Archive for ஜூன், 2004
இந்து மதம் Vs மூட நம்பிக்கை
Font Used : TSC_Avarangal (TSCava.ttf)
அடிக்கடி பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் நபர்களில் மிக முக்கியமானவர் கடவுள். நம்மை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுபவர் என்று பலர் நினைத்துக்கொண்டிருப்பவர் இவர். ஆனால் இவராலும் மனிதர்கள் உருவாக்கும் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இந்த பிரச்சினைகள் எப்பொழுது தோன்றியிருக்கும் என்று பார்த்தால், அது மனிதனுக்கு எப்பொழுது கடவுள் நம்பிக்கை வந்திருக்குமோ அப்பொழுது இருந்து தோன்றியிருக்கும். மனிதன் முதலில் இயற்கை சீற்றங்களை பார்த்து பயந்தான். புயல், மழை, இடி, மின்னல் (வடிவேலு படத்தில் வரும் மின்னல் இல்லை), வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் அவனை பயமுறுத்தியது. எங்கே தன் உயிர் போய் விடுமோ என்று முதன் முதலில் பயப்பட ஆரம்பித்தான். இந்த பயம் தன்னையும் மீறி(!!!) ஒரு சத்தி இருப்பதாக நம்பினான். அந்த சக்தி தான் இயற்கை. மனிதன் அந்த சக்தியை கடவுள் என்றான். பிற்பாடு மதங்கள் தோன்றியவுடன் அந்த மதங்களுக்கு ஒரு தலைவன் (கடவுள்) தேவைப்பட்டது. அதனால் கடவுள் என்னும் கருத்து (concept) உருவாக்கப்பட்டது. அந்த கடவுளை அவன் உருவாக்கிய மதத்தோடு சேர்த்தான்.
என்னை பொருத்தவரை இந்த உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியை கடவுள் என்ற பெயரால் வழிபடுவது என்பது எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுக்கிறது. வழிபடுவது என்பதும் கடவுள் என்பதும் வேறு வேறு. வழிபடுவது என்பது ஒரு சொல்லுக்கு மறு சொல் பேசாதிருப்பது. ஆனால் இந்த உலகை படைத்த சக்தி இயற்கை, இயற்பியல் (physics). அந்த இயற்பியலை கடவுளாக நினைக்க மனம் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சற்று நினைத்து பாருங்கள். காந்தம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் கையில் ஒரு இரும்பு குச்சி இருந்தது. ஒரு முறை அவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பாறையின் அருகில் சென்றான். அந்த பாறையில் உள்ள காந்த சக்தியினால் அவன் குச்சி அந்த பாறையில் ஒட்டிக் கொண்டது. இதை அவன் மற்றவரிடம் சொன்ன பொழுது ஒரு விஞ்ஞானி (பெயர் ஞாபகம் இல்லை) அந்த பாறையை ஆராய்ந்து அதில் காந்த சக்தி இருப்பதை கண்டுபிடித்து காந்தம் என்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வேளை இந்த நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்திருக்குமேயானால் என்ன நிகழ்ந்திருக்கும்? அந்த பாறைக்கு “இரும்பிழுக்கும் பாறை” என பெயர் சூட்டப்பட்டு அங்கே ஒரு முனீசுவரன் கோயில் ஒன்று முளைத்திருக்கும். இதை கிண்டலாக சொல்லவில்லை. இது தான் உண்மை. நம் நாடும், நம் நாடு போற்றும் இந்து மதமும் (பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை வழிபடுவதால்) என்னற்ற பல உண்ணதமான கருத்துக்களை கொண்டிருந்தாலும் நாம் மூட நம்பிக்கையில் அல்லவா சிக்கியிருக்கிறோம்!!! இந்த மூட நம்பிக்கைகள் தான் எத்தனை எத்தனை வழிகளில், வழிபாடுகளில் உள்ளது.
நான் ஒரு முறை மின்னரட்டை(chatting) அடித்துக் கொண்டிருந்த பொழுது ஈரான் தேசத்திலிருந்து ஒரு பெண் (பெயர் “Atefeh” என்று நினைவு) என்னிடம் பேசினாள். அவள் நான் எங்கிருந்து அரட்டை அடிக்கிற்ன் என கேட்க, நான் இந்தியா என்றேன். அவளுடைய அடுத்த கேள்வி “நீ ஒரு முஸ்லீமா?” என்று. நான் “இந்து” என்று சொன்னேன், “அது தான் எங்கள் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் மதம்” என்றேன். அதற்கு அடுத்து அவள் நச்சென்று கேட்ட கேள்வி “எப்படி அந்த குழந்தைத்தனமான மதத்தை வழிபடுகிறீர்கள்?” (How can u be in that childish religion?) என்றாள். இந்த கேள்வியால் நான் ஒரு கனம் திகைத்து போனேன். ஒரு பெண், என்னை யார் என்றே தெரியாது, நான் ஒரு இந்து என்றவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி…பிறகு அவளுக்கு நான் 10 நிமிடம் விளக்கினேன். “ஓவ்வொறு மதத்தை வழிபடுபவர்க்கும் அடுத்தவர் மதம் சற்று ஆச்சரியமாக இருக்கும், ஓவ்வொறு மதத்தின் சம்பிரதாயங்களும் மற்ற மதத்தில் இருந்து வேறுபடும். ஆனால் ஓவ்வொறு மதமும் சென்று சேரும் இடம் ஒன்றுதான்” என்றேன். அவள் சமாதானம் அடைந்தாளா இல்லையா என எனக்கு தெரியாது. ஆனால் அவள் கேட்ட கேள்வி என்னுள் பல கேள்விகளை விதைத்தது. (மின்னரட்டைக்கு நன்றி).
சரி! நம் மதத்தில் இந்த அளவிற்கு மூட நம்பிக்கை மலிந்து இருப்பதற்கு காரனம் என்ன??? நம் மதத்தில் நிறைய சடங்குகள் உள்ளது. ஒவ்வொரு சடங்கும் ஒவ்வொன்றை சொல்கிறது. உதாரனமாக ஒரு சிலவற்றை பார்ப்போம்,
1. “வடக்கே சூலம்” என்பார்கள். அதாவது வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்று. இது பலருக்கு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் உன்மை என்ன என்றால், வடக்கு பக்கம் (North Pole) காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் அது நம்முடைய மூளையை பாதிக்கும். அதனால் தான் இந்த சொற்றொடர் உருவானது.
2. வீட்டுக்குள் ஒரு மணப்பென் வரும் பொழுது வலது காலை வைத்து வரவேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் “இந்த உலகம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது. அதே போல நானும் இந்த உலகோடு (அதாவது புகுந்த வீட்டோ டு) ஒத்துப் போவேன்” என சொல்வதாக அர்த்தம்.
3. பசுவின் எருவை எரித்தால் வரும் சாம்பலை (திருநீரு) நெற்றியில் பூசிக்கொள்வது, இரு வழிகளில் விளிம்புகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணம் தலைவலிக்கு இதமாக இருக்கும். மற்றும் அது பார்ப்பவர்க்கு “என் மனம் இந்த திருநீரைப் போல வென்மையாக, சுத்தமாக இருக்கிறது” என சொல்வது. அதே போல குங்குமம் இடுவது, “என் இரத்தம் சுத்தமாக இருக்கிறது” என்று பார்ப்பவர்க்கு சொல்வதாக அர்த்தம். (கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்”)
4. நம் மதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கம் கொண்டது. ஆயுத பூஜை என்பது நாம் நம்முடைய தொழில் பக்தியை காட்டுவதாக இருந்தாலும், அது மறைமுகமாக நம் இருப்பிடத்தை, வீடோ தொழில் செய்யும் இடமோ, வருடத்திற்கு ஒரு முரை சுத்தம் செய்ய சொல்கிறது (எனக்கு மிகவும் உதவும்). பொங்கல், நன்றியின் அடையாளத்தை நாம் மனதில் விதைக்கிறது. மற்றும் இந்த திருவிழாக்கள் அனைத்தும் நம்முடய பணத்தில் கனிசமான அளவை செலவு செய்ய வைக்கிறது. இதன் மூலம் அதை நம்பி வாழும் மக்களுக்கு மறைமுகமாக உதவுகிறது.
5. திருமணத்தன்று மொய் கொடுப்பதும், ஒரு சேமிப்பாகும்.
6. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது அருந்ததி என்பது கற்ப்புள்ள நட்சத்திரம். அதனால் தான் திருமணம் முடிந்ததும் அந்த நட்சத்திரத்தை பார்க்க சொல்லுவது.
7. கணவனை இழந்தவர்கள் வெள்ளை புடவை கட்டுவது என்பது, “நான் என் கனவர் இறந்த பின்பும் தூயவளாக இருக்கிறேன்” என கூறுவதாகும்.
8. திருமணமான பெண்ணை தாலி அணியச்சொல்வது, அந்த பெண் வேறொருவனுடையவள், அதனால் அந்த பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக. அதே போல், கணவன் காலில் மெட்டி அனியவேண்டும். அது, தலையை குனிந்து வரும் பெண், எதிரில் வரும் ஆடவன் இன்னொருவளுக்கு சொந்தமானவன் என்பதால் அவள் அவனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதற்காக.
9. வீட்டிற்கு மாட்டு சானம் போட்டு மொழுகுவதை பார்த்திருப்போம். சானத்தில் உள்ள சில நச்சுத்தன்மை தரையில் உள்ள சிறிய கிருமிகளை அழிக்கும் சக்தி கொன்டதால் அப்படி செய்கிறோம். (இதை இப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இல்லாத அன்று நாம் எவ்வாறு இயற்கையின் ஊடே வாழ்ந்தோம் என சொல்கிறேன்).
10. இன்றும் நாம் பயன்படுத்தும் உரங்கள் யாவும் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டவை. இன்னும் சில ஊர்களில் இயற்கை உரங்களை பயன்படுத்துபவரும் இருக்கிறார்கள். மண்புழுக்களை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இது மண்ணுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது.
11. பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதை கேட்டிருப்போம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மஞ்சளை உபயோகித்தால் முகத்திற்கு நல்லது. துரதிர்ஷ்டவசமாக மஞ்சளை அமெரிக்க நிருவனம் ஒன்று சொந்தம் கொண்டாடிற்று (Patent). அதனால் இனி நாம் உபயோகிக்கும் ஒரு துளி மஞ்சளுக்கும் நாம் அமெரிக்காவிற்கு பணம் செலுத்த வேண்டும்.
12. காலையில் நாம் சூரிய நமஸ்காரம் செய்வோம். அதற்கு காரணம் இது தான். நம் தொப்புளுக்கு மணிப்பூரம் என்று பெயர். இது சூரிய பகவானுடன் சம்பந்தப்பட்டது. அதனால் இது “சூரியனின் சக்கரம்” என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் முதல் கிரணம் இதன் மீது பட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் யோகா பயில்கிறவர்கள் அதிகாலையில் முதல் வேலையாக சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். மணிப்பூரச் சக்கரம் மனிதனின் நரம்பு மண்டலத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. கண், நரம்புகள், வயிறு, ஆறாவது அறிவு எனப்படும் அதீதமான உணர்வு ஆகியவற்றின் மீது இதனால் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும். இதை மனிதனின் இரண்டாவது மூளை என்று கூட சொல்லலாம். இது சிறுய பாதாம் பருப்பு அளவுதான் இருக்கிறது. இது இன்னும் சுருங்கும் போது பயம், சோகம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். தினமும் யோகா, தியானம், சுதர்சனக்கிரியா போன்றவை செய்து வந்தால், இந்த சக்கரத்தின் அளவு பெரியதாக ஆகும். உடல் உருப்புகளின் வேலைகள் மேம்படும்.
13. அடுத்து மிக முக்கியமாக, நம் வீட்டு கல்யாண வைபவத்தில் உணவு பரிமாறுகிறோம். இதை வைத்து நம் தமிழ் சினிமாவில் அடிக்கபடும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. நானும் அதை ரசிப்பேன். ஆனால், இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், (“என்னடா மறுபடியும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்கிறீர்களா?) நம் தமிழர்கள் நன்றி மறவாத குணம் கொண்டவர்கள். அந்த காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல தொலை தொடர்பு சாதனங்கள், நிழற்படக் கருவிகள் (Cameras) இல்லை. அதனால் இருவருக்குள் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சிக்கு சாட்சி தான் அந்த திருமணத்தை நடத்தியவர்களும், கலந்துகொண்டவர்களும் தான். ஆனால் அவர்களும் பொய் சொல்லலாம். அதனால் திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்தளிப்பார்கள். தமிழர்கள் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற காரணத்தினால் திருமணத்தை நடத்தியவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தளிப்பார்கள். அதனால், அடுத்த முறை ஏதாவது திருமணத்திற்கு செல்லும் பொழுது நீங்கள் சாட்சி என்று உணருங்கள்.
இது நம் சடங்குகளில் ஒரு துளி. இதே போல பல உதாரணங்களை கூறலாம். இவ்வளவு நுனுக்கங்கள் கொண்ட சடங்குகள் மூட நம்பிக்கையாக மாறியதற்கு என்ன காரணம்? அல்லது காரணங்கள்?? ஒரு முக்கியமான காரணம்…நாம் இதை நம் கல்வியாக கற்காதது. அது கல்வியை காவியமாக்கும் என்பது உண்மை. ஆனால் ஓரளவே உண்மை. இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆதலினால் இதை ஒதுக்கிவிடுவோம்.
அடுத்த முக்கியமான காரணம்!!! நாம் இதை எல்லாம் செயல்படித்தினோம் ஆனால் நமக்கு இது என்ன சொல்கிறது என்று நாம் யாரும் அறிய முற்படவில்லை. நம் பெரியோர்கள் இவை எதற்கு செய்கிறோம் என்று சொல்லவில்லை அல்லது நாம் கேட்கவில்லை. நம் கல்யாணத்தில் மந்திரம் சொல்கிறோம், ஆனால் எவருக்காவது அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா என்றால். அது நிச்சியமாக இல்லை. இந்த போக்கு தான் நமக்கு இவை எல்லாம் மூட நம்பிக்கையாக தெரிய வைக்கிறது. அதனால் தான் அந்த ஈரானிய பெண்ணும் என்னை அந்த கேள்வியை கேட்டாள். இந்த மூடநம்பிக்கைகளை நாம் கடவுளிடமும் காட்டி விடுகின்றோம். அவை எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகின்றோம். என் நண்பன் ஒருவன் “எனக்கு இந்து கோவிலுக்கு செல்வதென்றால் பிடிப்பதில்லை. காரணம் ஏதாவது விசேடம் என்றாலும் மேளதாளங்களுடன் பெரிய சத்தம் போட்டுவிடுகின்றனர். அதனால் என்னால் நிம்மதியாக கடவுளை தரிசிக்க முடிவதில்லை. அதே, ஒரு தேவாலயத்திலோ அல்லது ஒரு மசூதியிலோ இப்படி இருக்கிறதா?” என்கிறான். ஆனால் நம் கோயில்களில் மேளதாளங்கள் இருப்பதற்கு காரணம், நாம் கடவுளை வழிபடும் நேரத்தில் நம்மை சுற்றி இருப்பவர்கள் யாராவது கெட்டவைகளை பேசினால் நம் காதுகளில் விழக்கூடாது என்பதற்காக தான். இது அவ்வளவாக நிறைய பேருக்கு தெறியாது. எனக்கும் கொஞ்ச நாள் முன்பு தான் தெரியும். ஒவ்வொறு மதமும் ஒவ்வொறு வழிப்பாட்டுமுறைளை கொண்டுள்ளது. ஏன்? தமிழ் நாட்டில் உள்ள கிறுத்துவர்கள் இயேசுநாதருக்கு தீபாரதனை காண்பிக்கிறார்கள். இது அவர்கள் நம் வழிபாட்டுமுறைகளை பார்த்ததினால் எனலாம். எங்கள் ஊரில் இசுலாமியர்கள் அவர்கள் மசூதியில் கடவுளுக்கு பூமாலை சாத்துகிறார்கள். இதுவும் அவர்கள் நம் நாட்டில் இருக்கும் வழிபாடுகளை ஒத்துத்தான் இருக்கிறது.
நாம் கடவுள் எங்கும் இருப்பதாக நம்புகிறவர்கள். அது தூணாகட்டும் அல்லது துரும்பாகட்டும். அதனால் தான் ஒரு கல்லை கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்தாலும் அதை கடவுள் என்று கும்பிடுவோம். வழிபாடு என்பது பிராத்தனை (Prayer). நம் வழக்கப்படி பிராத்தனைக்கு ஒரு பொருள் அவசியம். அதனால் ஒரு கல்லை கழுவி வைத்தாலும் அதை கடவுளாக நினைத்து வழிபடலாம். நான் முன்பே சொன்னது போல வழிபாடு என்பதும் கடவுள் என்பதும் வேறு வேறு. (சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா (அன்றைய JJ TV) தொலைக்காட்சியில் Candid Camera பகுதியில் ஒரு கல்லை கழுவி மஞ்சள், குங்குமம் பூசி சாலையில் வைக்க, அதை சி(ப)லர் தரிசித்து, காணிக்கையும் செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்து எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. உங்களுக்கு எப்படி???)
இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு நமக்கு பகுத்தறிவு அவசியம். அந்த பகுத்தறிவை நமக்கு கொடுப்பது கல்வி. இந்த பகுத்தறிவை நமக்கு ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் கொடுத்தார். அதற்கு பிற்பாடு வந்தவர் கெடுத்தார். கொஞ்சம் நினைத்து பாருங்கள். பெரியார் என்று ஒருவர் இல்லை என்றால் நாம் இன்னும் எந்தளவு மூடநம்பிக்கையை கொண்டிருப்போம் என்று. நான் பெரியார் கொள்கை தான் உயர்ந்தது என சொல்லவில்லை. அவருடைய கொள்கையும் சில side-effect உள்ளது. உதாரணமாக, நம் மக்கள் தவறு செய்ய பயந்ததே கடவுளை நினைத்துதான். ஆனால் கடவுள் என்று ஒன்று இல்லை என்று தெரிந்ததும் தைரியமாக நிறைய தவறுகளை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால் தான் தற்போது நம் தமிழ் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது என்பது என் கருத்து. அதனால், அந்த பகுத்தறிவை நமக்கு கொடுக்கும் கல்வியை தயவு செய்து நம் குழந்தைகளுக்கு கொடுப்போம். “விதைக்கிற விதைதான் முளைக்கும். இது தான் இயற்கை நியதி”. எனவே, அந்த விதையை நல்லபடியாக விதைத்தால், நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம்.
வாழ்க ஜனநாயகம் ! ஜெய்ஹிந்த் !!
5 comments ஜூன் 22, 2004

நான் ஒரு முறை மின்னரட்டை(?!)(chatting) அடித்துக் கொண்டிருந்த பொழுது ஈரான் தேசத்திலிருந்து ஒரு பெண் (பெயர் “Atefeh” என்று நினைவு) என்னிடம் பேசினாள். அவள் நான் எங்கிருந்து அரட்டை அடிக்கிற்ன் என கேட்க, நான் இந்தியா என்றேன். அவளுடைய அடுத்த கேள்வி “நீ ஒரு முஸ்லீமா?” என்று. நான் “இந்து” என்று சொன்னேன், “அது தான் எங்கள் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் மதம்” என்றேன். அதற்கு அடுத்து அவள் நச்சென்று கேட்ட கேள்வி “எப்படி அந்த குழந்தைத்தனமான மதத்தை வழிபடுகிறீர்கள்?” (How can u be in that childish religion?) என்றாள். இந்த கேள்வியால் நான் ஒரு கனம் திகைத்து போனேன். ஒரு பெண், என்னை யார் என்றே தெரியாது, நான் ஒரு இந்து என்றவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி…பிறகு அவளுக்கு நான் 10 நிமிடம் விளக்கினேன். “ஓவ்வொறு மதத்தை வழிபடுபவர்க்கும் அடுத்தவர் மதம் சற்று ஆச்சரியமாக இருக்கும், ஓவ்வொறு மதத்தின் சம்பிரதாயங்களும் மற்ற மதத்தில் இருந்து வேறுபடும். ஆனால் ஓவ்வொறு மதமும் சென்று சேரும் இடம் ஒன்றுதான்” என்றேன். அவள் சமாதானம் அடைந்தாளா இல்லையா என எனக்கு தெரியாது. ஆனால் அவள் கேட்ட கேள்வி என்னுள் பல கேள்விகளை விதைத்தது. (மின்னரட்டைக்கு நன்றி).
சரி! நம் மதத்தில் இந்த அளவிற்கு மூட நம்பிக்கை மலிந்து இருப்பதற்கு காரனம் என்ன??? நம் மதத்தில் நிறைய சடங்குகள் உள்ளது. ஒவ்வொரு சடங்கும் ஒவ்வொன்றை சொல்கிறது. உதாரனமாக ஒரு சிலவற்றை பார்ப்போம்
1. “வடக்கே சூலம்” என்பார்கள். அதாவது வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்று. இது பலருக்கு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் உன்மை என்ன என்றால், வடக்கு பக்கம் (North Pole) காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் அது நம்முடைய மூளையை பாதிக்கும். அதனால் தான் இந்த சொற்றொடர் உருவானது.
2. வீட்டுக்குள் ஒரு மணப்பென் வரும் பொழுது வலது காலை வைத்து வரவேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் “இந்த உலகம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது. அதே போல நானும் இந்த உலகோடு (அதாவது புகுந்த வீட்டோ டு) ஒத்துப் போவேன்” என சொல்வதாக அர்த்தம்.
3. பசுவின் எருவை எரித்தால் வரும் சாம்பலை (திருநீரு) நெற்றியில் பூசிக்கொள்வது, இரு வழிகளில் விளிம்புகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணம் தலைவலிக்கு இதமாக இருக்கும். மற்றும் அது பார்ப்பவர்க்கு “என் மனம் இந்த திருநீரைப் போல வென்மையாக, சுத்தமாக இருக்கிறது” என சொல்வது. அதே போல குங்குமம் இடுவது, “என் இரத்தம் சுத்தமாக இருக்கிறது” என்று பார்ப்பவர்க்கு சொல்வதாக அர்த்தம். (கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்”)
4. நம் மதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கம் கொண்டது. ஆயுத பூஜை என்பது நாம் நம்முடைய தொழில் பக்தியை காட்டுவதாக இருந்தாலும், அது மறைமுகமாக நம் இருப்பிடத்தை, வீடோ தொழில் செய்யும் இடமோ, வருடத்திற்கு ஒரு முரை சுத்தம் செய்ய சொல்கிறது (எனக்கு மிகவும் உதவும்). பொங்கல், நன்றியின் அடையாளத்தை நாம் மனதில் விதைக்கிறது. மற்றும் இந்த திருவிழாக்கள் அனைத்தும் நம்முடய பணத்தில் கனிசமான அளவை செலவு செய்ய வைக்கிறது. இதன் மூலம் அதை நம்பி வாழும் மக்களுக்கு மறைமுகமாக உதவுகிறது.
5. திருமணத்தன்று மொய் கொடுப்பதும், ஒரு சேமிப்பாகும்.
6. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது அருந்ததி என்பது கற்ப்புள்ள நட்சத்திரம். அதனால் தான் திருமணம் முடிந்ததும் அந்த நட்சத்திரத்தை பார்க்க சொல்லுவது.
7. கணவனை இழந்தவர்கள் வெள்ளை புடவை கட்டுவது என்பது, “நான் என் கனவர் இறந்த பின்பும் தூயவளாக இருக்கிறேன்” என கூறுவதாகும்.
8. திருமணமான பெண்ணை தாலி அணியச்சொல்வது, அந்த பெண் வேறொருவனுடையவள், அதனால் அந்த பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக. அதே போல், கணவன் காலில் மெட்டி அனியவேண்டும். அது, தலையை குனிந்து வரும் பெண், எதிரில் வரும் ஆடவன் இன்னொருவளுக்கு சொந்தமானவன் என்பதால் அவள் அவனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதற்காக.
9. வீட்டிற்கு மாட்டு சானம் போட்டு மொழுகுவதை பார்த்திருப்போம். சானத்தில் உள்ள சில நச்சுத்தன்மை தரையில் உள்ள சிறிய கிருமிகளை அழிக்கும் சக்தி கொன்டதால் அப்படி செய்கிறோம். (இதை இப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இல்லாத அன்று நாம் எவ்வாறு இயற்கையின் ஊடே வாழ்ந்தோம் என சொல்கிறேன்).
10. இன்றும் நாம் பயன்படுத்தும் உரங்கள் யாவும் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டவை. இன்னும் சில ஊர்களில் இயற்கை உரங்களை பயன்படுத்துபவரும் இருக்கிறார்கள். மண்புழுக்களை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இது மண்ணுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது.
11. பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதை கேட்டிருப்போம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மஞ்சளை உபயோகித்தால் முகத்திற்கு நல்லது. துரதிர்ஷ்டவசமாக மஞ்சளை அமெரிக்க நிருவனம் ஒன்று சொந்தம் கொண்டாடிற்று (Patent). அதனால் இனி நாம் உபயோகிக்கும் ஒரு துளி மஞ்சளுக்கும் நாம் அமெரிக்காவிற்கு பணம் செலுத்த வேண்டும்.
12. காலையில் நாம் சூரிய நமஸ்காரம் செய்வோம். அதற்கு காரணம் இது தான். நம் தொப்புளுக்கு மணிப்பூரம் என்று பெயர். இது சூரிய பகவானுடன் சம்பந்தப்பட்டது. அதனால் இது “சூரியனின் சக்கரம்” என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் முதல் கிரணம் இதன் மீது பட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் யோகா பயில்கிறவர்கள் அதிகாலையில் முதல் வேலையாக சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். மணிப்பூரச் சக்கரம் மனிதனின் நரம்பு மண்டலத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. கண், நரம்புகள், வயிறு, ஆறாவது அறிவு எனப்படும் அதீதமான உணர்வு ஆகியவற்றின் மீது இதனால் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும். இதை மனிதனின் இரண்டாவது மூளை என்று கூட சொல்லலாம். இது சிறுய பாதாம் பருப்பு அளவுதான் இருக்கிறது. இது இன்னும் சுருங்கும் போது பயம், சோகம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். தினமும் யோகா, தியானம், சுதர்சனக்கிரியா போன்றவை செய்து வந்தால், இந்த சக்கரத்தின் அளவு பெரியதாக ஆகும். உடல் உருப்புகளின் வேலைகள் மேம்படும்.
13. அடுத்து மிக முக்கியமாக, நம் வீட்டு கல்யாண வைபவத்தில் உணவு பரிமாறுகிறோம். இதை வைத்து நம் தமிழ் சினிமாவில் அடிக்கபடும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. நானும் அதை ரசிப்பேன். ஆனால், இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், (“என்னடா மறுபடியும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்கிறீர்களா?) நம் தமிழர்கள் நன்றி மறவாத குணம் கொண்டவர்கள். அந்த காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல தொலை தொடர்பு சாதனங்கள், நிழற்படக் கருவிகள் (Cameras) இல்லை. அதனால் இருவருக்குள் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சிக்கு சாட்சி தான் அந்த திருமணத்தை நடத்தியவர்களும், கலந்துகொண்டவர்களும் தான். ஆனால் அவர்களும் பொய் சொல்லலாம். அதனால் திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்தளிப்பார்கள். தமிழர்கள் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற காரணத்தினால் திருமணத்தை நடத்தியவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தளிப்பார்கள். அதனால், அடுத்த முறை ஏதாவது திருமணத்திற்கு செல்லும் பொழுது நீங்கள் சாட்சி என்று உணருங்கள்.
இது நம் சடங்குகளில் ஒரு துளி. இதே போல பல உதாரணங்களை கூறலாம். இவ்வளவு நுனுக்கங்கள் கொண்ட சடங்குகள் மூட நம்பிக்கையாக மாறியதற்கு என்ன காரணம்? அல்லது காரணங்கள்?? ஒரு முக்கியமான காரணம்…நாம் இதை நம் கல்வியாக கற்காதது. அது கல்வியை காவியமாக்கும் என்பது உண்மை. ஆனால் ஓரளவே உண்மை. இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆதலினால் இதை ஒதுக்கிவிடுவோம்.
அடுத்த முக்கியமான காரணம்!!! நாம் இதை எல்லாம் செயல்படித்தினோம் ஆனால் நமக்கு இது என்ன சொல்கிறது என்று நாம் யாரும் அறிய முற்படவில்லை. நம் பெரியோர்கள் இவை எதற்கு செய்கிறோம் என்று சொல்லவில்லை அல்லது நாம் கேட்கவில்லை. நம் கல்யாணத்தில் மந்திரம் சொல்கிறோம், ஆனால் எவருக்காவது அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா என்றால். அது நிச்சியமாக இல்லை. இந்த போக்கு தான் நமக்கு இவை எல்லாம் மூட நம்பிக்கையாக தெரிய வைக்கிறது. அதனால் தான் அந்த ஈரானிய பெண்ணும் என்னை அந்த கேள்வியை கேட்டாள். இந்த மூடநம்பிக்கைகளை நாம் கடவுளிடமும் காட்டி விடுகின்றோம். அவை எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகின்றோம். என் நண்பன் ஒருவன் “எனக்கு இந்து கோவிலுக்கு செல்வதென்றால் பிடிப்பதில்லை. காரணம் ஏதாவது விசேடம் என்றாலும் மேளதாளங்களுடன் பெரிய சத்தம் போட்டுவிடுகின்றனர். அதனால் என்னால் நிம்மதியாக கடவுளை தரிசிக்க முடிவதில்லை. அதே, ஒரு தேவாலயத்திலோ அல்லது ஒரு மசூதியிலோ இப்படி இருக்கிறதா?” என்கிறான். ஆனால் நம் கோயில்களில் மேளதாளங்கள் இருப்பதற்கு காரணம், நாம் கடவுளை வழிபடும் நேரத்தில் நம்மை சுற்றி இருப்பவர்கள் யாராவது கெட்டவைகளை பேசினால் நம் காதுகளில் விழக்கூடாது என்பதற்காக தான். இது அவ்வளவாக நிறைய பேருக்கு தெறியாது. எனக்கும் கொஞ்ச நாள் முன்பு தான் தெரியும். ஒவ்வொறு மதமும் ஒவ்வொறு வழிப்பாட்டுமுறைளை கொண்டுள்ளது. ஏன்? தமிழ் நாட்டில் உள்ள கிறுத்துவர்கள் இயேசுநாதருக்கு தீபாரதனை காண்பிக்கிறார்கள். இது அவர்கள் நம் வழிபாட்டுமுறைகளை பார்த்ததினால் எனலாம். எங்கள் ஊரில் இசுலாமியர்கள் அவர்கள் மசூதியில் கடவுளுக்கு பூமாலை சாத்துகிறார்கள். இதுவும் அவர்கள் நம் நாட்டில் இருக்கும் வழிபாடுகளை ஒத்துத்தான் இருக்கிறது.
நாம் கடவுள் எங்கும் இருப்பதாக நம்புகிறவர்கள். அது தூணாகட்டும் அல்லது துரும்பாகட்டும். அதனால் தான் ஒரு கல்லை கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்தாலும் அதை கடவுள் என்று கும்பிடுவோம். வழிபாடு என்பது பிராத்தனை (Prayer). நம் வழக்கப்படி பிராத்தனைக்கு ஒரு பொருள் அவசியம். அதனால் ஒரு கல்லை கழுவி வைத்தாலும் அதை கடவுளாக நினைத்து வழிபடலாம். நான் முன்பே சொன்னது போல வழிபாடு என்பதும் கடவுள் என்பதும் வேறு வேறு. (சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா (அன்றைய JJ TV) தொலைக்காட்சியில் Candid Camera பகுதியில் ஒரு கல்லை கழுவி மஞ்சள், குங்குமம் பூசி சாலையில் வைக்க, அதை சி(ப)லர் தரிசித்து, காணிக்கையும் செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்து எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. உங்களுக்கு எப்படி???)
இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு நமக்கு பகுத்தறிவு அவசியம். அந்த பகுத்தறிவை நமக்கு கொடுப்பது கல்வி. இந்த பகுத்தறிவை நமக்கு ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் கொடுத்தார். அதற்கு பிற்பாடு வந்தவர் கெடுத்தார். கொஞ்சம் நினைத்து பாருங்கள். பெரியார் என்று ஒருவர் இல்லை என்றால் நாம் இன்னும் எந்தளவு மூடநம்பிக்கையை கொண்டிருப்போம் என்று. நான் பெரியார் கொள்கை தான் உயர்ந்தது என சொல்லவில்லை. அவருடைய கொள்கையும் சில side-effect உள்ளது. உதாரணமாக, நம் மக்கள் தவறு செய்ய பயந்ததே கடவுளை நினைத்துதான். ஆனால் கடவுள் என்று ஒன்று இல்லை என்று தெரிந்ததும் தைரியமாக நிறைய தவறுகளை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால், அந்த பகுத்தறிவை நமக்கு கொடுக்கும் கல்வியை தயவு செய்து நம் குழந்தைகளுக்கு கொடுப்போம். “விதைக்கிற விதைதான் முளைக்கும். இது தான் இயற்கை நியதி”. எனவே, அந்த விதையை நல்லபடியாக விதைத்தால், நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம்.
பிற் சேர்க்கை
அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் – கழனியூரன்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வாய்மொழித் தரவுகளாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மனித குலத்திற்கு கடத்தி இருக்கிறது.
வேளாண்மை சார்ந்த நாட்டார் தொழில்நுட்பங்கள் பல நீண்ட நெடிய அனுபவத்தின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்தது.
இந்து சமுதாய மக்களின் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் ஒருவித அறிவியல் சார்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதைத் தன் அனுபவத்தின் வாயிலாக கவியரசர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி விளக்கினார்.
நாட்டார் நம்பிக்கைகள் சிலவற்றை மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவை வெறும் மூட நம்பிக்கைகள் என்று தோன்றும். ஆனால் அவை மனித குலம் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் சாரம் என்ற சிந்தனையுடன் அணுகினால், அந்த நம்பிக்கைகளின் உள் அர்த்தம் நமக்குப் புரியும்.
நாட்டுப்புற நம்பிக்கைகளில் அறிவியல் சார்ந்த நம்பிக்கைகள் சிலவற்றை பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.
* தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் வரும் (நாள், நட்சத்திரங்களைப் பற்றிய நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு, வானவியல் துறைசார்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய நம்பிக்கையாகும் இது.)
* கர்ப்பிணிப் பெண்கள் மலைஏறக் கூடாது. (கர்ப்பிணிப் பெண் மலை ஏறினால் அவளின் கருக் கலைந்து விடும் என்பதால் இந்த நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.)
* ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கலமான காரியங்களில் ஈடுபடக் கூடாது. (ஈரமான ஆடைகளை அதிக நேரம் உடுத்திக் கொண்டிருப்பதால் உடம்பின் தட்ப வெப்ப நிலை சீர்குலையும். அதனால் பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.)
* விக்கலை நிறுத்த விக்கிக் கொண்டிருப்பவரிடம் அதிர்ச்சி தரும் பொய்த்தகவல்களைச் சொல்வார்கள்.(இது ஒரு விதமான அதிர்ச்சி வைத்தியமாகும்.)
* அன்னத்தை (சோற்றை) வீசி எறியக் கூடாது. (தண்ணீரையும், சோற்றையும் சிக்கனமாகவும், கவனமாகவும் பயன்படுத்த வேண்டும். உண்ணுங்கள், பருகுங்கள், வீண்விரயம் செய்யாதீர்கள்.’ என்றார் நபிகள் நாயகம். உணவுப்பஞ்சம் உலகின் பலபகுதியில் உள்ள நிலையில் ஆக்கிய சோற்றில் தான் உண்டது போக மீதியை ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும், வீசி எறிந்து வீணாக்கக் கூடாது.)
* நட்சத்திரங்கள் எரிந்து பூமியில் விழுவதைப் பார்க்கக் கூடாது. (நட்சத்திரங்கள் எரியும்போது தோன்றும் ஒளியில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நட்சத்திரங்கள் எரிவதைப் பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.)
* புதுப்பெண்ணை ஆடி மாதம் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மாட்டார்கள் (“ஆடிக்கு (மாதம்) அழைக்காத (விருந்துக்கு கூப்பிடாத) மாமியாரைத் தேடிப்பிடித்து அடி!” என்கிறது ஒரு சொலவம்.
ஆடிமாதம் கணவன் வீட்டில் இருந்து, கணவனுடன் இல்லற சுகத்தை அனுபவித்தால், அதன் மூலம் அப்பெண் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆடி மாதம் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதால் இத்தகைய நம்பிக்கையும், பழமொழியும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.)
* உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்துக் குளிக்கக் கூடாது (காலையில் அல்லது மாலையில் தான் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். மத்தியான உச்சிப் பொழுதில் எண்ணை தேய்த்துக் குளித்தால், சூரியனின் ஒளிக் கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும், அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது.
* ஈரத்துணியைப் பிழியாமல் கதவுகளின் மேல் போடக்கூடாது (ஈரத்துணியைப் பிழிந்து வெயிலில் காய வைத்தால்தான் துணியில் சுருக்கங்கள் ஏற்படாது.)
* மூஞ்சூரைக் கொன்றால் தலைவலி வரும். (மூஞ்சூர் என்பது எலி இனத்தைச் சேர்ந்த அரிய உயிர் இனம். இது பிள்ளையாரின் வாகனமாகவும் உள்ளது. ‘மூஞ்சூர்’ என்ற அரிய உயிர் இனம் அழியாமல் காக்கும் நல்லெண்ணத்தில்தான் இத்தகைய நம்பிக்கைகளை நம் முன்னோர்கள் உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள்.)
* கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றுடன் தூங்கக் கூடாது (கர்ப்பிணிப் பெண்களைக் கிராமத்து மக்கள் ஈருயிர்க்காரி (இரண்டு உயிர் உள்ளவள். தாய்க்கு ஒரு உயிர், தாயின் வயிற்றில் வளரும் சேய்க்கு ஒரு உயிர்; ஆக ஈருயிர்) என்று சொல்வார்கள். தாய் பட்டினி கிடந்தால் தாய்க்கு வயிற்றுப்புண் (அல்சர்) போன்ற குடல் நோய் வரும். கருவில் இருக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச் சத்துக் கிடைக்காமல் குழந்தை ‘சோணிக்’ குழந்தையாகப் பிறக்கும்.)
* வீட்டில் நூலாம் படை அதிகமானால், தரித்திரம் வரும் (சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது. வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இந்த நாட்டார் நம்பிக்கை வலியுறுத்துகின்றது.)
* படுத்துக் கொண்டு சாப்பிடவும் கூடாது; நீர் அருந்தவும் கூடாது (படுத்துக் கொண்டு சாப்பிட்டால், உணவுக்குழாயில் நாம் சாப்பிடும் உணவு அடைத்துக் கொள்ளும் அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.)
* சுடுகாட்டுப் பிணம் எரியும் புகையைச் சுவாசிக்கக் கூடாது. (அப்புகையில் அதிகப்படியான கார்பன் உள்ளது. எனவே அப்புகையைச் சுவாசிக்காமல் இருப்பது நல்லது. சுடுகாட்டுப் புகையைச் சுவாசிப்பதால் மனதில் ஏதேனும் கிலேசம் (பயம்) தோன்றவும் உளவியல் பூர்வமான வாய்ப்பு உள்ளது.)
* பகல் நேரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் வெட்ட வெளியில் மல்லாந்து படுத்து உறங்கக் கூடாது (வயதுக்கு வந்த கன்னிப் பெண்கள் பகல் நேரத்தில் மட்ட மல்லாக்கப் படுத்து உறங்குவதால், அவளை அறியாமல் அவள் உடுத்தி இருந்த மாராப்பு சேலை விலகிவிட வாய்ப்பு உள்ளது. பகலில், வெட்ட வெளியில் மாராப்புச் சேலை, விலகிய நிலையில் கவர்ச்சியைக் காட்டியபடி படுத்து உறங்கும் கன்னிப் பெண்களை, அவ்வழியே செல்லும் ஆண் பார்க்க நேர்ந்தால் அவனுக்கு பால் உணர்வு ஏற்பட்டு, விபரீதம் நடக்க வாய்ப்புள்ளது)
* விளக்கு தானாகவே கருகி அணைந்து விடக் கூடாது. (விளக்கில் எண்ணை இருக்கும் வரை, எண்ணை எரியும். எண்ணை தீர்ந்து விட்டால் விளக்கின் திரியே எரிய ஆரம்பித்துவிடும். திரியும் எரியும் மட்டும் எரிந்து பின் விளக்கு தானே அணைந்துவிடும். விளக்கை ஏற்றும் முன் தேவையான அளவு எண்ணை விளக்கில் இருக்கிறதா..? என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்ற கருத்தையே இந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது)
* வெறும் உரலை ஆட்டக் கூடாது. (வெறும் உரலை ஆட்டினால், உரல்குழி ஆழமாகும் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும் அதிகமான சத்தம் ஏற்படும்)
* சங்கிலிகளையும், வீட்டுக்கதவில் இருக்கும் இரும்பில் ஆளை நாராஸ்திகளையும் வீணே ஆட்டக்கூடாது (ஒலிசார்ந்த மாசு ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நம்பிக்கை படைக்கப்பட்டுள்ளது.)
* இடது கையால் கால் விரல்களைப் பிடித்தபடி சாப்பிடக் கூடாது (கால் நரம்புகளும், இடது கை நரம்புகளும் விரைப்பாக இருக்கும் போது சாப்பிடக் கூடாது.)
* உள்ளங்கையில் சோறுபடாமல் சாப்பிடுவது உறவுகளுக்கு (சொந்தக்காரர்களுக்கு) நல்லது. (உள்ளங்கையில் உள்ள அழுக்கு சாப்பாட்டுடன் வயிற்றினுள் செல்லாமல் இருக்கும். குறைவாகச் சாதத்தை அள்ளி மெதுவாக ரசித்துச் சாப்பிட்டால், உள்ளங்கையில் சாதம் படாது)
* மணப்பெண்ணுக்கு மாத விலக்கு ஏற்படும் நாளில் திருமணம் செய்யக் கூடாது. (இத்தனை நாள் உடல் உறவுக்காக காத்திருந்த புதுமாப்பிள்ளை, திருமணம் ஆன அன்று இரவும் உடல்சுகத்திற்கு ஏமாந்து விட கூடாது என்பதால் இந்த நம்பிக்கையைப் படைத்து உலவ விட்டிருக்கிறார்கள்)
* சிவப்பு எறும்பு சாரி, சாரியாக (சாரை, சாரையாக) வீட்டிற்குள் வரக் கூடாது (அதிகமாக வீட்டினுள் குப்பை கூழங்கள் கிடந்தால்தான் சிவப்பு எறும்பு சாரை, சாரையாக வீட்டினுள் செல்லும், சுற்றுப்புற சுகாதாரம் சார்ந்த நம்பிக்கையாகும் இது!)
* சாப்பிடும்போது வாழை இலையின் நடுநரம்பிற்கு மேற்பகுதியில் சமைத்த காய், கூட்டு முதலியவைகளைப் பரிமாறுவது நல்லது. (வாழை இலையின் நரம்பிற்கு மேற்பகுதி மெல்லியதாக இருக்கும், அதில் சோற்றைக் குழம்புடன் சேர்த்துப் பிசையும் போது தளிரான அந்த இலைப்பகுதி கிழிந்து விடும் எனவே அதில் கூட்டைப் பரிமாற வேண்டும். வாழை இலையின் நரம்பிற்கு கீழே உள்ள பகுதி சற்று முரடாக இருக்கும். அதில் சோற்றைப் பரிமாற வேண்டும்)
* நகத்தைக் கடிப்பதால் தரித்திரம் வரும். (நகத்தைக் கடிக்கும் போது நகத்தின் உட்புறம் உள்ள அழுக்குகள் வயிற்றினுள் சென்றுவிடும். அதனால் நோய்வரும். நகத்தைக் கடிக்கும்போது, வெட்டுப்படும் நகத்துண்டுகளும் வயிற்றினுள் சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.)
* அந்தி நேரத்தில் உணவு உண்ணலாகாது. (அந்தி என்பது இரவும் அல்லாத பகலும் அல்லாத நடுப்பொழுது. அந்நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.)
* நின்று கொண்டு சிறுநீர் கழிக்க கூடாது. (இஸ்லாமியர்கள் இதை ஒரு கொள்கையாகவே கொண்டு வாழ்கின்றார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும்போது, அதன் துளிகள் தெறித்து காலில் பட வாய்ப்புள்ளது. அதனால் நோய்கள் தோன்றும்.)
* படுக்கும்போது முகத்தை மூடிக் கொண்டு படுக்கக் கூடாது. (முகத்தை மூடிக்கொண்டு படுத்துக் கிடந்ததால் பெற்ற தாயையே அடையாளம் தெரியாமல் ஒருவன் கொன்றதாக ஒரு நாட்டுப் புறக்கதை-(உங்காத்தாளும் எங்காத்தாளும் விடிந்தால் தெரியும்) உள்ளது.
* விளக்கின்றி (இருட்டில்) சாப்பிடக் கூடாது. (இருட்டில் சாப்பிட்டால், சாப்பாட்டுடன் பூச்சி, பொட்டைகளையும் சேர்த்துச் சாப்பிட்டு விடும் அபாயம் உள்ளது.)
* கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ளக் கூடாது (சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும். கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது.)
இப்படி கிராமத்து மக்களின் நம்பிக்கைகளுக்குப் பின்னால் அறிவியல் பூர்வமான செய்திகளும் உள்ளன. மேலோட்டமாக இவைகளைப் பார்த்து, இவைகள் யாவும் படிக்காத, பாமர மக்களின் மூட நம்பிக்கைகள் என்று பெரும் போக்காக புறங்கையில் தள்ளி ஒதுக்கி விடக் கூடாது. இது போன்ற நம்பிக்கைகள், உலகம் எங்கும் உள்ள பழமையான சமூகங்களில் காணக்கிடக்கிறது. இன்றும் மலைவாழ் மக்களும், பழங்குடியினரும், இதுபோன்ற நம்பிக்கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“உலகம் எங்கும் (பழங்குடி மக்கள் உட்பட) உள்ள நம்பிக்கைகளை எல்லாம் திரட்டி, ஒருகளப்படுத்திக் கொண்டு (ஓரிடத்தில் வைத்துக் கொண்டு) ஆய்வு செய்தால் பல்வேறு புதிய செய்திகள் ஆய்வுலகத்திற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஆன்மீகம், உளவியல், சுற்றுச் சூழலியல் சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளும் ஓரு விதத்தில் அறிவியல் சார்ந்ததாகவே உள்ளன.
மானுட அனுபவமும், அறிவும் உருவாக்கிய தொழில்நுட்பங்கள், பழந் தமிழர்களால் விஞ்ஞான பூர்வமாகப் பதிவுசெய்யப்படாததால் நாம் இழந்த செல்வங்கள் பலவாகும். நாட்டார் தரவுகளை மூடியிட்ட மனத் தடைகளுடன் அணுகாமல், திறந்த மனதுடன் ஆய்வறிஞர்கள் ஆராய முன்வர வேண்டும்.
5 comments ஜூன் 22, 2004
இந்து மதம் Vs மூட நம்பிக்கை
Font Used : TSC_Avarangal (TSCava.ttf)
அடிக்கடி பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் நபர்களில் மிக முக்கியமானவர் கடவுள். நம்மை பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுபவர் என்று பலர் நினைத்துக்கொண்டிருப்பவர் இவர். ஆனால் இவராலும் மனிதர்கள் உருவாக்கும் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இந்த பிரச்சினைகள் எப்பொழுது தோன்றியிருக்கும் என்று பார்த்தால், அது மனிதனுக்கு எப்பொழுது கடவுள் நம்பிக்கை வந்திருக்குமோ அப்பொழுது இருந்து தோன்றியிருக்கும். மனிதன் முதலில் இயற்கை சீற்றங்களை பார்த்து பயந்தான். புயல், மழை, இடி, மின்னல் (வடிவேலு படத்தில் வரும் மின்னல் இல்லை), வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் அவனை பயமுறுத்தியது. எங்கே தன் உயிர் போய் விடுமோ என்று முதன் முதலில் பயப்பட ஆரம்பித்தான். இந்த பயம் தன்னையும் மீறி(!!!) ஒரு சத்தி இருப்பதாக நம்பினான். அந்த சக்தி தான் இயற்கை. மனிதன் அந்த சக்தியை கடவுள் என்றான். பிற்பாடு மதங்கள் தோன்றியவுடன் அந்த மதங்களுக்கு ஒரு தலைவன் (கடவுள்) தேவைப்பட்டது. அதனால் கடவுள் என்னும் கருத்து (concept) உருவாக்கப்பட்டது. அந்த கடவுளை அவன் உருவாக்கிய மதத்தோடு சேர்த்தான்.
என்னை பொருத்தவரை இந்த உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியை கடவுள் என்ற பெயரால் வழிபடுவது என்பது எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுக்கிறது. வழிபடுவது என்பதும் கடவுள் என்பதும் வேறு வேறு. வழிபடுவது என்பது ஒரு சொல்லுக்கு மறு சொல் பேசாதிருப்பது. ஆனால் இந்த உலகை படைத்த சக்தி இயற்கை, இயற்பியல் (physics). அந்த இயற்பியலை கடவுளாக நினைக்க மனம் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சற்று நினைத்து பாருங்கள். காந்தம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் கையில் ஒரு இரும்பு குச்சி இருந்தது. ஒரு முறை அவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பாறையின் அருகில் சென்றான். அந்த பாறையில் உள்ள காந்த சக்தியினால் அவன் குச்சி அந்த பாறையில் ஒட்டிக் கொண்டது. இதை அவன் மற்றவரிடம் சொன்ன பொழுது ஒரு விஞ்ஞானி (பெயர் ஞாபகம் இல்லை) அந்த பாறையை ஆராய்ந்து அதில் காந்த சக்தி இருப்பதை கண்டுபிடித்து காந்தம் என்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வேளை இந்த நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்திருக்குமேயானால் என்ன நிகழ்ந்திருக்கும்? அந்த பாறைக்கு “இரும்பிழுக்கும் பாறை” என பெயர் சூட்டப்பட்டு அங்கே ஒரு முனீசுவரன் கோயில் ஒன்று முளைத்திருக்கும். இதை கிண்டலாக சொல்லவில்லை. இது தான் உண்மை. நம் நாடும், நம் நாடு போற்றும் இந்து மதமும் (பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை வழிபடுவதால்) என்னற்ற பல உண்ணதமான கருத்துக்களை கொண்டிருந்தாலும் நாம் மூட நம்பிக்கையில் அல்லவா சிக்கியிருக்கிறோம்!!! இந்த மூட நம்பிக்கைகள் தான் எத்தனை எத்தனை வழிகளில், வழிபாடுகளில் உள்ளது.
நான் ஒரு முறை மின்னரட்டை(chatting) அடித்துக் கொண்டிருந்த பொழுது ஈரான் தேசத்திலிருந்து ஒரு பெண் (பெயர் “Atefeh” என்று நினைவு) என்னிடம் பேசினாள். அவள் நான் எங்கிருந்து அரட்டை அடிக்கிற்ன் என கேட்க, நான் இந்தியா என்றேன். அவளுடைய அடுத்த கேள்வி “நீ ஒரு முஸ்லீமா?” என்று. நான் “இந்து” என்று சொன்னேன், “அது தான் எங்கள் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் மதம்” என்றேன். அதற்கு அடுத்து அவள் நச்சென்று கேட்ட கேள்வி “எப்படி அந்த குழந்தைத்தனமான மதத்தை வழிபடுகிறீர்கள்?” (How can u be in that childish religion?) என்றாள். இந்த கேள்வியால் நான் ஒரு கனம் திகைத்து போனேன். ஒரு பெண், என்னை யார் என்றே தெரியாது, நான் ஒரு இந்து என்றவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி…பிறகு அவளுக்கு நான் 10 நிமிடம் விளக்கினேன். “ஓவ்வொறு மதத்தை வழிபடுபவர்க்கும் அடுத்தவர் மதம் சற்று ஆச்சரியமாக இருக்கும், ஓவ்வொறு மதத்தின் சம்பிரதாயங்களும் மற்ற மதத்தில் இருந்து வேறுபடும். ஆனால் ஓவ்வொறு மதமும் சென்று சேரும் இடம் ஒன்றுதான்” என்றேன். அவள் சமாதானம் அடைந்தாளா இல்லையா என எனக்கு தெரியாது. ஆனால் அவள் கேட்ட கேள்வி என்னுள் பல கேள்விகளை விதைத்தது. (மின்னரட்டைக்கு நன்றி).
சரி! நம் மதத்தில் இந்த அளவிற்கு மூட நம்பிக்கை மலிந்து இருப்பதற்கு காரனம் என்ன??? நம் மதத்தில் நிறைய சடங்குகள் உள்ளது. ஒவ்வொரு சடங்கும் ஒவ்வொன்றை சொல்கிறது. உதாரனமாக ஒரு சிலவற்றை பார்ப்போம்,
1. “வடக்கே சூலம்” என்பார்கள். அதாவது வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது என்று. இது பலருக்கு மூடநம்பிக்கையாக தெரியும். ஆனால் உன்மை என்ன என்றால், வடக்கு பக்கம் (North Pole) காந்த சக்தி அதிகம். அதனால் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் அது நம்முடைய மூளையை பாதிக்கும். அதனால் தான் இந்த சொற்றொடர் உருவானது.
2. வீட்டுக்குள் ஒரு மணப்பென் வரும் பொழுது வலது காலை வைத்து வரவேண்டும் என்பார்கள். அதற்கு காரணம் “இந்த உலகம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது. அதே போல நானும் இந்த உலகோடு (அதாவது புகுந்த வீட்டோ டு) ஒத்துப் போவேன்” என சொல்வதாக அர்த்தம்.
3. பசுவின் எருவை எரித்தால் வரும் சாம்பலை (திருநீரு) நெற்றியில் பூசிக்கொள்வது, இரு வழிகளில் விளிம்புகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணம் தலைவலிக்கு இதமாக இருக்கும். மற்றும் அது பார்ப்பவர்க்கு “என் மனம் இந்த திருநீரைப் போல வென்மையாக, சுத்தமாக இருக்கிறது” என சொல்வது. அதே போல குங்குமம் இடுவது, “என் இரத்தம் சுத்தமாக இருக்கிறது” என்று பார்ப்பவர்க்கு சொல்வதாக அர்த்தம். (கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்”)
4. நம் மதத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கம் கொண்டது. ஆயுத பூஜை என்பது நாம் நம்முடைய தொழில் பக்தியை காட்டுவதாக இருந்தாலும், அது மறைமுகமாக நம் இருப்பிடத்தை, வீடோ தொழில் செய்யும் இடமோ, வருடத்திற்கு ஒரு முரை சுத்தம் செய்ய சொல்கிறது (எனக்கு மிகவும் உதவும்). பொங்கல், நன்றியின் அடையாளத்தை நாம் மனதில் விதைக்கிறது. மற்றும் இந்த திருவிழாக்கள் அனைத்தும் நம்முடய பணத்தில் கனிசமான அளவை செலவு செய்ய வைக்கிறது. இதன் மூலம் அதை நம்பி வாழும் மக்களுக்கு மறைமுகமாக உதவுகிறது.
5. திருமணத்தன்று மொய் கொடுப்பதும், ஒரு சேமிப்பாகும்.
6. அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது அருந்ததி என்பது கற்ப்புள்ள நட்சத்திரம். அதனால் தான் திருமணம் முடிந்ததும் அந்த நட்சத்திரத்தை பார்க்க சொல்லுவது.
7. கணவனை இழந்தவர்கள் வெள்ளை புடவை கட்டுவது என்பது, “நான் என் கனவர் இறந்த பின்பும் தூயவளாக இருக்கிறேன்” என கூறுவதாகும்.
8. திருமணமான பெண்ணை தாலி அணியச்சொல்வது, அந்த பெண் வேறொருவனுடையவள், அதனால் அந்த பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக. அதே போல், கணவன் காலில் மெட்டி அனியவேண்டும். அது, தலையை குனிந்து வரும் பெண், எதிரில் வரும் ஆடவன் இன்னொருவளுக்கு சொந்தமானவன் என்பதால் அவள் அவனை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதற்காக.
9. வீட்டிற்கு மாட்டு சானம் போட்டு மொழுகுவதை பார்த்திருப்போம். சானத்தில் உள்ள சில நச்சுத்தன்மை தரையில் உள்ள சிறிய கிருமிகளை அழிக்கும் சக்தி கொன்டதால் அப்படி செய்கிறோம். (இதை இப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இல்லாத அன்று நாம் எவ்வாறு இயற்கையின் ஊடே வாழ்ந்தோம் என சொல்கிறேன்).
10. இன்றும் நாம் பயன்படுத்தும் உரங்கள் யாவும் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்டவை. இன்னும் சில ஊர்களில் இயற்கை உரங்களை பயன்படுத்துபவரும் இருக்கிறார்கள். மண்புழுக்களை வளர்த்து அதை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இது மண்ணுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது.
11. பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பதை கேட்டிருப்போம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி. மஞ்சளை உபயோகித்தால் முகத்திற்கு நல்லது. துரதிர்ஷ்டவசமாக மஞ்சளை அமெரிக்க நிருவனம் ஒன்று சொந்தம் கொண்டாடிற்று (Patent). அதனால் இனி நாம் உபயோகிக்கும் ஒரு துளி மஞ்சளுக்கும் நாம் அமெரிக்காவிற்கு பணம் செலுத்த வேண்டும்.
12. காலையில் நாம் சூரிய நமஸ்காரம் செய்வோம். அதற்கு காரணம் இது தான். நம் தொப்புளுக்கு மணிப்பூரம் என்று பெயர். இது சூரிய பகவானுடன் சம்பந்தப்பட்டது. அதனால் இது “சூரியனின் சக்கரம்” என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் முதல் கிரணம் இதன் மீது பட்டால், உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் யோகா பயில்கிறவர்கள் அதிகாலையில் முதல் வேலையாக சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். மணிப்பூரச் சக்கரம் மனிதனின் நரம்பு மண்டலத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. கண், நரம்புகள், வயிறு, ஆறாவது அறிவு எனப்படும் அதீதமான உணர்வு ஆகியவற்றின் மீது இதனால் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும். இதை மனிதனின் இரண்டாவது மூளை என்று கூட சொல்லலாம். இது சிறுய பாதாம் பருப்பு அளவுதான் இருக்கிறது. இது இன்னும் சுருங்கும் போது பயம், சோகம், மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகள் ஏற்படும். தினமும் யோகா, தியானம், சுதர்சனக்கிரியா போன்றவை செய்து வந்தால், இந்த சக்கரத்தின் அளவு பெரியதாக ஆகும். உடல் உருப்புகளின் வேலைகள் மேம்படும்.
13. அடுத்து மிக முக்கியமாக, நம் வீட்டு கல்யாண வைபவத்தில் உணவு பரிமாறுகிறோம். இதை வைத்து நம் தமிழ் சினிமாவில் அடிக்கபடும் லூட்டிகளுக்கு அளவே இல்லை. நானும் அதை ரசிப்பேன். ஆனால், இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், (“என்னடா மறுபடியும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான்” என்கிறீர்களா?) நம் தமிழர்கள் நன்றி மறவாத குணம் கொண்டவர்கள். அந்த காலத்தில் இப்பொழுது இருப்பதைப் போல தொலை தொடர்பு சாதனங்கள், நிழற்படக் கருவிகள் (Cameras) இல்லை. அதனால் இருவருக்குள் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சிக்கு சாட்சி தான் அந்த திருமணத்தை நடத்தியவர்களும், கலந்துகொண்டவர்களும் தான். ஆனால் அவர்களும் பொய் சொல்லலாம். அதனால் திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்தளிப்பார்கள். தமிழர்கள் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற காரணத்தினால் திருமணத்தை நடத்தியவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் விருந்தளிப்பார்கள். அதனால், அடுத்த முறை ஏதாவது திருமணத்திற்கு செல்லும் பொழுது நீங்கள் சாட்சி என்று உணருங்கள்.
இது நம் சடங்குகளில் ஒரு துளி. இதே போல பல உதாரணங்களை கூறலாம். இவ்வளவு நுனுக்கங்கள் கொண்ட சடங்குகள் மூட நம்பிக்கையாக மாறியதற்கு என்ன காரணம்? அல்லது காரணங்கள்?? ஒரு முக்கியமான காரணம்…நாம் இதை நம் கல்வியாக கற்காதது. அது கல்வியை காவியமாக்கும் என்பது உண்மை. ஆனால் ஓரளவே உண்மை. இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஆதலினால் இதை ஒதுக்கிவிடுவோம்.
அடுத்த முக்கியமான காரணம்!!! நாம் இதை எல்லாம் செயல்படித்தினோம் ஆனால் நமக்கு இது என்ன சொல்கிறது என்று நாம் யாரும் அறிய முற்படவில்லை. நம் பெரியோர்கள் இவை எதற்கு செய்கிறோம் என்று சொல்லவில்லை அல்லது நாம் கேட்கவில்லை. நம் கல்யாணத்தில் மந்திரம் சொல்கிறோம், ஆனால் எவருக்காவது அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா என்றால். அது நிச்சியமாக இல்லை. இந்த போக்கு தான் நமக்கு இவை எல்லாம் மூட நம்பிக்கையாக தெரிய வைக்கிறது. அதனால் தான் அந்த ஈரானிய பெண்ணும் என்னை அந்த கேள்வியை கேட்டாள். இந்த மூடநம்பிக்கைகளை நாம் கடவுளிடமும் காட்டி விடுகின்றோம். அவை எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்துகின்றோம். என் நண்பன் ஒருவன் “எனக்கு இந்து கோவிலுக்கு செல்வதென்றால் பிடிப்பதில்லை. காரணம் ஏதாவது விசேடம் என்றாலும் மேளதாளங்களுடன் பெரிய சத்தம் போட்டுவிடுகின்றனர். அதனால் என்னால் நிம்மதியாக கடவுளை தரிசிக்க முடிவதில்லை. அதே, ஒரு தேவாலயத்திலோ அல்லது ஒரு மசூதியிலோ இப்படி இருக்கிறதா?” என்கிறான். ஆனால் நம் கோயில்களில் மேளதாளங்கள் இருப்பதற்கு காரணம், நாம் கடவுளை வழிபடும் நேரத்தில் நம்மை சுற்றி இருப்பவர்கள் யாராவது கெட்டவைகளை பேசினால் நம் காதுகளில் விழக்கூடாது என்பதற்காக தான். இது அவ்வளவாக நிறைய பேருக்கு தெறியாது. எனக்கும் கொஞ்ச நாள் முன்பு தான் தெரியும். ஒவ்வொறு மதமும் ஒவ்வொறு வழிப்பாட்டுமுறைளை கொண்டுள்ளது. ஏன்? தமிழ் நாட்டில் உள்ள கிறுத்துவர்கள் இயேசுநாதருக்கு தீபாரதனை காண்பிக்கிறார்கள். இது அவர்கள் நம் வழிபாட்டுமுறைகளை பார்த்ததினால் எனலாம். எங்கள் ஊரில் இசுலாமியர்கள் அவர்கள் மசூதியில் கடவுளுக்கு பூமாலை சாத்துகிறார்கள். இதுவும் அவர்கள் நம் நாட்டில் இருக்கும் வழிபாடுகளை ஒத்துத்தான் இருக்கிறது.
நாம் கடவுள் எங்கும் இருப்பதாக நம்புகிறவர்கள். அது தூணாகட்டும் அல்லது துரும்பாகட்டும். அதனால் தான் ஒரு கல்லை கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்தாலும் அதை கடவுள் என்று கும்பிடுவோம். வழிபாடு என்பது பிராத்தனை (Prayer). நம் வழக்கப்படி பிராத்தனைக்கு ஒரு பொருள் அவசியம். அதனால் ஒரு கல்லை கழுவி வைத்தாலும் அதை கடவுளாக நினைத்து வழிபடலாம். நான் முன்பே சொன்னது போல வழிபாடு என்பதும் கடவுள் என்பதும் வேறு வேறு. (சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா (அன்றைய JJ TV) தொலைக்காட்சியில் Candid Camera பகுதியில் ஒரு கல்லை கழுவி மஞ்சள், குங்குமம் பூசி சாலையில் வைக்க, அதை சி(ப)லர் தரிசித்து, காணிக்கையும் செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்து எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. உங்களுக்கு எப்படி???)
இந்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு நமக்கு பகுத்தறிவு அவசியம். அந்த பகுத்தறிவை நமக்கு கொடுப்பது கல்வி. இந்த பகுத்தறிவை நமக்கு ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் கொடுத்தார். அதற்கு பிற்பாடு வந்தவர் கெடுத்தார். கொஞ்சம் நினைத்து பாருங்கள். பெரியார் என்று ஒருவர் இல்லை என்றால் நாம் இன்னும் எந்தளவு மூடநம்பிக்கையை கொண்டிருப்போம் என்று. நான் பெரியார் கொள்கை தான் உயர்ந்தது என சொல்லவில்லை. அவருடைய கொள்கையும் சில side-effect உள்ளது. உதாரணமாக, நம் மக்கள் தவறு செய்ய பயந்ததே கடவுளை நினைத்துதான். ஆனால் கடவுள் என்று ஒன்று இல்லை என்று தெரிந்ததும் தைரியமாக நிறைய தவறுகளை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால் தான் தற்போது நம் தமிழ் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது என்பது என் கருத்து. அதனால், அந்த பகுத்தறிவை நமக்கு கொடுக்கும் கல்வியை தயவு செய்து நம் குழந்தைகளுக்கு கொடுப்போம். “விதைக்கிற விதைதான் முளைக்கும். இது தான் இயற்கை நியதி”. எனவே, அந்த விதையை நல்லபடியாக விதைத்தால், நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம்.
வாழ்க ஜனநாயகம் ! ஜெய்ஹிந்த் !!
4 comments ஜூன் 22, 2004
ம(னி)தம்
Font Used : TSC_Avarangal (TSCava.ttf)
இன்றைய உலகில் விவாதிக்கக் கூடிய தலைப்புகளில் முக்கியமானது “மதம்”. மதம் என்றால் என்ன? இதற்கு பல விளக்கங்கள் கொடுக்கலாம். மனிதனுக்கு மனிதன் இந்த விளக்கம் வேறுபடும். மதம் என்பது “மனிதனின் தலை விதியை நிர்னயிக்கும் இயற்க்கையின் சித்துவிளையாட்டின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை” (அதாவது “a strong belief in a supernatural power or powers that control human destiny”). மதம் என்பது ஒரு மனிதனின் அல்லது ஒரு குழுவின் நம்பிக்கை. கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியை அடைவதின் வழி. இப்படி மதத்தைப் பற்றி பல விளக்கங்கள் கொடுக்கலாம். என்னைப் பொருத்த வரை மதம் என்பது இறைவனை அடையும் பல வழிகளில் ஒன்று. சில வழிகள் கரடுமுரடானதாக இருக்கலாம். சில வழிகளில் மேடு பள்ளமாக இருக்கலாம். ஆனால் சென்று அடையும் வழி ஒன்றுதான்.
இந்த உலகில் பலதரப்பட்ட மக்கள் உள்ளனர். இடம், கால சூழ்நிலை, உட்கொள்ளும் உணவு போன்றவை அவர்களை வித்தியாசப்படுத்துகின்றன. அந்த வித்தியாசங்கள் நிறம், உயரம், பழகும் விதம், உணவு, மொழி போன்றவை ஆகும். இந்த வரிசையில் நிச்சயமாக மதத்தை சேர்த்துக் கொள்ளலாம். மதம் என்பது எப்படி தோன்றியது? தோன்றுகிறது? இந்த உலகை ஏதோ ஒரு சக்தி ஆட்டிப் படைப்பதை அனைவரும் நம்புகிறார்கள். மனிதனின் இறப்பிற்குப் பிறகு என்ன இருக்கிறது என்று யாருக்கும், சத்தியமாக, தெரியாது. (அப்படி தெரியும் என்று யாராவது சொன்னால் முதலில் சொன்னவர்க்கு கால் இருக்கிறதா என்று பார்க்கவும்). ஆனால் மதங்கள் அந்த உலகை ஓரளவு காட்டுகிறது. மரனத்திற்க்குப் பிறகு இவ்வாறாக இருக்கும், இருக்கலாம் என்று விளிம்புகிறது, நம்பவைக்கிறது. கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றோடொன்று பின்னப்பட்டது.
சரி! மதம் எப்படி தோன்றியிருக்கலாம்? இது என் கற்பனை. மனிதன் தன் பரினாம வளர்ச்சியை அடைந்த பொழுது தன்பழக்க வழக்கங்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தான். சமுதாயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறு இன்னொரு மனிதனை பாதிக்கலாம் அல்லது பாதிக்காமல் போகலாம். இன்னொரு மனிதனை அந்த தவறு பாதிக்காமல் போனால் எந்த பிர்ச்சினையும் இல்லை. ஆனால் பிரச்சினையே இன்னொரு மனிதனை பாதிக்கும் தவறுகளால் தான். உதாரணமாக, ஒரு குடிகாரன் தினமும் குடிக்கிறான் என்றால் அவனுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை என்றால் அது அவனை மட்டுமே பாதிக்கும். ஆனால் அவனே ஒரு மணமானவனாக இருந்தால், அவனுடைய குடி அவன் மனைவி, மக்களை பாதிக்கும். இப்படி பட்ட தவறுகளை செய்பவன் நிச்சயம் தண்டணை அனுபவிக்க வேண்டும். அதற்காக கொண்டு வரப்பட்டது தான் சட்டங்கள். ஒரு மனிதன் ஒரு இனம் அல்லது ஒரு குழுவில் இருக்க வேண்டும் என்றால் அவன் அந்த இனம் அல்லது குழுவின் சட்ட திட்டங்களின் படி வழி நடக்க வேண்டும். அந்த சட்டங்களை மீறினால், தண்டனை கொடுக்கப்படும். தண்டனை பற்றி பிறகு பார்ப்போம். பிற்பாடு பழக்க வழக்கங்களுக்கும் சட்டம் கொண்டு வரவேண்டும். அதை மீருபவர்க்கு ஒரு வரை முரை வகுக்கப்பட வேண்டும். ஆனால் அது கடினமானது. காரணம் ஒருவன் செய்யும் மனதில் நினைக்கும் செயலை கண்டுபிடிக்க முடியாது. சட்டம் என்பது எழுதப்பட வேண்டியது. அது ஒரு Compile செய்யப்பட்ட மென்பொருள் (Software). அதற்கு இரக்கம் கிடையாது. அது சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை. அதை இயக்குவது நம்மைப் போல ஒரு சராசரி மனிதன். ஆனால் சட்டங்களை பயன்படுத்தும் பொழுது மனிதனுக்கு சிலவற்றில் கருத்து பேதம் வரும். இது இயற்கை. இதை தடுக்க முடியாது. அதனால் சிலவற்றை அதன் அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். உதாரணமாக, கடவுள் நம்பிக்கை சிலருக்கு இருக்கும் சிலருக்கு இருக்காது. அதனால் தான் முதல்வராக பதவி ஏற்க உருதிமொழி எடுக்கும் பொழுது கூட “உளமாற உறுதி கூறுகிறேன்” என கலைஞர் கூற அனுமதித்தது நம் அரசியல் சாசனம். அப்படி (கண்ணுக்கு தெரியாத) கடவுளை நம்பும் மக்களுக்கு ஒரு சட்டப்படி தண்டனை இல்லாத ஆனால், சட்டங்கள், தேவைப்பட்டது. அதற்காக கொண்டு வரப்பட்டது தான் மதமும் அதன் சட்டங்களும் என்பது என் கருத்து. அதாவது ஒரு குழுவின் பெரும்பான்மையான மக்களின் கருத்து தான் சட்டமாக, மதச் சம்பிரதாயமாக உருவானது. மதச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடுகள் இதற்கு விதிவிலக்கு.
மதம் என்பது ஒரு மனிதனை நழ்வழிப்படுத்தத்தான். மனிதன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள, அடுத்தவற்கு தீங்கு செய்யாமல் ஒரு வழியில் செல்ல பயன்படும் ஒரு குறியீடு (concept) தான் மதம் என்பது. கடவுள் என்ற சக்தியை சென்றடைய ஒரு வழி மதம். மதம் மனிதனின் மாற்று சட்டை. கடவுள் என்னும் மாய சக்தியை சென்று அடைய பழ வழிகள் உள்ளன. பல வழிகள் என்று நான் சொன்னது, பல மதங்கள். இந்து, இஸ்லாமியம், கிருத்துவம், ஜைனம், சீக்கியம், பௌத்தம் என்பது பல மதங்கள் என்னும் வழிகள். இந்த மதங்கள் இடம், காலம், சூழ்நிலை, சக மனிதர்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பல்வேறு parameter-களால் பலவாறு உருவானது. அந்த அந்த மதங்களின் கோட்பாடுகள், வழிகள், வழிபடும் முறை மதத்திற்கு மதம் வேறுபடும். ஆனால் அனைத்து மதங்களின் இலக்கு கடவுள் மட்டும் தான், அல்லது கடவுள் என்ற சக்தி தான். வழிகள் வேறுபடலாம். ஆனால் இலக்கு கடவுள். கடவுள் என்பது எங்கும் இருக்கலாம் என்று இந்து மதத்தின் நம்பிக்கை. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது. அது தான் நாம் மற்றவரிடம் செலுத்தும் அன்பு. என்னடா இது, எங்கோ கேட்டது போல இருப்பதாக நினைக்கிறீர்களா? ஆமாம்! ஆன்பு தான் கடவுள்!! இந்த உலகில் கடவுள் என்று ஒன்று இருக்கிறதா? இல்லயா? என்பதல்ல என் வாதம். மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்துகிறார்களா? என்பது தான் என் கேள்வி.
இன்று உலகில் ஒரு பகுதியினரை மட்டும் ஒதுக்கி விட்டதாக நான் நினைக்கிறேன். இஸ்லாம் மதம் என்றாலே தீவிரவாதம் என்று நினைக்கிறார்கள். அதற்கு யார் காரணம் என்று ஆராய்வதை விட்டு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும். (என்னுடைய வாதம் தீவிரவாதத்தைப் பற்றி அல்ல. மதம்.) மனிதன் சக மனிதனை நேசிப்பதைத் தான் மதங்கள் வலியுறுத்துகின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழிப்பதற்கு அவனுக்கு உரிமை இல்லை. சட்டம் ஒரு மனிதனுக்கு மரண தண்டனை கொடுத்தால் அது கொலைக்கு சமம். ஆனால் அது சட்டப்படி வந்துள்ளதாலும், மற்றவருக்கு தீங்கு விளைவித்ததால் மரண தண்டனை கொடுக்கப்படுகின்றது. ஒரு மனிதன் சக மனிதனை துன்புறுத்துகிறான் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அன்பு என்பது அங்கு அடி பட்டுப் போகின்றது. அவனை சட்டம் தண்டிக்கிறது. அனால் அவன் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் பொழுது அவன் தேடும் குற்றவாளியாகவோ அல்லது தீவிரவாதியாகவோ அறிவிக்கப்படுகிறான். சரி! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் பொழுது இரு பக்கமும் இழப்புகள் இருக்கும். இந்த நிலையில் ஒருவன் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க தன் உயிரையே கொடுக்கிறான் என்றால் அது சற்று சிந்திக்கப் படவேண்டிய விசயம். உயிர் என்பது திரும்ப கிடைக்காதது. அவனை இப்படி ஆக்கியது யார்? அதற்கு காரணம் என்ன??
இப்படி ஒருவன் மாறுவதற்கு அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளே காரணம். அவன் செயல்பாடுகள் உருவாவதர்க்கு அவனை சுற்றி நடப்பவையே காரணம். ஒருவன் ஒருவனாக இருப்பதற்கு சுற்றுச் சூழலே காரணம். ராஜிவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டாக வந்தவள் தனு. தனு என்ற பெண் மனிதவெடிகுண்டாக மாறுவதற்காக பிறக்கவில்லை. அவள் அவ்வாறாக மாறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவளுடய ஒரு சகோதரன் இந்திய ரானுவத்தால் கொல்லப்பட்டதாகவும், தனுவும் அவள் சகோதரியும் இந்திய ரானுவத்தினரால் கற்பழிக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவள் மனிதவெடிகுண்டாக ஆசைப்பட்டாள். இது தனுவாக முன்வந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவளும் எதோ ஒன்றால் பாதிக்கப்பட்டதால் தான் அவளை இந்த வேலைக்கு ஏற்றவளாக முடிவு செய்தனர் விடுதலைப் புலிகள். இதுவும் உன்மை. என்னுடய நன்பனின் சகோதரன் ஒருவன் விடுதலைப் புலிகளின் போரினால் ஈர்க்கப்பட்டதால் அந்த இயக்கத்தில் சேர சென்றான் (எங்கள் ஊரில் நக்சலைட்டுகள் அதிகம். மேலும் எங்கள் ஊரின் அருகில் நிறைய போராளிகள் இருந்தனர்). ஆனால் அவர்கள் அவனை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். காரணம் கேட்டதற்க்கு, “நீ வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எங்கள் இயக்கத்தில் சேர வந்துள்ளாய்! மகிழ்ச்சி. ஆனால் உன்னிடம் ஒரு வெறி இருக்காது. காரணம் நீ உன் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் பட்டிருப்பது போல தெரியவில்லை. உனக்கு எங்கள் இயக்கத்திற்க்கு உதவ ஆசைப்பட்டால் எங்களுக்கு பொருளாக கொடுக்கலாம்” என சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர். (இது நடந்தது சில வருடங்களுக்கு முன்பு. அப்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை). ஆக ஒரு மனிதன் மனிதனாக இருப்பதற்கும் மிருகமாக (அதாவது மற்றவரின் பார்வையில்) இருப்பதற்கும் காரணம் அவனை சூழ்ந்திருக்கும் மனிதர்களே! அந்த மனிதர்கள் நானும் நீங்களும் மற்றும் அனைவரும் தான்!!
சரி! வெருப்பு எப்படி ஏற்படுகிறது? ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொல்வதை பாருங்கள்…
“நாம் எப்போது விரிவடைகிறோம். எப்போது குறுகிப்போகிறோம் என்று நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை னாம் அறிந்து கொண்டால் நம்மிடமிருந்து யாராலும் புன்னகையை அகற்ற முடியாது. இல்லை என்றால் யாரோ சொல்லும் ஒரு சில வார்த்தைகள் கூட நம்மை கொதிக்க வைத்து விடும்.
‘எதிரியிடம் கூட இறைவனை கான முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறார்களே…அது எப்படி முடியும்?’ என்று சிலர் கேட்கிறார்கள்.
நீங்கள் விரும்பாத ஒருவரைப் பற்றி நினைக்கும் போது எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை கவனித்திரிக்கிறீர்களா? உங்களுக்குள் கோபம் கொப்பளிக்கும். எரிச்சல் அதிகரிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் வெறுக்கும் அந்த நபரின் தீயகுணங்கள் அனைத்தும் உங்கள் உடலில் பிரதிபலிப்பதைக் காணமுடியும். நான் யாரை வெறிக்கிறோமோ அவர்களைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கிறோம். அவர்களைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதால் அதிகமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் யாரை வெறுக்கிறீர்களோ அவர்களிடம் இறைவனை காண முயற்சி செய்ய வேண்டாம். குறைந்த பட்சம் வெறுமையை அதாவது வெற்றிடத்தை காண முயற்சி செய்யுங்கள்.
ஏனெனில். வெறுமையிலிருந்துதான் எல்லா உணர்வுகளுமே தோன்றுகின்றன. எல்லா எண்ணங்களுமே வெறுமையிலிருந்து தான் புறப்படுகின்றன. உள்ளுணர்வு, கவிதை, இவை அனைத்துமே எங்கிருந்து வருகின்றன? எல்லா எண்ணங்களுமே நம் மனதின் ஆழத்தில் உள்ளே இருக்கும் ஒரு வெற்றிடத்தில் இருந்து தான் வருகின்றன. அந்த வெற்றிடமாக இருக்க பழகிக்கொண்டால் வாழ்க்கை ஒரு புதிய கோனத்தில் தொடங்கும்.
உங்களால் எப்பொதும் அனைவரையும் நேசிக்க முடியும் என்று னான் சொல்லவில்லை. அது இயலாது. ஏனெனில், நேசிப்பது என்பது வெறும் செயல் அல்ல. அது நீங்கள் சுலபமாகப் பயிற்சி செய்துவிடக் கூடியது ஒன்றும் அல்ல. நேசம் என்பது உங்களிடம் தானாகவே நிகழவேண்டும்.
ஒரு பெரிய கடைக்கு சென்றால், அங்கே பல பொருள்களைப் பார்க்கிறீர்கள். அங்கே இருக்கும் அனைத்துப் பொருள்களையும் நீங்கள் விரும்புவது இல்லை. இந்த பொருள்கள் எல்லாம் விரும்ப வேண்டும் என்று அந்த கடைக்கு போகும் போது நீங்கள் உங்களுக்கு சொல்லிக் கொள்வது இல்லை. அதாவது, உங்களது விருப்புகளை நீங்கள் தயாரிப்பது இல்லை. நேசமும் அது போலத் தான்.
ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளூங்கள்…உங்களை நீங்கள் நேசிக்காத போது எவ்வாறு நீங்கள் அனைவரையும், அதுவும் நீங்கள் வெறுக்கும் ஒருவரை நேசிக்க முடியும்?
நேசம் என்பது ஒரு செயல் அல்ல. அது ஒரு நிலை. ஆழ்ந்த தியானத்தில், வெறுமையான நிலையில், இயல்பாகப் பாய்வது தான் நேசம். அது தினிக்கப் படுவதில்லை. வாழ்க்கையில் நேசம் என்பது ஒரு நிலையாக ஆகும் போது உங்களால் உங்கள் எதிரியைக் கூட நேசிக்காமல் இருக்க முடியாது.” (நன்றி. உபயம்: ஆனந்த விகடன்)
இஸ்லாம் மதம் மற்ற மதத்தைப் போலவே பல உன்னதமான கருத்துக்களை கொண்டது தான். உலகில் உள்ள மதங்களை இப்படி பிரிக்கலாம். மூன்று மதங்களை எடுத்துக் கொள்வோம். அவை இந்து, இஸ்லாம், கிருஸ்துவம். கிருஸ்துவ மதம் கண்டிப்புடன் நடந்துக் கொள்ளாத மதம் என்று சொல்லலாம். கிருஸ்துவம் போதிப்பது அஹிம்சை. “உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு” என்பது கிருஸ்துவத்தின் பிரபலமான வரி. அதே சமயம் அதன் மதச் சட்டங்கள் அந்த மதத்தை பின்பற்றுபவர்களை கட்டுப்படுத்துவதில்லை. கிருஸ்துவத்தின் சட்டங்கள் சற்று Relax செய்யப்பட்டவை. விமரிசனங்கள் இங்கு வரவேற்க்கப்படுகின்றன. அதற்கு நேர் எதிராக இஸ்லாம், அதனை பின்பற்றுபவர்களை தினமும் ஐந்து வேளை கட்டாயம் மதச் சம்பிரதாயங்களை பின்பற்றவேண்டும் என சொல்கிறது. இஸ்லாம் சற்று கண்டிப்பான மதம் என்று சொல்லலாம். மேலும் இஸ்லாம் மதத்தில் “ஒருவன் அண்டை வீட்டாரை மனதளவில் வெறுத்தாலும் அவன் உன்மையான இஸ்லாமி இல்லை” என்று சொல்லப்படுகிறது. (அப்படி என்றால் அதே இஸ்லாம் மதத்தில் தான் “ஜிகாத்” என்று சொல்லப்படிகின்ற “புனிதப் போர்” பற்றியும் சொல்லப்படிகின்றது. அப்படியானால் தவறு இஸ்லாம் மதத்திலா? இல்லை!!! இஸ்லாம் மதத்தை புரிந்து கொண்டவர்களினால்.) ஆனால் இஸ்லாம் மதத்தில் விமரிசனங்கள் வெறுக்கப்படிகின்றன. ஒருவன் இஸ்லாம் பற்றி விமரிசனம் செய்தால் அவன் இஸ்லாத்தை அழிப்பவனாகப் பார்க்கப்படுகின்றான். அவன் இஸ்லாத்தின் விரோதியாக அறிவிக்கப்படுகின்றான். இந்து மதத்தை எடுத்து கொண்டால் அது இந்த இரண்டு மதங்களுக்கும் இடைப்பட்ட மத சடங்குகள் கொண்ட மதம் என சொல்லலாம். அதிகமான கண்டிப்பும் இல்லாமல் அதே சமயம் அதிக சுதந்திரம் கொடுக்காத மதம் என சொல்லலாம்.
சரி! இஸ்லாம் மதம் மட்டும் ஏன் தவறாக சித்தரிக்கப்படுகின்றது? காரணம்! இஸ்லாம் இன்னும் அறிவியலை ஏற்றுக் கொள்ளாததினால். இது எந்த அளவு உண்மை? இஸ்லாம் உலகை எடுத்துக் கொண்டால் இரு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று! அரிவியலை ஏற்றுக் கொண்ட நாடுகள். உதரணமாக, இந்தோனேஷியா, எகிப்து, மலேசியா, துருக்கி, சவூதி அரேபியா, ஈராக், குவைத் போன்றவை. மற்றொரு பிரிவில், அறிவியலை ஏற்றுக் கொள்ளாத பிரிவில் உள்ள அப்கானிஸ்தான், ஈரான், வங்காள தேசம் மற்றும் சில நாடுகள். அரிவியலில் சேர்ந்த நாடுகள் மற்ற நாடுகளோடு ஒத்துப் போயின. ஆனால் ஒரு சில மேலை நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை) இந்த (அமெரிக்காவின் பார்வையில்) காட்டுமிராண்டி நாடுகளை அரிவியல் ரீதியாக ஆக்கிரமிப்பு செய்யப் பார்த்தன. உதாரனமாக ஈராக் யுத்தம். அதனால் இந்த நாடுகளோடு நேரடியான யுத்தம் செய்ய முடியாமல், ஆனால் வேறு வழியில்லாமல் மனித வெடிகுண்டாக மாறுகின்றனர். எல்லா நாடுகளுக்கும் நடுநிலையாக செயல்படவேண்டிய ஐ.நா. சபையும் இன்று அமெரிக்கா சொல்லுக்கு கட்டுப்பட காரணம், ஐ.நா. சபைக்கு பாதி நிதி அமெரிக்காவிடமிருந்து வருகிறது என்பது தான். முதலில் இந்த ஐ.நா. சபையின் தலைமையிடத்தை அனிசேரா நாடுகளில் ஒன்றில் மாற்ற வேண்டும்.
இந்த நிலைக்கு காரணம் பார்த்தால், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மற்றும் வளராத நாடுகளை அரவனைத்து செல்ல மறுப்பதே காரணம். சற்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு வேளை நாமும் அரிவியலை ஏற்காமல் இருந்திருந்தால், இன்று நசுக்கப்பட்டிருக்களாம்!!!
ஆக, ஒவ்வொறு மதமும் சமதானம், அன்பு, மனித நேயம் ஆகியவை பற்றி மட்டுமே சொல்கிறது. சக மனிதனை நேசிக்க சொல்கிறது. நான் முன்பே சொன்னது போல இறைவனை சென்றடைய பல வழிகள் தான் மதம். அந்த வழிகளின் தன்மை வேறுபடலாம்…ஆனால் சேரும் இடம் இறைவன் என்னும் ஒரே பரம்பொருள். இதை புரிந்து கொண்டாலே போதும். இந்த உலகம் தன்னால் அமைதியுறும்.
4 comments ஜூன் 21, 2004

8 comments ஜூன் 21, 2004