Archive for ஜூலை, 2005
Function Convert_Religion (ByVal CurMoney AS Currency) Returns NewReligion AS Religion
கடந்த மார்ச் மாதம் 25ம் நாள், நான் என் நண்பர்களுடன் சென்னையில் இருந்து சோலையார்பேட்டை-க்கு (டமில்-ல ஜோலார்பேட்டை) பிருந்தாவன் ரயிலில் சென்று கொண்டிருந்தேன். அன்றைய தினமலர் நாளிதளில் ஒரு செய்தி வந்திருந்தது. அதில் 95 சதவிகிதம் கண் பார்வையற்ற ஒருவர், ஆழிப் பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து மதம் மாற்ற பிரசாரம் செய்வதாக குறிப்பிட்டிருந்தது. (‘டவுட்’ தனபாலுக்கு இங்கே) அதை நானும் ஒரு சாதாரன செய்தியாகவே எடுத்துக் கொண்டேன். சற்று நேரம் கழித்து என் நண்பன் என்னிடம் அந்த செய்தியை காண்பித்து “இந்த ஆள் இங்கே (ரயில் பெட்டியில்) இருக்கிறாரான்னு பாரு” என்றான். நானும் தேடினேன். ஒரு கண் தெரியாதவர், பயனிகளிடம் ஏதோ ஒரு ரசீதை காண்பித்து பணம் வசூலித்துக் கொண்டிருந்தார். அந்த ஆள் பத்திரிக்கையில் உள்ளது போல தோன்றினாலும் நேரில் இன்னும் கருப்பாக தோன்றியது. என் நன்பனோ, “அந்த ஆளை எனக்கு நன்றாக தெரியும். அவர் எங்க ஊரு தான் (ஆம்பூர்-க்கு அருகில்)” என்று அவரைப் பற்றி சிறிது நேரம் சொல்லிக் கொண்டு வந்தான். பத்திரிக்கையில் உள்ளதும் உண்மை தான் என்றும் கூறினான்.
பத்திரிக்கை செய்தியை படித்தால் “ஏசுவை நம்பினால் அரிசி, துணிமணிகள் கிடைக்கும்” என்றெல்லாம் (இது ஒரு வேளை உண்மையாக இல்லையென்றாலும், என் நண்பன் கூற்றுப்படி இது உண்மையாக இருக்கும் அல்லவா?) கூறியிருக்கிறார். இவர் உண்மையிலேயே கடவுள் மேல் நம்பிக்கையுள்ளவராக இருந்தால், இந்த சாதாரண உப்பு, மிளகாய் பிரச்சிணைகளுக்கு ஏசுவை இழுக்கமாட்டார். சில அமைப்புகள் இப்படி நடப்பவற்றை கண்டிப்பதும், சில நேரங்களில் தண்டிப்பதும் (அதை பத்திரிக்கைகள் கண்டிப்பதும்) நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அமைப்புகளுக்கு என்ன தான் வேண்டும்?
மற்றொன்று…
(திரையரங்குகளில் காண்பிக்கபடும் Film Division News Reel-களில் வருவது போல…) நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. இங்கு பல இன, மதம், மொழி சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். கவனிக்க, இந்தியா நேபாளத்தைப் போல ஒரு ஹிந்து நாடாக அறிவிக்கப்பட்டது அல்ல. மேலே குறுப்பிட்ட படி செய்பவை சில மத அமைப்புகள் தாம் என்று மற்ற அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றனர். மதம், மதக் கோட்பாடுகள் என்பது நாம் வாழும் இடத்தின் பால் வளர்வது. ஒரு இடத்தில் பிறந்த அல்லது வளர்ந்த மதம் இன்னொரு இடத்தில் தாக்கு பிடிக்க இயலாது / முடியாது. காரணம், மற்ற இடத்தில் புதிய மதத்தை “விதைக்கும்” பொழுது, அந்த இடத்தில் வேறொரு மதம் இருக்கும். அப்படியே, புதிய மதத்தை பரப்பும் பொழுது சில “சேதாரங்கள்” இருக்கும். இந்த சேதாரங்களின் விளைவுகள் சற்றே கலவரப்படுத்துவன. முக்கியமாக கிருத்துவ மிஷனரிகள். கிருத்துவ மிஷனரிகள் இந்தியாவில் வந்த பொழுது, அவர்கள் முக்கியமாக வந்தது சேவை மனப்பான்மையோடு. அவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவைகளுக்கு நாம் நிச்சயம் கடமை பட்டிருக்கிறோம். நம்மால் செய்ய முடியாத பல காரியங்களை, செயல்களை அவர்கள் புரிந்துள்ளனர். நான் படித்த கல்லூரியும் ஒரு கிருத்துவக் கல்லூரி. “பசங்கள வெளியூர் காலேஜ்ல படிக்க வெச்சா மொதல்ல கத்துக்கிறது கஞ்சா தான்” அப்படீன்னு என் தந்தையிடம் அவர் நன்பர் “தம்” அடிச்சுகிட்டே சொல்லியதால், என்னை வெளியூருக்கு அனுப்பவில்லை. அப்பொழுது எனக்கு கை கொடுத்தது, எங்கள் ஊரில் உள்ள ஒரே கல்லூரியான ஒரு கிருத்துவக் கல்லூரி தான்.
பெரும்பாலும் இந்த உலகில் உள்ள கிருத்துவ நாடுகள் பணக்கார நாடுகள். அதனால், தங்கள் மதத்தை பரப்ப பணம் தாராளமாக செலவழிக்கப்படும். இந்த மதப்பரவல் என்பது காலங்காலமாக நிகழ்கிறது. இவர்கள் கூட்டுவது தங்கள் மதத்திற்கு எண்ணிக்கையே. இந்தியாவில் எந்த அளவிற்கு மதப்பரவல் நடக்கிறது என்பதற்கு சில உதாரணங்கள்:
சில வருடங்களுக்கு முன்பு தமிழக அரசு “கட்டாய மதமாற்ற தடை சட்டம்” கொண்டு வந்தது. அதற்கு வழக்கம் போல் எதிர்(ரி) கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதில், முத்தாய்ப்பாக, மதுரை ஆர்ச் பிஷப், தமிழக அரசு இந்த சட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால் அமெரிக்க அரசிடம் சொல்லி(!) பொருளாதாரத் தடை போடுவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டினார். இது, நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது. ஆனால், இதற்கு வழக்கம் போல் பத்திரிக்கைகள் ஏதும் கண்டனமோ, எதிர்ப்போ காட்டவில்லை என்பது தான் வேடிக்கை. ஆனால், “கட்டாய” மதமாற்ற தடை சட்டத்திற்கு எதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது தான் விளங்கவில்லை.
அட, என்ன சமகாலத்தில் சொல்றீங்க-னு கேக்கரீங்களா? இதப் பாருங்க. நாம் இப்போது காலச் சக்கரத்தில் சற்று பின் நோக்கி செல்வோம். பாபரின் பேரர் அக்பர் நம் தேசத்தை ஆண்டு கொண்டிருந்த சமயம். அக்பர் மத நல்லினக்கத்தை உறுதியாக கடைபிடித்துக் கொண்டிருந்தார். இந்த நாட்டை எந்த பிரச்சினை இல்லாமல் ஆள இந்தியாவில் உள்ள பெரும்பாண்மையான மதத்தை சேர்ந்த இந்துக்களின் ஆதரவு அவசியம் என்று பாபர் தன் சுயசரிதையான “பாபர் நாமா”-வில் சொல்லி இருந்ததை அக்பர் அறிந்திருந்தார். (இதை பசியின் கொடுமையால், தலைமறைவாக திரிந்த பொழுது, வேறு வழியில்லாமல், ஒரு பசுவைக் கொன்று பசியாரிய அக்பரின் தந்தை ஹுமாயூன் ஒரு கிராமத்தில் நுழைந்த பொழுது, அந்த ஊர் இந்துக்கள் எல்லா கிணற்றிலும் உப்பு மூட்டை கொட்டி, ஹுமாயூனை தாகத்தால் தவிக்க வைத்தார்கள்). அதனால், அக்பர் பல்வேறு மதத்தின் கருத்துக்களையும் அறியும் பொருட்டு அடிக்கடி பல மதத்தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரை கூட்டி ஆரோக்கியமான “அரட்டை அரங்கம்” நடத்துவது வழக்கம். அதன்படி, மேற்கத்திய நாட்டில் இருந்து சில கிருத்துவ அறிஞர்களை அழைத்தார். அவர்களும் சில நாள் அக்பரின் அரண்மணையில் தங்கி சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்தியாவையும், அக்பரையும் பற்றி தெரியாத அவர்கள், அக்பர் தம் மதத்தின் பால் ஈர்க்கப்பட்டதாக நினைத்து அவரை கிருத்துவ மதம் மாற்ற முயன்றனர். அதன் பொருட்டு, சபையில் அவர்கள் இஸ்லாம் மற்றும் பிற மதங்களை குறைத்தும், கிருத்துவத்தைப் பற்றி உயர்த்தியும் பேச ஆரம்பித்தார்கள். நாளடைவில் சபையில் உள்ள இஸ்லாமியரும், மற்ற மதத்தினரும், அக்பர் உள்பட, கடுப்பாகி அவர்களை அக்பர் தனியே அழைத்து எச்சரித்து அனுப்பினர். மொகலாய பேரரசில் மரண தண்டனை என்பது சர்வ சாதாரணமாக, அற்ப விசயத்திற்காகவெல்லாம் கொடுக்கப்படுவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. (பிற்பாடு, இந்த விவாதங்கள் எல்லாம் “தீன் – இலாஹி” என்னும் புதிய மதத்தை தோற்றுவிப்பதற்காகத்தான் என்பது வேறு விசயம்).
ஏன்! இந்து மதத்தின் ஒரு “சமயம்” ஆகிய பெளத்த மத்தத்தினர், ராஜ ராஜ சோழனை தம் மதத்தில் சேர்க்க முயன்றனர் என்பதும் வரலாறு…ம்…ம்…என்னத்த சொல்ல???
1 comment ஜூலை 29, 2005
கல்யாணத்திற்கு கல்யாணம் – கத்தி முனையில்…
ஏன்? எங்கே?? எப்படி???
சில தினங்களுக்கு முன், என் ஊருக்கு (TIK திருப்பத்தூர்) சென்றிருந்தேன். ஒரு சுற்று சென்று என் நண்பர்களை காண சென்றிருந்தேன். என் நன்பனின் கடையில் அமர்ந்து போனது வந்தது பற்றி ‘சாட்’-டிக்கொண்டிருந்தோம். அப்பொழுது மற்றொருவன், அவன் தான் நம் கதையின் நாயகன் (Anti-hero) கல்யாணம் (எ) கல்யாணசுந்தரம், வந்து எங்கள் ஜோதியில் ஐக்கியமானான். எலி ‘கெட்டுப் போன’ மசால் வடையை மோப்பமிட்டுக் கொண்டு, சிங்கங்களின் குகைக்குள் வந்தது.(ஹி…ஹி…சிங்கங்கள்? நாங்கள் தான்…) உருப்படியில்லாத விடயங்கள் ஓவ்வொன்றாக பட்டியலிட்டு பேசிக்கொண்டிருந்தோம்,
அப்பொழுது தான் கதையில் ஒரு ‘Hairpin Bend’, அதாங்க, ஒரு அதிரடி திருப்பம். நான்காவதாக ஒருவன் வந்தான். வேறெங்கோ சென்று கொண்டிருந்தவன், கல்யாணத்துடன் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து விட்டு, ஒரு சில வினாடிகள் தன் வாகனத்தை நிருத்திவிட்டு, “கத்தி முனையில் கல்யாணத்திற்கு கல்யாணம். தெரியுமா?” என்று சொல்லிவிட்டு சட்டென தன் ‘வேலை’யை காட்டி விட்டு, சிட்டென தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான். அட! அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? அதுவும் எங்களுக்கு ‘சொல்லாமலே’…சரி! ஏதாவது வில்லங்கமாயிருக்கும் என்று அவனை ஏதும் திட்டாமல் (எங்களுக்கு ரொம்ப நெருங்கின நண்பனும் இல்லை, அவனை நாங்கள் பார்த்தால் just ‘hai’ சொல்லும் பழக்கம் தான்), “என்னடா! என்னாச்சு!!”-ன்னு கேட்டோ ம். அவன் சொன்னதன் சாராம்சம் (ஆமா! அவன் கதை பெரிய இதிகாசம். இதுக்கு சாராம்சம் வேறையா?).
சுற்றிலும் உள்ள பத்து பட்டிக்கும் தலைநகரமான(?) திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திலே ஒன்றிலிருந்து திருப்பத்தூருக்கு வரும் கல்யாணம் என்னும் இந்த கதாநாயகன் (அவனவன் கதைக்கு அவனவன் கதாநாயகன் தானே), ஒரு அன்றாடங் காய்ச்சி. சீ! சீ!! அதெல்லாம் காய்ச்ச மாட்டான். அவன் அன்று சம்பாதிப்பது அவனுக்கு உணவு, உடை, எல்லாம்னு சொல்ல வந்தேன். அவன் வாழ்விலும் தென்றல் வீச ஆரம்பித்தது. இது புயலுக்கு ‘முன்னே’ அமைதி. அவன் திருப்பத்தூருக்கு வரும் பேருந்தில் சக பயனியாக வரும் ஒரு கல்லூரியில் B.Com பயிலும் பெண், calm-ஆக கல்யாணத்தைப் பார்க்க, அவனுள்ளும் ஒரு ‘அந்நியன்’ வெளிப்பட்டுக்கிறான். அதிலிருந்து அவன் deposit இழந்தாலும், ஓட்டு சதவிகிதம் சொல்லி சப்புகொட்டும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியைப் போல அவளிடம் பந்தா காட்ட…அவ்வளவு தான். ஒரே மழை நீரில் இருக்கும் இரு வேறு மின் கம்பிகளும் நீரினால் ஒன்று பட்டு மின்சாரத்தை பாய்ச்சுவதைப் போல (அடங்கப்பா! என்ன உவமைடா சாமி!!), அவர்களும் அந்த காதல் என்னும் நீரில் நீச்சல் அடிக்கத் தெரியாமல் ‘தொபுக்கடீர்’-னு விழுந்தார்கள். அவன் மனதில் ஒரு ‘அந்நியன்’னு என்று சொன்னேன் இல்லையா? ஏன்னா, நம்ம கதாநாயகன் இந்த காதலை time pass கடலையாகவே ‘பாவி’த்திருக்கிறார். இந்தக் ‘ஒ(த)ருதலைக்’ காதல் நாளொரு கடலையும், பொழுதொரு meeting-குமாக (decent-ஆ தான்) வளர்ந்தது.
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பித்தது. இதை அந்த பெண் எதிர்ப்பார்த்திருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. பின் ஆப்புறம் என்ன? ஒரே திரைக்கதை தான். இவனைப் பார்க்க வேண்டும் என்று முயற்சிக்க, தலைவர் அந்த பெண்ணை பார்க்க தவிர்க்க, அந்த பெண் அவள் வீட்டில் போட்டு உடைக்க, அவள் வீட்டிலும் இதற்கு எதிர்ப்பு எழ, என்ன நிகழ்ந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா? இவனை அவள் மிகவும் serious-ஆ காதலித்திருக்கிறாள். அதனால், தடாலடியாக, நீங்கள் ஊகித்த மாதிரியும் இல்லாமல், “பையன் தொட்டுட்டான்…பொன்னு கெட்டுட்டா”-னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாள். இந்த இடத்தில் நானும் என் நன்பனும், கல்யாணத்தின் நிலையை நினைத்து, ‘அடிபடாமல்’ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.
இந்த விவகாரம் காவல்துரை வரை சென்றது. கல்யாணம், தான் DNA சோதனை எடுக்கவும் த()யார் என்று வக்கீல் மூலம் notice விட்டான். ஆனால், DNA சோதனை செய்ய சுமார் அருபதினாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரிந்தது. அவனால் தன்னால் அது முடியாது என்று சொல்லி கடைசியில் வேறு வழியின்றி, இந்த கதைக்கு தலைப்பு கொடுத்தான்.
சரி! தற்போது அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம். தன் மனைவி மேல் கோபமா இருக்கிறானா என்று கேட்டோ ம். “முதல்ல என்னை ஏமாத்திடா-ன்னு எனக்கு அவ மேல பயங்கர கோபம் இருந்துச்சு. ஆனால், என் மேல் இருந்த love-ன்னால தான் இப்படியொரு பொய் சொன்னா. அதுவும் இல்லாமல், என் மேலும் தப்பு இருந்தது. அவ என்ன serious-ஆ love பன்னியிருக்கா. நான் அவள் love-அ time paas-ஆ நினைச்சேன். அதனால, எனக்கு கிடைச்ச தண்டனை + பிராயச்சித்தம் தான்”-னு சொன்னான்.
ஆனால், அவன் தற்போது கட்டப்படுவது தங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கு. தான் தினமும் சம்பாதிப்பது சாப்பாட்டிற்கே சரியாகிறது என்றும், வாழ்க்கை நடத்துவதே கடினமாக இருப்பதாகவும் சொன்னான். அவன் மனைவி தற்போது final year படிப்பதாகவும். அது முடிந்ததும் அவள் வேலைக்கு போவதாகவும் சொல்லியிருக்கிறாள். ஆனால், அவளுக்கு மேலும் B.L. படிக்க ஆசை இருப்பதால் தான் அவளை எப்படியாவது படிக்க வைக்க ஆசைப்படுவதாகவும் கூறினான். இதற்கிடையில் அவளை கட்டப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். அட! நம்ம குடும்ப அமைப்பு தான் ஒருத்தனை எப்படி எல்லாம் மாத்திடுது? பிறகு அவனுக்கு சில அறிவுரைகள், ஆலோசனைகள், எங்களுக்கு தகுதி இருப்பதாக நினைத்துக் கொண்டு, கூறினோம்.
4 comments ஜூலை 11, 2005

8 comments ஜூலை 11, 2005