சரிகிறதா நான்காவது தூண்?

மார்ச் 1, 2006

“பாரத நாடு பழம்பெரும் நாடு…”. இது திரையரங்குகளில் Film Division வழங்கும் குரும்படங்களில் வரும் முதல் வரி. உண்மையாகவே பாரத நாடு பழம்பெரும் நாடுதான். அதன் பழம்பெருமைகளில் முக்கியமானது அதன் ஜனநாயகம். நம்நாட்டைப் பொறுத்தவரை அந்த ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கின்ற(?) தூண்கள் என நான்கு விஷயங்களைச் சொல்வார்கள்.

1. நாடாளுமன்றம் / சட்டமன்றம்
2. நீதித்துறை
3. காவல்துறை / ராணுவம்
4. பத்திரிகைகள்

எனக்குத் தெரிந்து இந்த நான்கு தூண்களில் “சற்றேனும்” உருப்படியாக இருப்பது நீதித்துறை தான் (ராணுவத்தை குறிப்பிடவில்லை). முதல் மூன்று தூண்களின் நடவடிக்கைகள் மக்களிடம் சென்று சேர்வதற்கு முக்கியமானது பாலமாக இருப்பது அதன் நான்காவது தூண். இந்தியாவின் சுதந்திர போராட்ட காலம் முதல், சமீபத்தில் நடந்த கார்கில் போர் வரை நடப்பவை என்ன என்று, கார்கில் போராக இருந்தாலும் (அதில் நடந்த சவப்பெட்டி ஊழலாக இருந்தாலும்), மக்களுக்கு உணர்த்தியது பத்திரிக்கைகள் தாம். வாட்டர் கேட் ஊழல் முதல், குவாட்டர் ஊழல் வரை அத்தனையும் வெளிக்கொணர்வது ஊடகம்.

இப்படி மேலே கூறியபடியெல்லாம் பழம் பெருமை பேசவேண்டும் என்று தான் எனக்கும் ஆசை. ஆனால், உண்மை என்று ஒன்று இருக்கிறதே. ஒரு முறை சும்மா பரீட்சித்து பார்க்கலாமே என்று ஒரு வாரம் வந்த பத்திரிக்கைகளை எல்லாம் ஒரு நோட்டம் விட்டேன். இது, சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு. அதுவும் முக்கியமாக புலனாய்வு பத்திரிக்கைகளை. ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், நெற்றிக்கண், தமிழன் எக்ஸ்பிரஸ், முக்கியமாக மாலை மலர் மற்றும் மாலை முரசு. அவையாவிலும், ஒரு வாரத்தில் மட்டும், வந்த cover story எல்லாம் sex-ஐ முன்னிறுத்தியே இருந்தன. sex என்றால் கலவி இல்லை. Sex மற்றும் அதன் தொடர்பான குற்றங்களைப் பற்றியது. கற்பழிப்பு, கொலைகள், ஊழல், இவை எல்லாவற்றை விடவும் அதிகம் இடம் பெற்றது, ஓர் இனச் சேர்க்கை பற்றி. தவறாக பொருள் கொள்ள வேண்டாம். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு எத்தனை பேருக்கு Homosexual / Lesbian பற்றி தெரிந்திருக்கும் அல்லது அந்த வார்த்தைகளையாவது கேள்விப்பட்டிருப்பார்களா? நிச்சயமாக இருக்காது. ஆனால், இப்பொழுது? இந்த வார்த்தைகள் இப்பொழுது எவ்வளவு பிரபலம். அப்படியே இயற்கையாக அங்காங்கே ஒன்று இரண்டு என நடந்தாலும், அதை cover story-ஆக போட்டு காசு பார்த்தவர்கள் தானே நம் பத்திரிக்கைகள். எல்லாம் அந்த பத்திரிக்கைகளின் புண்ணியம். சரி! வாங்கிப் படிக்கிறவர்களுக்கு அறிவு இல்லையா என்று கேட்கலாம். ஐயா, மனித மனம், நீங்களாக இருந்தாலும் அல்லது நானாக இருந்தாலும், நல்லதை விட கெட்டதை தேடிப் போகும் குணம் உடையது சாரே. குழந்தையிடம் நெருப்பை தொடாதே என்று சொன்னால் அது தொடாமல் இருக்குமா? (நான் சப்பைக் கட்டு கட்டவில்லை. ஆனால், இது தான் உண்மை).

உதாரணமாக, நெற்றிக்கண் பத்திரிக்கையில் வந்த ஒரு வாரத்திய cover story. அது, ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட கால கட்டத்தில் வந்தது. “ஜெயேந்திரர் விஜயேந்திரர் லோடு ஏற்றிய பெண்கள் லிஸ்ட்” – இது தான் அந்த தரங்கெட்ட பத்திரிக்கையின் ஒரு வாரத்திய cover story. இந்த வாக்கியமே அந்த பத்திரிக்கையின் அட்டைப்படத்தினை அலங்கரித்தது. ஜெயேந்திரர் விஜயேந்திரர் யாராகவும் இருக்கட்டும். அவர்கள் எந்த மத்தத்தின் தலைவராகவும் இருக்கட்டும் அல்லது இல்லாமல் போகட்டும். அவர், குற்றவாளியா இல்லையா என்று, இந்த பக்கம் எழுதிக்கொண்டிருக்கும் வரையில், நமக்குத் தெரியாது. ஆனால், அவகளைப் பற்றி வந்த ஒரு cover story இது. கேவலமாக இல்லை?

மாலைப் பத்திரிக்கைகள் இன்னும் ஒரு படி மேலே. அதுவும், எங்காவது ஒரு கற்பழிப்பு நடந்துவிடக் கூடாது. அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் (அடக்கடவுளே). கற்பழிப்பு எப்படியெல்லாம் நடந்தது (“கதற கதற”, “விரட்டி விரட்டி”), அதன் கொடுமை என்ன என்று நம் கண் எதிரே கொண்டுவந்து நிருத்துவதற்கு அவர்கள் விவரிக்கும் பாங்கு இருக்கிறதே…அடடா! நாளெல்லாம் சொல்லி சொல்லி புளங்காகிதம் அடையலாம்.

அட! இந்த புலனாய்வுப் பத்திரிக்கை தான் இப்படி என்றால், வார நாளிதழ்கள்? முன்னொரு காலத்தில், சிறு வயதில் (ஆம்…கனவேதான்) ஆனந்த விகடன் வாங்கினால், அந்த வார cover story-யை அட்டைப்படமாக பிரசுரிப்பார்கள். எதாவது ஒரு குடும்பத்தின் குழு புகைப்படம் / cover story-க்கு ஏற்றவாறு ஏதேனும் இருக்கும். (மற்றும் ஒரு அட்டைப்பட ஜோக் நிச்சயம் இருக்கும். முதலில் புத்தகம் கைக்கு வந்தவுடன், அதைத்தான் விரும்பிப் படிப்பேன்). ஹூம்…இப்பொழுது? கண்டிப்பாக எதாவது ஒரு நடிகையின் (நமீதா அல்லது நவ்யா நாயர்) புகைப்படம் தான் பளிச்சிடுகிறது. குமுதம்? கேட்கவே வேண்டாம். அதன் நடுப்பக்கமே அந்த புத்தகத்தைப் பற்றி சொல்லிடுமே. Circulation சரியும் பொழுதெல்லாம் நிச்சயம் “ஒரு நடிகையின் கதை”-யை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

இங்கு தான் இப்படியென்றால், போன வாரம் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். அங்கே ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையில் வந்தது “மானக்கெட்ட குமாரசாமியும் அவர் ஆட்சியும்” என்று. இதை தமிழ்நாட்டில் பிரசுரிக்க அந்த பத்திரிக்கைக்கு தைரியம் இருக்குமா என்று எனக்குள் நானே எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.

இவையெல்லாம் circulation சம்பந்தப்பட்டவை. ஆனால், இந்த சன் டி.வி-யும் ஜெயா டி.வி-யும் போடும் சண்டை இருக்கிறதே…நான் குறிப்பிடுவது நேரிடையான சண்டை மட்டும் இல்லை. மறைமுகமாகவும். ஒரு cheap-ஆன உதாரணம். டிசம்பர் 26, 2004 ஆழிப் பேரலை (சுனாமி) வந்த அன்று, சன் டி.வி-யில் அதன் பாதிப்புகளை காண்பித்துக் கொண்டு வந்ததார்கள். ஒரு மருத்துவமனையில் ஒரு தாய் இறந்து போன தன் குழந்தையை நிமிர்த்தி உட்கார வைத்து அழுது கொண்டு இருந்தார்கள். இது செய்தி. சற்று நேரம் கழித்து ஜெயா டி.வி.யில் அதே செய்தி. அதே மருத்துவமனையில். அதே தாய். ஆனால், இந்த தடவை, ஜெயா டி.வி.காமிராமேன் காட்டிய visual-லில் ஒரு அமைச்சரும் இருக்கிறார் (வேற angle). சன் டி.வி. செய்தி சேகரிக்கும் செய்தியாளர் அந்த நேரத்தில் அமைச்சரை ஏன் காட்டவில்லை? இதை இங்கே சொல்லவே நா கூசுகிறது.

இங்கே குறிப்பிடப்படாத பத்திரிக்கைகள் எல்லாம் யோகியமானவை இல்லை. பக்கம் போதாதே என்று தான் குறிப்பிடவில்லை.

இந்த பத்திரிக்கைகளுக்கு தேவை எல்லாம், circulation, circulation, circulation. அதைத் தவிர வேறெதுவும் இல்லை. தற்சமயம் பாருங்கள், இத்தகைய cover story எல்லாம் (தற்போதைக்கு) காணாமல் போய்விட்டன. காரணம் “Election” சாரே. இந்த தேருதலுகான்டி முடியட்டும், அப்பால சும்மா இன்னா சவுண்டு குடுத்து அடிக்கிறாங்கோன்னு கண்டுக்கோங்கோ…

Entry Filed under: Uncategorized. .

23 Comments Add your own

  • 1. Chandravathanaa  |  மார்ச் 6, 2006 at 11:06 பிற்பகல்

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் சீனு.

    பதில்
  • 2. Chandravathanaa  |  மார்ச் 6, 2006 at 11:06 பிற்பகல்

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் சீனு.

    பதில்
  • 3. Sivakumar  |  மார்ச் 8, 2006 at 7:55 மு.பகல்

    உண்மையிலே நல்ல பதிவு.

    நடிகை படம் போடவில்லை என்றால் எவன் வாங்குரான் சொல்லு. படிப்பவனின் ரசனையும் நீ சொல்லி இருக்கலாம்.

    பதில்
  • 4. Sivakumar  |  மார்ச் 8, 2006 at 7:55 மு.பகல்

    உண்மையிலே நல்ல பதிவு. நடிகை படம் போடவில்லை என்றால் எவன் வாங்குரான் சொல்லு. படிப்பவனின் ரசனையும் நீ சொல்லி இருக்கலாம்.

    பதில்
  • 5. சீனு  |  மார்ச் 9, 2006 at 9:11 மு.பகல்

    //நடிகை படம் போடவில்லை என்றால் எவன் வாங்குரான் சொல்லு//

    என்ன சிவா, சந்தியா அட்டைப்படம் வந்ததுங்கிறதுக்காக நானே ஒரு நாள் சாவி புத்தகம் வாங்கலியா?

    பதில்
  • 6. சீனு  |  மார்ச் 9, 2006 at 9:11 மு.பகல்

    //நடிகை படம் போடவில்லை என்றால் எவன் வாங்குரான் சொல்லு//என்ன சிவா, சந்தியா அட்டைப்படம் வந்ததுங்கிறதுக்காக நானே ஒரு நாள் சாவி புத்தகம் வாங்கலியா?

    பதில்
  • 7. KK  |  மார்ச் 29, 2006 at 1:20 பிற்பகல்

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற தலைப்பில் நான் வெகுநாட்களாய் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. உங்கள் பதிவை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி, நாம் நினைத்துக்கொண்டிருந்ததை ஒருவர் எழுதிவிட்டாரென்று..

    சிவக்குமார், இன்னமும் நம் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தேடுவதிலோ தேர்ந்தெடுப்பதிலோ நேரத்தை செலவிடுவதில்லை.. கையில் கிடைப்பதைக் கொண்டு காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அதோடு, மக்களின் ரசனையை மாற்ற வேண்டிய கடைமை ஊடகங்களுக்கு உண்டு.

    பதில்
  • 8. KK  |  மார்ச் 29, 2006 at 1:20 பிற்பகல்

    ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற தலைப்பில் நான் வெகுநாட்களாய் கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. உங்கள் பதிவை பார்த்தவுடன் ஒரு மகிழ்ச்சி, நாம் நினைத்துக்கொண்டிருந்ததை ஒருவர் எழுதிவிட்டாரென்று.. சிவக்குமார், இன்னமும் நம் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தேடுவதிலோ தேர்ந்தெடுப்பதிலோ நேரத்தை செலவிடுவதில்லை.. கையில் கிடைப்பதைக் கொண்டு காலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அதோடு, மக்களின் ரசனையை மாற்ற வேண்டிய கடைமை ஊடகங்களுக்கு உண்டு.

    பதில்
  • 9. Doondu  |  மே 5, 2006 at 4:35 மு.பகல்

    உங்களை அவமதிக்கும்படி நாங்கள் எழுதிய பதிவை அழிக்க முடிவு செய்துள்ளோம். வருந்துகிறோம்.

    பதில்
  • 10. Doondu  |  மே 5, 2006 at 4:35 மு.பகல்

    உங்களை அவமதிக்கும்படி நாங்கள் எழுதிய பதிவை அழிக்க முடிவு செய்துள்ளோம். வருந்துகிறோம்.

    பதில்
  • 11. தமிழ் குழந்தை  |  மே 5, 2006 at 11:23 மு.பகல்

    மிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

    பதில்
  • 12. தமிழ் குழந்தை  |  மே 5, 2006 at 11:23 மு.பகல்

    < HREF="http://tamilchild.blogspot.com/" REL="nofollow">த<>< HREF="http://tamilsiruvan.blogspot.com/" REL="nofollow">மி<>< HREF="http://tamilsamayalrushi.blogspot.com/" REL="nofollow">ழ்<> < HREF="http://aanmekam.blogspot.com/" REL="nofollow"> தக<>< HREF="http://tamilpothuarivu.blogspot.com/" REL="nofollow">வல்<> தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

    பதில்
  • 13. செயபால்  |  ஜூன் 1, 2006 at 6:13 பிற்பகல்

    அட போங்கையா. நீங்கள் இந்தியாவின் தூண்களைப் பற்றிச் சொல்ல்கிறீர்கள். சிறீ லங்கா வில் எல்லாமே சரிந்து இப்பொழுது சனநாயகம் ஆவி போல் மிதந்து கொண்டு தானிருக்கிறது.

    பதில்
  • 14. செயபால்  |  ஜூன் 1, 2006 at 6:13 பிற்பகல்

    அட போங்கையா. நீங்கள் இந்தியாவின் தூண்களைப் பற்றிச் சொல்ல்கிறீர்கள். சிறீ லங்கா வில் எல்லாமே சரிந்து இப்பொழுது சனநாயகம் ஆவி போல் மிதந்து கொண்டு தானிருக்கிறது.

    பதில்
  • 15. சீனு  |  ஜூன் 1, 2006 at 7:11 பிற்பகல்

    நன்றி தமிழ் குழந்தை, ஜெயபால்.

    ஜெயபால்,
    உங்கள் துக்கம் ஒரு சகோதரனாய் எனக்கும் புரிகிறது. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

    பதில்
  • 16. சீனு  |  ஜூன் 1, 2006 at 7:11 பிற்பகல்

    நன்றி தமிழ் குழந்தை, ஜெயபால்.ஜெயபால்,உங்கள் துக்கம் ஒரு சகோதரனாய் எனக்கும் புரிகிறது. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

    பதில்
  • 17. Thekkikattan  |  ஜூன் 1, 2006 at 8:13 பிற்பகல்

    ஹீம்… வித்தியாசமான விசயசங்களை கூர்ந்தாய்ந்து இங்கு படைப்பதற்கு மிக்க நன்றி, சீனு. மக்களிடம் போய்ச் சேர்ந்தால் சந்தோஷமே!

    அருமை, அருமை!

    பதில்
  • 18. Thekkikattan  |  ஜூன் 1, 2006 at 8:13 பிற்பகல்

    ஹீம்… வித்தியாசமான விசயசங்களை கூர்ந்தாய்ந்து இங்கு படைப்பதற்கு மிக்க நன்றி, சீனு. மக்களிடம் போய்ச் சேர்ந்தால் சந்தோஷமே!அருமை, அருமை!

    பதில்
  • 19. செயபால்  |  ஜூன் 1, 2006 at 8:44 பிற்பகல்

    உங்கள் அன்புக்கு நன்றி சீனு.
    சிறீலங்காவின் சனநாயம் ஆவியாச் சுத்துறதால தமிழர் தான் பாதிக்கப் படுகிறது. அந்த ஆவி தமிழரைத் தான் துரத்துது.
    எங்கள் துயரம் எல்லாம், எங்களை, எங்கடை பிரச்சனையைப் பார்க்க ஒருத்தரும் விடுகிறார்களில்லையே என்பது தான். ம்ம்ம் எத்தனை காலத்துக்குத் தான் இது. நாளை நிச்சயம் நமக்காக விடியும்.

    பதில்
  • 20. செயபால்  |  ஜூன் 1, 2006 at 8:44 பிற்பகல்

    உங்கள் அன்புக்கு நன்றி சீனு.சிறீலங்காவின் சனநாயம் ஆவியாச் சுத்துறதால தமிழர் தான் பாதிக்கப் படுகிறது. அந்த ஆவி தமிழரைத் தான் துரத்துது.எங்கள் துயரம் எல்லாம், எங்களை, எங்கடை பிரச்சனையைப் பார்க்க ஒருத்தரும் விடுகிறார்களில்லையே என்பது தான். ம்ம்ம் எத்தனை காலத்துக்குத் தான் இது. நாளை நிச்சயம் நமக்காக விடியும்.

    பதில்
  • 21. சீனு  |  ஜூன் 2, 2006 at 1:51 பிற்பகல்

    //எத்தனை காலத்துக்குத் தான் இது. நாளை நிச்சயம் நமக்காக விடியும். //

    நிச்சயம் ஜெயபால். நம்பிக்கை தானே வாழ்க்கையை வாழ வைக்கிறது.

    இதப் படிங்க.
    எவர் தடுத்தாலும் தமிழீழம் அமைவதை தடுக்கமுடியாது.

    பதில்
  • 22. சீனு  |  ஜூன் 2, 2006 at 1:51 பிற்பகல்

    //எத்தனை காலத்துக்குத் தான் இது. நாளை நிச்சயம் நமக்காக விடியும். //

    நிச்சயம் ஜெயபால். நம்பிக்கை தானே வாழ்க்கையை வாழ வைக்கிறது.

    இதப் படிங்க.
    எவர் தடுத்தாலும் தமிழீழம் அமைவதை தடுக்கமுடியாது.

    பதில்
  • 23. arunachalam  |  மார்ச் 17, 2008 at 5:47 மு.பகல்

    arumai.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

Kannan மேல் இந்து மதம் Vs மூட நம்பிக்…
sivaji rasigan மேல் சிவாஜி கணேசன் – ஒரு…
சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்

சுவடுகள்

Blog Stats