன்னும் எங்க கிராமத்துக்கு மின்சாரமே வரலைன்னு புகார் கொடுக்கலாம்னு வந்தேன். ஆனால், இங்கேயும் மின்சாரம் இல்லையாமே?”
“கொழந்தை பொறந்துடுச்சு. ஆணா, பெண்ணானு கரன்ட் வந்தப்புறம் தான் சொல்லமுடியும்”
பிறந்த குழந்தை: “என்னடா இது. நான் பொறந்துட்டேன்னு நர்ஸ் சொல்லிச்சு. ஆனா, வெளியிலையும் ஒரே இருட்டா இருக்கே…!”
8 comments நவம்பர் 3, 2008
விகடன்ல வாங்கிட்டோம்ல ஒரு ‘கிராம்’ தங்கம்… :)
விகடன்ல வாங்கிட்டோம்ல ஒரு ‘கிராம்’ தங்கம்…
இது ஒரு சுயதம்பட்ட பதிவு. புதுப்பொலிவில் வெளிவரும் ‘All new யூத்ஃபுல் விகடன்’-ன் சில வார இதழ்களில் அறிவித்திருக்கும் பரிசுக்குறிய / பரிசு இல்லாத போட்டிகளில், நான் எழுதிய சிலவற்றை அனுப்பினேன். அதில் இருமுறை நான் எழுதி அனுப்பியவை தேர்வாகியுள்ளது. இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காக்கைக்கும் தன் குஞ்சு (ஒரு கிராம்) பொன் குஞ்சு அல்லவா?
விகடன்ல இருந்து தொலைபேசி வந்தது, ‘வந்து பரிசு வாங்கிக்கங்க’ன்னு. இன்னைக்கு போய் வாங்கிட்டு வந்துட்டோம், விகடன் தாத்தா படம் அச்சிட்ட தங்க நாணயம் கே.சீனிவாசனிடம் கொடுத்தார் விகடனின் கே.சீனிவாசன்.
கீழே உங்கள் பார்வைக்கு…
இதழ்: 03-செப்-2008
பக்கம்: 87
<span style='font-size:10.0pt;font-family:TheneeUni; color:#0073C2′>கே.ஸ்ரீனிவாசன், சென்னை மை மெயில்! <span style='font-family:TheneeUni; color:#9E0000′>நீங்கள் சென்னைவாசியாக சில உபயோக டிப்ஸ்!
|
இதழ்: யூத்ஃபுல்.விகடன்.காம்
சென்னை வாசிகளே… பார்த்து போங்கப்பா..! <span style='font-size:10.0pt; font-family:Latha’> -கே.சீனிவாசன், சென்னை. இரவு சுமார் 11:30 அளவில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பி கொண்டிருந்தேன். மீனம்பாக்கம் விமான நிலையம் தாண்டி பழவந்தாங்கல் சிக்னல் அருகே வண்டி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எங்கள் வண்டியை வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் ஒன்று ஓவர் டேக் செய்தது. வழக்கமாக இப்படி இன்னொரு வண்டி ஓவர் டேக் செய்யும் பொழுது என் வண்டியின் வேகத்தை கணிப்பேன். எங்கள் வண்டி 80 காட்டியது. அந்த கார் எப்படியும் 110-க்கு மேல்தான் சென்றிருக்க வேண்டும். எங்களை மட்டுமல்ல… முன்னால் சென்ற எல்லா வண்டியையும் ஓவர் டேக் செய்துகொண்டுதான் சென்றது. எங்கள் வண்டிக்கு முன்னால் பாறைகளையும் ஜல்லிக்கற்களையும் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அதையும் ஓவர் டேக் செய்ய முயன்றது அந்த ஸ்விஃப்ட் கார். அப்போது இடதுபுறத்தில் இன்னொரு கார். இடையில் வெகு சில இடைவெளி மட்டுமே. ‘இந்த நேரத்தில் ஓவர் டேக் செய்கிறானே, அந்த கார் சற்று வலப்புறம் வந்தாலும், அந்த லாரி சற்று இடப்புறம் வந்தாலோ என்ன ஆவது?” என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அந்த இரு வண்டிகளுக்கு இடையில் புகுந்து ஒருவாறு சென்றுவிட்டது அந்த மாருதி ஸ்விஃப்ட். இந்த நேரத்தில் மாருதி ஸ்விஃப்ட் 100-லும், அதன் பின்னால் அந்த லாரி 80-லும் அந்த வண்டியின் பின் 5 – 8 மீட்டர் இடைவெளியில் 80-ல் எங்கள் வண்டியும் சென்று கொண்டிருந்தது. இப்பொடுது சரியாக பழவந்தாங்கல் சிக்னலில் சிகப்பு விழுந்தது. அந்த மாருதி ஸ்விஃப்ட் சிக்னல் அருகில் வரும்போது தான் சிகப்பு விழுந்தது. ஆனால் அவன் சிக்னலை கடந்து விட்டான். கடந்தவன் சென்றிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ… சடாரென்று ப்ரேக் அடிக்க வண்டி செம கன்ட்ரோல் போல, அப்படியே நின்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத லாரியின் ஓட்டுனர், மாருதி ஸ்விஃப்டின் மிக அருகில் சென்று அதன் மேல் மோதாமல் தவிர்க்க வண்டியை வ்லது பக்கமாக ஒடித்தார். அப்பொழுது சாலைக்கு நடுவில் 2 அடி உயர சுவர் மேல் வண்டியின் வலது பின்புறம் பயங்கர சத்தத்துடன் மோதியது. இந்த மோதலில் வண்டி நிலை தடுமாறி வலது பக்கம் சாயத் தொடங்கியது. ஓட்டுனர் சுதாரித்து சடாரென்று இடது பக்கம் ஒடிக்க, ஷங்கர் படத்தில் வருவது போல தடாரென்று நிலைக்கு வந்தது. துணியை பிழிந்தால் எப்படி துணியின் முன் பக்கம் ஒரு பக்கமாகவும், பின் பக்கம் இன்னொரு பக்கமாகவும் முறுக்குமோ அப்படி இருந்தது லாரி. இந்த களேபரத்தில் அந்த மாருதி ஸ்விஃப்ட் ஒரு கீரல் கூட விழாமல் எஸ் ஆனது. லாரி கடைசியில் நிலைக்கு வந்து ஓரமாக நின்றது. எனக்கு பக்கத்தில் மற்றொரு காரில் வந்த வட மாநிலத்தவர் அந்த ஓட்டுனரை பார்த்து இந்தியில் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டிருந்தார். நான் மாருதி ஸ்விஃப்ட் செய்த தவறு என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்கு அவர், ‘இவன் சிக்னலுக்கு நிறுத்தியிருக்க வேண்டும் இல்லையா?’ என்று கேட்டார். நியாயம்தான். அப்புறம் தான் தெரிந்தது, லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சிக்னலுக்காக ஒருத்தர் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த சுவற்றை தாண்டி வலது புறம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார். லாரி சுவற்றில் மோதிய இடத்தில் சில அங்குல இடைவெளியில் தான் அவர் நின்றுகொண்டிருந்திருக்கிறார். அவர் மட்டும் ஒரு அடி பின்னே நின்றிருந்தாலும் சட்னி தான். இங்கே தவறுகள்,
இதில் பாவப்பட்டவர் என்று பார்த்தால் அங்கு சிக்னலுக்காக நின்றிருந்தவர் தான். அவரும் வேறு ஏதாவது சிக்னல் ஜம்ப் செய்திருப்பார் என்பது வேறு விஷயம். ஆனால், அன்று அவர் உயிர் பிழைத்தது பெரிய அதிஷ்ர்டம்தான். தவறு செய்தவர்கள் அந்த மாருதி ஸ்விஃப்டும், லாரியும். ஆனால் அவர்கள் சேஃப். பிழைத்தவர் அதிர்ச்சியில் வண்டியை அப்படியே போட்டுவிட்டு பேந்த பேந்த விழித்துகொண்டிருந்தார். (அவரால் வேறு என்ன செய்ய முடியும்?). இவர் மட்டும் என்னவாம்.? கோட்டை தாண்டி அந்த சுவற்றுக்கு முன்னேதான் நின்று கொண்டிருந்தார். ஆனால் அப்படி நின்றதால்தான் அவர் பிழைத்தார். ஒரு வேளை ரூல்ஸ் பேசிக்கொண்டு கோட்டின் அருகிலேயே நின்றிருந்தால் சட்னிதான். இவையாவும் 15 முதல் 20 வினாடிகளுக்குள் நிகழ்ந்து முடிந்துவிட்டன. வேற என்ன சொல்றது…சென்னை வாசிகளே பார்த்துப் போங்கப்பா..! |
Add comment செப்டம்பர் 8, 2008
உசுரு
போன வாரம் மொபைல் வாங்க போன கதைய படிச்சிருப்பீங்க(ங்கிற நம்பிக்கையில)…போகும் வழியில் பாண்டி பசார் காவல் நிலையம் எதிரில் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. எங்க கூட்டம் இருந்தாலும் தான் நாங்க எட்டி பார்ப்போமே! அந்த பழக்கத்தில் எட்டி பார்த்தால், ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் ரத்த சகிதமாக படுத்துக் கொண்டிருந்தார். அவர் மண்டையில் உள்ள சதைகள் அனைத்தும் பிய்ந்து நிறைய ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது. யாரோ அவரை தூக்க முற்பட்டார். அவர் உடல் வெட்டி வெட்டி இழுத்தது. அருகில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி கீழே விழுந்த தன் வண்டியை எடுத்துக் கொண்டிருந்தார். அதனால், அப்பொழுது தான் இந்த விபத்து நடந்திருக்க வேண்டும். அடிபட்டவர் சாலையை கடக்க முற்பட்டவர் போல. அருகே ஒரு போக்குவரத்து காவலாளி, சிரித்தபடியே இன்னொருத்தருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார். இன்னொருவர் அடிபட்டவருக்கு ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது நேரம் கடந்து கொண்டிருந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் காரிலிருந்து இறங்கி நேரே எதிரில் இருந்த (எதிரில் என்றால் சாலையின் மறுபுறம்) காவல் நிலையத்திற்கு சென்று காவலர் ஒருவரை கூட்டி வந்தார். இவருக்கு கோபம். யாரும் உதவக்கூடிய நிலையில் இல்லை என்று. வந்த காவலரும் மேப் போடும் ஆவலில் தான் இருந்தார். சாலையில் இருந்தவர்கள் அந்த வழியே போகும் ஆட்டோக்களை நிறுத்த முயன்றால் எந்த ஆட்டோக்காரரும் நிறுத்தவில்லை. எல்லோரும் கையை காண்பித்து முடியாது என்று சென்று விட்டனர். நாங்கள் சாலையின் மறு பக்கம் நின்றிருந்தோம் (காவல் நிலையம் முன்பு). அந்த வழியே செல்லும் ஆட்டோக்களை நிறுத்த முயன்றோம். ஆனால் யாரும் நிறுத்த விரும்பவில்லை.
பின், அங்கு (அரட்டை அடித்துக்கொண்டு) இருந்த போக்குவரத்து காவலரிடம் மற்றவர்கள் அழுத்தி சொல்ல, அந்த வழியாக வந்த மற்றொரு ஆட்டோவை நிறுத்தி (இதை முன்னமே செய்யலாமில்ல…) உள்ளே இருந்த சவாரியை இறக்கிவிட்டு அடிபட்டவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்த ஆட்டோ ஓட்டுனரும் 100 ரூபாய் சவாரி போச்சே என்று புலம்பிக் கொண்டே அடிபட்டவரை ஏற்றிக் கொண்டு சென்றார்.
என்னதான் ஒருவர் மோசமாக காயம் பட்டாலும், அவரை சுற்றி நடப்பவை கண்டிப்பாக அடிபட்டவரால் (அவரையும் அறியாமலேனும்) உணர முடியும். அந்த நேரத்தில் சுற்றி இருப்பவர்கள் அவருக்கு உதவாமல் இருப்பதும் ஒரு வகையில் அவரை மேலும் மேலும் கொல்வதே. அவருடைய மன உறுதி கண்டிப்பாக குலையும். அவரால் காது கொடுத்து கேட்க முடியுமோ இல்லையோ, அவருக்கு தைரியம் சொல்ல வேண்டும், ‘தேவா! மூச்சு விடு தேவா’ என்பது போல.
‘அன்பே சிவம்’ படத்தில் நச்சென்று சொல்லப்பட்டிருக்கும். அடிபட்டு மருத்துவமணையில் சிவம் படுத்திருக்கும் பொழுது அவரை பார்க்க வரும் ராமசாமி படையாச்சியிடம் சிஸ்டர் ஒருவர் ‘சிவம் மிக சீரியஸாக இருக்கிறார். கடினமான சொற்களைக்கூட தாங்கக்கூடிய நிலையில் இல்லை’ என்று சொல்லுவார். உள்ளே செல்லும் ராமசாமி படையாச்சி, சிவமிடம் ‘செத்துப் போ’ என்று அழுத்தி அழுத்தி சொல்ல, சிவத்தின் பல்ஸ் வெகுவாக குறைய ஆரம்பிக்கும். அபாய கட்டத்தை அடையும் பொழுது அவர்களை வெளியேற்றி அந்த சிஸ்டர் ‘டோன்ட் வொர்ரி மை சைல்ட். யூ வில் பெ ஆல்ரைட்’ என்று (உதட்டசைவு மட்டுமே) பார்க்கும் சிவத்தின் பல்ஸ் நார்மல் ஆகும். இது ஒரு நல்ல உதாரணம். உயிர் பிழைப்பதற்கும் இறப்பதற்கும் நூலிழை தான் வித்தியாசம். நாமெல்லாம் எப்பொழுது தான் உணருவோமோ?
ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சாலை விபத்துக்களால் இறக்கிறார்கள் என்று NHAI சொல்கிறது. இதில் பெரும்பாலும் நிகழும் இறப்புகள் தடுக்கப்படக்கூடியவையே என்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அடிபட்டவரை முடிந்த அளவில் விரைவாக மருத்துவமனை கொண்டு செல்லவேண்டும், அவ்வளவே. அடிபட்டவருக்கு எந்த மருத்துவமனைகளும் (at least) முதலுதவியாவது செய்யாமல் இருக்க முடியாது. இதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.
சாலையில் செல்லும் பொழுது தினமும் ஓரிரு ஆம்புலன்ஸ்களையாவது பார்க்க நேரிடுகிறது. அப்பொழுது நம் மக்கள் நடந்து கொள்ளும் விதம் நம்மை பதபதக்கவைத்து விடுகிறது. ஆம்புலன்ஸுடன் போட்டி போட்டுக் கொண்டு பின்னாலேயே செல்கின்றனர் (மிஸ்டர். பீன் மாதிரி). அப்பொழுது தான் வழி சுலபமாக கிடைக்குமாம். ஒரு ஆம்புலன்ஸ் நம்மை கடக்க வேகமாக வருகிறதென்றால் நாம் நம்முடைய வாகனத்தை ஓரம் கட்டிவிடவேண்டும். அது நம்மை கடந்தவுடன் உடனே அதன் பின்னாலேயே போக கூடாது. காரணம், அந்த ஆம்புலன்ஸ் முன்னால் உள்ள மற்ற வாகனங்கள் ஓரம் கட்ட இடம் இல்லாமல் போய்விடும்.
நினைத்து பாருங்கள். ஒரு நாள் நாமும் அந்த வாகனத்தில் செல்ல நேரிட்டால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்று.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள
Right to Emergency Care Supreme Court Judgement The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital. |
Road Accident At Chennai…..If you happen to see/witness/involve in an accident.. Just dial +91-044-28150700 and inform them about the accident and place, REST THEY WILL TAKE CARE. This belongs to Trauma care consortium is a non profitable organization and they help people who need medical facilities because of a ROAD accident |
Add comment ஆகஸ்ட் 12, 2008













