Archive for மே, 2006
இது உங்கள் சொத்து – மறுக்கா மறுக்கா படி
சில நாட்களுக்கு முன் தற்செயலாய், வேகமாய் சேனல் மாற்றும் பொழுது, ஒரு கணம் பொதிகையை கடந்தேன். அட தெரிந்த முகம் என்று ஒரு நிமிடம் நின்று பார்த்தேன். நம்ம நித்யஸ்ரீ மகாதேவன். தன் பாட்டி பட்டம்மாவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பாட்டியின் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. சில பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். வாழ மீனை கேட்கும் இடையில், இதையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்று தோன்றியது. சில நிமிடங்கள் அந்தப் பேட்டியையும், பேத்தியையும், அவர்கள் பாடிய பாடல்களையும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.
விளம்பரங்களுக்கு நடுவே ஓடும் கள்ள உறவு + அழுகை மெகா தொடர்கள், “வண்கம்” தங்கிலீஷ் காம்பியர்கள், “நகைச்சுவை” செய்திகள்(?), சினேகாவுடன் உங்கள் சாய்ஸ், “வக்கிரமான jokes”-வுடன் லொள்ளு சபா, “சும்மா இருக்காத, அம்மா தான் எல்லாம்” என்ற டயலாக்கைக் கூட mute செய்த சன் டி.வி. கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளின் இறைச்சலில் நாம் ரொம்ப miss பண்ணின வகையராக்களில் இருந்தது அந்த நிகழ்ச்சி. பேட்டி கொடுத்த அந்த பாட்டியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி, பெருமிதம். ஒரு குழந்தையாய் மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏதோ நம் சொந்த பாட்டியைடம் பேசிக் கொண்டிருந்ததை போன்ற ஒரு உணர்வு. ஆனால், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மற்ற சேனல்களில் பார்க்க முடிவதில்லை. காரணம், எந்த நிகழ்ச்சியும் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. பொதிகை சேனல் நட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது (ஏன் ஓடாது?). அவர்களுக்கென்ன, அரசாங்கம் பார்த்துக் கொள்கிறது. பொதிகை லாபம் ஈட்டினால் என்ன? நட்டம் ஈட்டினால் என்ன? மாதச் சம்பளம் வந்துவிடுகிறது.
+2 தேர்வு முடிவுகள் வந்தது. பொதிகையில் இன்றும் தற்செயலாய் கண்டது. +2 தவறியவர்கள் தற்கொலை கூடாது என்று கவுன்சிலிங் வழங்கப்பட்டது. வழங்கியவர் கிரீஷ் கர்னாட். இதனை மற்ற எந்த சேனலும் செய்யவில்லை. அவர்களுக்கு வேண்டியது TRP ratings, அவ்வளவே. கிரிக்கெட் பார்ப்பதற்கு மட்டும் பொதிகையை tune செய்கிறோம். மற்ற நேரத்தில்?
இது பொதிகை-யோடு நின்றுவிடுவதில்லை. அரசாங்கத்தின் எந்த ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் இதே நிலை தான். எத்தனை தனியார் பேருந்துகள் கிராமத்திற்கு போகின்றன? பேருந்தே நுழைய முடியாத கிராமத்தில் கூட அரசாங்க பேருந்துகள் நட்டத்திற்கு போய் வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகள் நிலைமை என்ன? லாபம் வரக்கூடிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்து திருச்சி – தஞ்சாவூர் வழித்தடத்தின் permit விலை மட்டுமே கோடியை தாண்டும். எங்கள் ஊரிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகளில், தனியார் பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம், கொண்டு சேர்க்கும் வேகம். ஆனால், உண்மை அதுவல்ல. திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா பின் வேலூர் செல்லவேண்டும். திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி வரை மிக வேகமாம சென்று, சில நிமிடங்களுக்கு வாணியம்பாடியில் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். அதேபோல, வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு வேகமாக சென்று, பின் ஆம்பூரில் 15-25 நிமிடம் கூட்டம் சேர்க்க நிறுத்திவிடுவார்கள். ஆனால், மக்கள் அந்த பேருந்துகள் தான் வேகமாக சேர்க்கிறான் என்று கூட்டம் கூடும். இங்கே பொதுமக்கள் உயிர் தான் பணயம் வைக்கப்படுகிறது. (ஒரு முறை சென்று பார்த்தால் இதை உணரலாம்).
நான் ஒரு BSNL எண் வைத்துள்ளேன். பெங்களூரில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டு நகரமெங்கும் ஒரே பரபரப்பாயிருந்தது. அப்பொழுது BSNL-ல் இருந்து ஒரு குறுந்தகவல். அது நகரத்தில் ஒரு வதந்தி பரவியிருப்பதாகவும், அதை நம்ப வேண்டாமென்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டிருந்தது. Caller tunes-க்காக சும்மா சும்மா குறுந்தகவல் அனுப்பி தொந்தரவு செய்யும் தனியார் செல் நிறுவனங்கள் அன்று எங்கே போயிருந்தன? அலுவலகத்தில் எனக்கொரு கைபேசி கொடுத்திருக்கிறார்கள். அதனால், அந்த BSNL எண்ணை திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று கூட யோசித்திருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, செலவானாலும் அந்த எண்-ஐ அப்படியே வைத்து, இரண்டு கைபேசியையும் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நாமெல்லாம் என்ன செய்கிறோம். தனியார் பேருந்துகள் சினிமா போடுகிறான் என்று அந்த வண்டியில் தானே ஏறுகிறோம்? அரசாங்க சேவை என்றாலே அது கிராமத்து மக்களுக்கு என்றல்லவா நினைக்கிறோம். தனியார் நிறுவனங்களின் சேவை என்றால் ஓடிப்போய் வாங்குகிறோம். நமக்காக இருக்கும் அரசாங்க பொருட்களையும் உபயோகிப்போமே? எத்தனை பேர் காதி வஸ்திராலயத்தில் வாங்குகிறோம்? அல்லது, Cooptex-ல் துணி எடுக்கிறோம். மற்ற கடைகளில் 10 துணிகள் வாங்கினால், Cooptex-ல் ஒன்றாவது வாங்குவோமே. அந்த கைத்தரியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கும்.
நம் அரசாங்கம் அளிக்கும் சேவைகளில் பல குறைகள் இருக்கின்றன. சேவைகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை தான். ஒத்துக் கொள்கிறேன். அதை படிப்படியாக மாற்றவேண்டுமே தவிற தவிர்க்க கூடாது. ஒரு பேச்சுக்கு, சென்னையின் தெருக்களில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் என்ன நடக்கும் நினைத்துப் பாருங்கள். திருச்சியில் தனியார் நகரப் பேருந்துகளுக்கு அனுமதி உண்டு. அங்கே இருக்கும் போட்டியில், மக்களில் உயிர் பணயம் வைக்கப்படுகின்றது. வாகனங்கள் தறிகெட்டுப் ஓடுகின்றன. இந்த நிலை தான் சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதித்தால் நிகழும். வெறும் வியாபார நோக்கம் மட்டுமே அங்கு முன்னிறுத்தப்படும். மக்கள் சேவை பின்னிறுத்தப்படும்.
ஒரு நாள் மட்டும் எல்லா சேனல்களையும் நிறுத்தி அனைவரும் பொதிகை மட்டுமே பார்க்க வேண்டும் என்று கொண்டு வந்தால் தெரியும் நம் அரசாங்கத்தைப் பற்றி.
9 comments மே 31, 2006

20 comments மே 31, 2006
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!???
எனக்கு கொஞ்ச நாளாவே ஒன்னு நடக்குது. அத அப்படி பகிர்ந்துக்கிறதுன்னு தெரியல. இருந்தாலும் சொல்லிபுடுறேன்.
நான் கையில் கடிகாரம் கட்டும் வழக்கம் இல்லாதவன். கையில் இருக்கும் கைபேசி-ல் (கரீகிட்டு தானே?) Screen Saver வைத்து மணியைப் பார்த்துக் கொள்வேன். எல்லாமே நல்லா தான் போய்ட்டிருக்கு. ஆனால், ஒரு 2-3 மாதங்களாகவே நான் நேரம் பார்க்கும் நேரத்தில் தான் பிரச்சினையே. அதாவது, நான் நேரம் பார்க்கும் பொழுதெல்லாம் நான் காணும் நேரம் “பெரும்பாலும்” magic numbers-ஆகவே உள்ளது. இதோ இப்பொழுது எழுதும் வரை.
உதா, 12:00, 02:00 etc. அதுவும் சில சமயம் 11:33, 12:12 இப்படியெல்லாம் நேரம் தெரிகிறது (அல்லது, அந்த நேரத்தில் நான் பார்க்கிறேன்). இது எப்பொழுதாவது ஒருமுறை என்றால் பரவாயில்லை. ஆனால், நான் நேரம் பார்க்கும் சமயங்களில் பெரும்பாலும் (65-75%) இப்படித்தான் தெரிகிறது. ஒரு சில சமயங்களில் 11:11, 09:09 கூட காட்டும். இத வெளியில் சொல்ல முடியல. காரணம், இது ஒரு வித்தியாசமான பிரச்சினையா(!) இருக்கு. நானும் probability எல்லாம் யோசிச்சு பாத்துட்டேன். ம்ஹூம், ஒன்னும் பயனில்லை. சரி! atleast இத பகிர்ந்துக்கலாமேன்னு தான் இந்தப் பதிவு. (ஒரே குஷ்டமப்பா…இது கஷ்டமப்பா).
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!!??? யாருக்காவது தெரியுமா? (என்ன சொல்லி நான் எழுத?)
12 comments மே 30, 2006

22 comments மே 29, 2006
மதுமிதா. ஆமா! என்னய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?
வலைப்பதிவர் பெயர்: சீனு
வலைப்பூ பெயர் : கோழி கிறுக்கல், நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்
சுட்டி(url) : http://jeeno.blogspot.com, http://sirippu.blogspot.com
ஊர்: திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: சிவா
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல், 30, 2004 – வெள்ளிக்கிழமை – ஒரு சுபயோக சுபதினத்தில் (அல்ல என்று நினைக்கிறேன்)
இது எத்தனையாவது பதிவு: 43
இப்பதிவின் சுட்டி(url): http://jeeno.blogspot.com/2006/05/blog-post_114864490405041429.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழ். கடைசியாக கல்லூரி பரீட்சையில் எழுதியது. வேறு எங்கேயும் தமிழை காணவில்லை. சரி! அப்புறம் தமிழே மறந்திடும்னு நினைச்சப்போ, சிவா சொல்லி இந்த தளம் தெரிந்தது.
சந்தித்த அனுபவங்கள்: நான் பெரும்பாலும் நல்ல விசயம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பித்தேன்.
பெற்ற நண்பர்கள்: பெரும்பாலும் முகமற்ற நண்பர்கள்.
கற்றவை: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அது படிக்கிறவர் தலையெழுத்து
(ஆனால், நாகரீகமாக எழுதவேண்டும் என்பது எனக்கு நானே போட்டுக் கொண்ட வேலி!)
இனி செய்ய நினைப்பவை: தினமும் நான் காண்பவையையும், கேட்பவையையும், தெரிந்ததையும், அறிந்ததையும் கிறுக்கவேண்டும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: “This Glass Is Half Full”-ன்னு நினைக்கிற பார்ட்டி. இப்போதைக்கு நாத்திகவாதி. அப்படியே இருப்பேன் என்று நம்புறேன். நகைச்சுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னைச்சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருப்ப முயற்சிப்பேன்.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
இந்த அறிவியல் அளித்திருக்கும் இந்த இணையத்தை ஆக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் என்பதே என் விருப்பம். தேவையில்லாமல், தனி மனித துவேசங்களும், சாதி மதத் தூற்றல்களும் தான் இருக்கின்றன. Of course, கலகம் பிறந்தால தான் நியாயம் கிடைக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால், இங்கே தான் தமிழனின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்து இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எரியவேண்டும். (அட! நீங்க கேட்டப்புறம் தான் என்னைப்பற்றி ஒரு முறை யோசிக்க நேரமும், காலமும் கிடைத்தது. நன்றி!!). Life is Once! Live it…Peacefully!!
4 comments மே 26, 2006

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: “This Glass Is Half Full”-ன்னு நினைக்கிற பார்ட்டி. இப்போதைக்கு நாத்திகவாதி. அப்படியே இருப்பேன் என்று நம்புறேன். நகைச்சுவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னைச்சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.

சென்னையில் சினிமா
சென்னையைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டாயிற்று. அதிலே, சென்னையில் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைத்திருந்தேன்.
சென்னை தென்னிந்தியாவின் தலைநகரம் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவின் தலைநகரமும் கூட. இதுக்கு முக்கியமாக இந்தியை உள்ளே விடாததும் ஒரு காரணம்னு “நான்” நினைக்கிறேன். இதை விட முக்கியமான காரணம், சினிமாவை அதீதமாக நேசிக்கும் மக்கள். அதனால் தான் தமிழகத்துக்கு ஐந்து முதல்வர்களை (அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா) தமிழ் சினிமா உலகில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறோம். அப்புறம் விஜயகாந்த் கிளம்பியிருக்கிறார். (இதில் அண்ணாவும், கலைஞரும் சினிமாவினால் புகழடைந்தவர்களில்லை. பொதுவாழ்விற்கு வந்து பின் சினிமாவில் கால்பதித்தவர்கள்).
சரி! விசயத்திற்கு வருகிறேன். சென்னையில் சினிமா பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். சினிமாவை (மற்றும் கிரிக்கெட்டை) நுட்பமாக ரசிப்பதில் சென்னை ரசிகர்கள் ஒரு படி மேலே தான். பெங்களூரில் பல படங்களை, தேமே என்று அரங்கத்தில் ஒரு சலணமும் இல்லாமல் பார்த்திருக்கிறேன். சென்னை சினிமா அரங்குகளை மூன்று விதமாக பிரிக்கலாம், A, B, C என்று. இவை ரசிகர்கள் மற்றும் cost பொருத்து. A என்றால், சத்யம் வளாகம், மாயாஜால், அபிராமி போன்றவை. நான் பெரும்பாலும் போவது / விரும்புவது B தான் (சத்யம்-ல் தேவையான படத்திற்கு டிக்கட் கிடைப்பதில்லை). B என்றால் தேவி வளாகம், ஆல்பர்ட் / பேபி ஆல்பர்ட், உட்லாண்ட்ஸ் / உட்லாண்ட்ஸ் சிம்பொனி, சாந்தி, உதயம் வளாகம் போன்றவை. பெரும்பாலும் போவது திருவல்லிக்கேணி மற்றும் அதன் சுற்றில் உள்ள அரங்குகளுக்கு தான்.
தேவிக்கு சென்றால், பெரும்பாலும் டிக்கெட் கறுப்பில் தான் (கலர் அல்ல) கிடைக்கும். “பட்டியல்” படத்திற்கு முதல் நாள் சென்றேன். 50ரூ டிக்கட் 150ரூ என்றார். அந்த 150 ரூபாயை அப்படியே எடுத்து சென்று ஆயிரம் விளக்கில் உள்ள சரவணபவனில் சென்று 1 தட்டு இட்லி, 1 தோசை மற்றும் ஒரு காபிக்கு (மட்டும் 22.50/-) கொடுத்தேன். (இதுக்கு பேசாம படத்துக்கே போயிருக்கலாமோ???). நான்/நாங்கள் தேவியில் பார்த்த பல படங்களுக்கு கறுப்பில் தான் டிக்கட். அப்புறம் பார்க்கிங் தொல்லை. இரண்டு சக்கர வாகனங்களுக்கு 10ரூ அழ வேண்டும் (சத்யமிலும் தான்). ஒழுங்காக நிறுத்த வில்லை என்றால், அங்கிருக்கும் organiser-க்கு கோபம் வரும். “சார்! ஓரமா தான் நிருத்துங்களேன். இப்படி நிறுத்துனா எப்படி?” என்று கடுகடுப்பார். (அப்புறம் அவர் எதற்கு?). இதே காட்சி தான் பெரும்பாலான B அரங்குகளில். ஒரு வழியாக இருப்பிடம் தேடிப் பிடித்து செட்டில் ஆவோம்.
இது போன்ற படங்களுக்கு, அதுவும் வார இறுதியில், வருவது பெரும்பாலும் இளைஞர்கள். அதுவும் இரவுக் காட்சி என்றால் கேட்கவே வேண்டாம். படத்தில் நல்ல காட்சிகள் வந்தால் கட்டாயம் கைத்தட்டல்கள் கிடைக்கும். சில நேரங்களில் நக்கலுடன். “ராம்” படத்திற்கு சென்ற பொழுது, ஆல்பர்ட்-ல், படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் பின்னனி இசைக்கு எழுந்த கைத்தட்டல்கள். அதே போல சத்யம்-ல் “Narnia” போயிருந்தேன். படம் பேர் போடும் பொழுது ஒரு மரங்களடர்ந்த பகுதியில் இரயில் போகும். அப்பொழுது காமெரா கூடவே Top angle-ல் பயனிக்கும். அந்த ஒளிப்பதிவும், காமெரா கோனமும், பின்னனி இசையும் பரவசமூட்டுவதாக இருந்தது. அந்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு “ஓ” போடனும் போல இருந்தது. நான் நினைத்த அதே நேரத்தில் அந்த காட்சிக்கு ஒரே கைத்தட்டல்.
ஒரு சனி இரவு, தேவி வாசலில், எந்த படத்திற்கு போகலாம் என்று நின்றுகொண்டிருந்தோம். எங்களைப் போலவே இன்னொரு குழுவும். எல்லா படமும் புதுசு. எதை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம். “எந்த படத்தையும் நம்ப முடியாது. ‘அறிந்தும் அறியாமலும்’ போகலாம். Atleast, படம் நல்லா இல்லேன்னாலும் music ஆவது நல்லா இருக்கும்” என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். சரின்னு நாங்களும் அதே படத்துக்கு போனோம். நல்ல வேளை, எதிர்பார்த்த மாதிரியே படமும் நன்றாக இருந்தது. உட்லாண்ட்ஸ்-ல் ‘கள்வனின் காதலி’. படத்தின் இறுதியில் அந்த படத்தின் இயக்குனர் தமிழ்வாணன் (மொதல்ல பேர மாத்துங்க, மானம் போகுது) வந்து தமிழ் கலாசாரத்தின் பெருமைகளை (யாரு சொல்லுறதுன்னு வெவஸ்தை இல்லாமல்) சொல்லுவார். அந்தக் காட்சிக்கு அரங்கில் ஒரே நக்கல் சிரிப்பு. இதில் விசேடம் என்னவென்றால், அனைவரும் ஒரே அலைவரிசையில் இருப்பது தான். அதே உட்லாண்ட்ஸ்-ல் ஒரு முறை Time Killing attitude-லேயே ‘கணா கண்டேன்’ சென்றோம். அதை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், கே.வி.ஆனந்த் தான் இயக்குனர் + ஒளிப்பதிவாளர் என்று. அங்கே வந்த ஒருவர் எங்களிடம், தானும் கே.வி.ஆனந்த்-ன் ஒளிப்பதிவிற்காக தான் அந்த படம் பார்க்க வந்ததாக கூறினார். (ஆனால், இந்த படத்தின் ஒளிப்பதிவாளார், கே.வி.ஆனந்த்-ன் உதவியாளராக இருந்த செளந்தரராஜன் என்பவர்). இதே போல, பல technical விசயங்களையும் அறிந்தவர்கள் சென்னை ரசிகர்கள். இதை நானே கேட்டிருக்கிறேன். “அகிலா கிரேன்”, “அந்நியன்-ல் time-freeze கேமரா” போன்றவற்றை பற்றி அலசுபவர்களை பார்க்கலாம்.
ஒரு படம் பார்க்கும் பொழுது, அதை ரசிப்பதற்கு சுற்றி இருக்கும் ரசிகர்களும் ஒரு முக்கியமான காரணம். இதை நான் உணர்ந்தது “மும்பை எக்ஸ்பிரஸ்” பார்க்கும் பொழுது. நான் பார்த்தது சத்யம்-ல். 50ரூ டிக்கட் 100ரூ. கோடை விடுமுறை. குடும்பத்துடன், மற்றும் சிறுவர்கள் கணிசமாக இருந்தனர். சாதாரணமாக ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் சிரிப்பது, எனக்கும் சிரிப்பை வரவழைத்தது. இந்த படத்தை, வேறொரு சூழலில் பார்த்தால், கண்டிப்பாக அறுவையாக தான் இருந்திருக்கும். ஆனால், “மும்பை எக்ஸ்பிரஸ்”-ஐ அந்த சூழலில் பார்த்ததால், எனக்கு அது ஒரு அருமையான நகைச்சுவைப் படமாகத் தெரிந்தது (இப்போதும் தான்). ஆனால், மற்றவர்கள் அதை சுலபமாக அறுவை என்று சொல்லிவிடுவார்கள். அதனால் தான், திருட்டு VCD-ல் பார்ப்பவர்கள் அந்தப் படங்களின் originality-ஐ இழக்கிறார்கள். இப்படி technical-ஆக நன்றாக கொடுத்தாலே திருட்டு VCD-ஐ கட்டுக்குள் கொண்டு வரலாம்.
17 comments மே 23, 2006

35 comments மே 23, 2006
உதிரிப்பூக்கள், அறுவடை நாள்
சமீபத்தில் நான் பார்த்த இரண்டு படங்கள். “உதிரிப்பூக்கள்” மற்றும் “அறுவடை நாள்”. இரண்டுமே இளையராஜா இசையமைத்த படங்கள். இந்த இடுகை அந்த இரு படங்களின் தலைப்பைப் (Title) பற்றி. முதலில் கதையை பார்ப்போம். அப்பொழுதுதான் இந்த தலைப்புக்கள் அந்தப் படங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது எனத் தெரியும்.
1) உதிரிப்பூக்கள்
இது மகேந்திரனின் வெற்றிப் படைப்புகளில், மற்றும் தமிழ் சினிமாவின் வரலாற்றில், மிக முக்கியமான இடம் பெற்ற படம். 1977-ல் வெளிவந்து 175 நாட்களைக் கடந்து, அதை விட முக்கியமாக, பல பாராட்டுக்களைப் பெற்ற படம். இந்தப் படத்தில் ஊர் பெரிய மனிதர் விஜயன். அவர் மனைவி அசுவினி, இரண்டு குழந்தைகள் அஞ்சு, ஹாஜா ஷெரீப், தங்கை செண்பகம், தந்தை சாருஹாசன். கணவன் செய்யும் அக்கிரமங்களை எதிர்க்கத் திராணியில்லாதவர் அசுவினி. விஜயனின் தம்பி பூபதியே அண்ணனுக்கு எதிரானவன். மைத்துனியின் மேல் மோகங் கொண்டு நோய்வாய்ப்பட்ட அஸ்வினியையும், மாமனாரையும் மிரட்டுகிறார் சுந்தரவடிவேலு. மாமனார் மறுத்துவிட, வேறொருத்தியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்கிடையில் அசுவினியும் இறந்து விடுகிறாள். சுந்தரவடிவேலு நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் செண்பகம் மீது காதல் வசப்பட, சாருஹாசன் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். திருமணத்துக்கு முந்தைய தினம், அக்காவின் குழந்தைகளை தானே வளர்க்க அனுமதி கேட்க, சுந்தர வடிவேலுவைப் பார்க்க வரும் போது (அதற்கு முன்னர் தான் கல்யாண மாப்பிள்ளை சுந்தரவடிவேலுவிற்கு பத்திரிக்கை வைத்து, கல்யாணத்திற்கு வரவேண்டாமென்றும், பள்ளியில் நடந்த தில்லு முள்ளுகளுக்காக சுந்தரவடிவேலுவை காவல்துறை கூடியவிரைவில் கைது செய்யும் என்றும் மிரட்டிவிட்டு செல்கிறார்), சுந்தரவடிவேலு அவளை மானபங்கப்படுத்தி விடுகிறார். அவர் (இரண்டாவது) மனைவியும் வீட்டை விட்டு போய்விடுகிறாள். கொதித்து எழும் ஊர்மக்கள், அவருக்கு தண்டனையாக அவரே ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வைத்து விடுகின்றனர்.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், சுந்தரவடிவேலு திருந்தியவராய் “உங்க எல்லோரையும் கடைசியில் நான் என்னைப் போல ஆக்கிட்டேன். அது தான் நான் செஞ்சதிலேயே பெரிய தவறு.” என்று கூறி, குழந்தைகளை அழைத்து, “நல்லா படிக்கனும். அப்பா குளிக்கப் போறேன்” என்று கூறி ஆற்றில் இறங்குகிறார். (இங்கே அனைவரின் முகபாவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது). பின், அனைவரும் சென்றுவிடுகின்றனர். அந்த இரு குழந்தைகள் மட்டும் அப்பா எப்போ வருவார் என்று அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து போகும். ஹாஜா ஷெரீப் அஞ்சுவின் கைகளைப் பிடித்து அழைத்து நடந்து செல்வதாக காட்சி உறையப்பட்டு (freeze) உதிரிப்பூக்கள் என்று title காட்டப்படும். அந்த குழந்தைகள் தான் உதிரிப்பூக்கள். எந்த மாலையிலும் சேராமல், பூசைக்கும் உதவாமல் கிடக்கும் பூக்கள்.
எவ்வளவு அழகான தலைப்பு. படத்திற்கும் கதைக்காகவும் இதை விட சிறந்த தலைப்பு இருக்க முடியுமா? தெரியவில்லை.
பசியுடன் இருக்கும் அஞ்சுவை அழைத்துக் கொண்டு செண்பகம் வீட்டிற்கு செல்லும் ஹாஜா ஷெரீப் “இவளுக்கு பசிக்குதாம்” என்று சொல்லும் பொழுது, கள்ளம் கபடம் இல்லாமல் ஈறுகள் தெரிய சிரிக்கும் அஞ்சு;
தாய் இறப்பது கூட தெரியாமல் அவளின் வளையலை இழுத்து விளையாடும் காட்சி;
“நீங்க மனுஷனே இல்ல”, “பரவாயில்ல”, “இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகனும்”, “பாக்கலாம்” – விஜயன்;
படத்தின் ஆரம்பத்தில் வரும் “எஸ் சார்!”;
– ஆகியன மனதில் நிற்கும் அழகான இடங்கள்.
2) அறுவடை நாள்
இந்த படத்தை சுமார் 8 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தது. அப்பொழுதே ரசித்திருக்கிறேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த படத்தை ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பினார்கள். அட, நல்ல படமாயிற்றே என்று உட்கார்ந்து (சரி! படுத்துகிட்டே) பார்த்தேன். இயக்கம்: G.M. குமார். கதை பழைய கதை தான். ஆனால் கதைக்களமும், திரைக்கதையும் அருமை.
கதைக்களம்: ஒரு கிராமம், ஒரு தேவாலையம், ஊர் பணக்காரர் (அரண்மனை), பிரபு, பல்லவி, ராம்குமார், இந்திரா, வடிவுக்கரசி, முக்கியமாக இளையராசா. படம் flashback-ல் போகிறது. பிரபுவின் தாயார் வடிவுக்கரசியின் பார்வையில் படம் செல்கிறது. இதிலும்(!), ஊர்ப் பெரியவர் அரண்மனை (பெயர் மறந்துவிட்டது), அவர் மகன் பிரபு, வெகுளி. அதட்டி மிரட்டி வளார்க்கப்படுகிறார். ஊருக்கு மருத்துவராக வரும் பல்லவி. ராம்குமார் அந்த ஊரில் இருக்கும் தேவாலய பாதிரியார். பல்லவிக்கு கன்னியாஸ்திரியாக விருப்பம். பிரபுவுக்கும் பல்லவிக்கும் காதல் மலர்கிறது. பல்லவி பிரபுவை காதலிப்பதையே ராம்குமாரும் விரும்புகிறார். இதை கேள்விப்பட்டு அரண்மனை பிரபுவுக்கும் தன் அக்கா மகள் இந்திரா-வை (அல்லது அவர் சகோதரி ராசி? இருவரில் யார் என்று தெரியவில்லை) மணமுடிக்க விழைகிறார் (பால்ய விவாகம்). இதை கேள்விப்பட்டு பல்லவியை அழைத்துக் கொண்டு நேரே எல்லோர் எதிரிலும் பிரபு தான் பல்லவியை விரும்புவதாக கூறுகிறார். அரண்மனை இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி, சம்பந்தம் பேச பெரியவர்கள் யாரையாவாது வந்து பேச சொல்கிறார். பல்லவி இதற்காக ஊருக்குச் செல்லும் இடையில் இந்திராவின் நீராட்டு விழாவில், மாலையில் தாலியை மறைத்து வைத்து மாலையிடச் செய்து திருமணம் செய்வித்துவிடுகிறார். உண்மையில் இது பொம்மைக் கல்யாணம். இந்திரா இன்னும் சிறுமி தான். ஊரை ஏமாற்றி அரண்மனை இந்த கல்யாணாத்தை நடத்துகிறார். பல்லவி திரும்பி சம்பந்தம் பேச வர, உண்மையை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைகிறார். (TR ஸ்டைல்ல படிக்கவும்: இங்க தான் சார் “தேவனின் கோயில்” பாட்ட ராசா வைக்கிறார்). இந்த காதலுக்கு உதவி செய்ததற்காக பாதிரியாரை சபையை விட்டு நீக்கிவிடுகிறார்கள். ஊர் பஞ்சாயத்து அந்த கல்யாணம் செல்லாது என்று அறிவிக்கிறது (அட! நல்ல பஞ்சாயத்து சினிமாவில் மட்டுமே சாத்தியம்). வடிவுக்கரசி கேட்டுக் கொள்ள ஊரை விட்டு போக முடிவெடுக்கிறார் பல்லவி. ராம்குமார் இந்திராவின் வேண்டுகோளுக்கிணங்க பிரபுவுக்கும் பல்லவிக்கும் திருமண ஏற்பாட்டினை செய்கிறார். அரண்மனை ஆட்களை அனுப்பி ராம்குமாரை சிலுவையில் அறைந்து கொல்கிறார். பல்லவி இருக்கும் வீட்டிற்கு தீ வைக்கின்றனர் (உள்ளே இந்திராவும் இருப்பது தெரியாமல்). இறக்கும் தருவாயில் பல்லவி பிரபுவின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்கிறார்.
அறுவடை நாள். நிலத்தில் அறுவடைக்கு உள்ளூர் கூலியாட்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் அரண்மனையே வயலில் இறங்குகிறார். கையில் கதிரருக்கும் அரிவாள். பிரபு கோபத்துடன் அங்கே வந்து சேர அரண்மனை பிரபுவிடம் அரிவாளை கொடுத்து ஒத்தாசை செய்ய சொல்கிறார். அப்படியே சிலையக நிற்கும் பிரபுவைப் ஏளனமாக பார்த்து, “எரிஞ்சு போனவளா நெனச்சு கரையிரீகளோ” எனக் கேட்க, பிரபு கையில் இருக்கும் அரிவாளால் தந்தையை வெட்டிச் சாய்க்கிறார். அறுக்கப்பட வேண்டிய கதிரில் இரத்தம் தெரிக்கிறது.
Flashback முடிய, பிரபு விடுதலையாகிறார். இந்திரா சிறைச்சாலையின் வெளியே காத்திருக்கிறார். கையில் ஒரு கடிதம். “அம்மா வரலியா?” என்ற பிரபுவின் கேள்விக்கு கடிதத்தை நீட்டுகிறார் இந்திரா. வடிவுக்கரசி பிரபுவிற்கு எழுதியது. “என் தாலியை தான் நீ மதிக்கவில்லை. கட்டிய இவளின் (இந்திரா) தாலியையாவது மதிச்சு வாழ்க்கை கொடு” என எழுதியிருக்கிறார். இந்திராவை அழைத்துக் கொண்டு பிரபு செல்வதாக படம் முடிகிறது.
“அப்பா அம்மா இல்லாத பொன்னுன்னு சொன்னாங்க. ஆனா, அது என்ன J.நிர்மலா?” “அது Jesus நிர்மலா father”;
“தேவனின் கோயில்” பாடல். கேட்டால் கரைத்துவிடும் பாடல். “கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா?”;
அரண்மனையின் மகன் தான் பிரபு என்று தெரியாமல், பிரபுவைப் பற்றி புகார் கொடுக்க, விடிய விடிய பிரபுவை முட்டி போடச் சொல்லும் இடம். பிரபு நகைச்சுவையில் கலக்கியிருப்பார்;
இறக்கும் தருவாயில் பல்லவி பிரபுவின் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை சொல்லும் காட்சி.
– ஆகியன மனதில் நிற்கும் அழகான இடங்கள்.
இந்த இரண்டு படங்களுக்கும் பொருத்தமே இந்த பொருத்தமான தலைப்பு தான். இன்றைய சினிமாக்களுக்கு வைக்கும் தலைப்பு பிரச்சினைகளை எழுப்ப, இப்படி கதைக்கு ஏற்ற தலைப்பை வைத்திருக்கும் இந்த இயக்குனர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உதிரிப்பூக்களைப்போல இதற்கும் அருமையான தலைப்பு. “உதிரிப்பூக்கள்” CD-யை ராஜ் வீடியோ விஷன்-ல் வாங்கி பத்திரப்படுத்திவிட்டேன். அடுத்து, “அறுவடை நாள்”-ஐ அறுவடை செய்ய வேண்டும்.
இவை இரண்டும், miss பண்ணக்கூடாத படங்கள்.
11 comments மே 16, 2006