Archive for ஜூன், 2006

தமிழ் சினிமா – ஒரு படி மேலே

ஹய்யா…தலைப்பை பார்த்து ஏமாந்திட்டீங்களா? இந்த பதிவு தமிழ் சினிமாவில் தற்போது பரவும் ஒரு வியாதியைப் பற்றி.

சென்னை – தென்னிந்தியாவின் தலைநகரம் தான். தமிழ் சினிமா – தென்னிந்திய சினிமா உலகின் தலைநகரம் தான். சினிமாவில் பரீட்ச்சார்த்த முயற்சிகள் சற்றே அதிகப்படியாக நடக்கும் இடம். வியாபாரரீதியிலான படங்களும், கலைப் படங்களும் மல்லுக்கு கட்டும் இடம். நடிகர்களை விட இயக்குனர்களின் கை, சமீபத்தில், ஓங்கியிருப்பது வரவேற்கப்படும் ஒன்று. இவையெல்லாம் சரி.

சில வருடங்களுக்கு முன், தமிழ் திரையுலகம் மிகப் பரிதாபகரமான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தது. எங்கள் ஊரில் “காதல் மன்னன்” என்ற திரைப்படம் புதிதாக திரையிட்ட பொழுது, பக்கத்து திரையரங்கில் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த “பூவே உனக்காக” re-release செய்யப்பட்டு சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. தமிழ் திரையுலகின் பாடு அப்பொழுது படு திண்டாட்டமாக இருந்தது. அதனால், நிச்சயம் “காதல் மன்னன்” ஒரு trend setter. காரணம், அந்த காலகட்டங்களில் வந்த படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு திரைக்கதையை அமைத்ததால். அதாவது சற்றே வேகமான திரைக்கதை. இத்தனைக்கும் சரணின் இயக்கத்தில் மோசமான தோல்வியைக் கண்ட “அல்லி அர்ச்சுனா” எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. என்னைத் திட்டுவதற்கு முன் அந்த படத்தின் திரைக்கதையை பார்த்துவிட்டு திட்டவும். அந்தப் படத்தில் வரும் காவல் நிலையம், கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் (குறிப்பாக மனோஜ்), சற்றேவேனும் logic, ஓரிரண்டு பாடல்கள், குறிப்பாக அனைத்து கதாபாத்திரங்களையும் அந்த காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் திரைக்கதை அமைப்பு போன்றவை. அதனால் எனக்கு இயக்குனர் சரண் மிகவும் பிடித்தவர் ஆகிவிட்டார். என்ன, கொஞ்சம் அதிகப்படியாகவே ஆபாசத்தின் எல்லைக்குச் சென்று திரும்பும் கவர்ச்சி இருக்கும்.

“காதல் மன்னன்” வெற்றிக்குப் பிறகு தான் பிற இயக்குனர்கள், வெற்றியின் formula-வை கண்டுபிடித்தார்கள்(!). அதாவது முற்றிலும் புதிய திரைக்கதை அமைப்பு, ஏற்கனவே பார்த்த காட்சிகள் வேறொரு வடிவில் திரைக்கு கொண்டுவராமல் பார்த்துக் கொள்ளும் உத்தி, குறைக்கப்பட்ட heroism. இந்த formula-வை கொண்டு வெளிவந்த படம் தான் “வாலி”. இது ஒரு வெற்றிப் படம். அப்புறம் சில சரண் படங்கள், முக்கியமாக (ஆபாசம் உட்பட) சற்றே அடக்கி(மட்டுமே)வாசிக்கப்பட்ட தரணியின் படங்கள் சற்றே தரமான வியாபார ரீதியிலான படங்கள் எனலாம். அப்புறம் ஹரி, பாலா, எஸ்.ஜே.சூர்யா, லிங்குசாமி, ஷங்கர் போன்றவர்கள்.

மேலே குறிப்பிட்ட இயக்குனர்களிடம் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது தங்கள் படங்களில் இருக்கும் காட்சிகள் முடிந்த வரையில் புதிதாக இருக்கும்படி செய்வது. கேட்க நன்றாக இருந்தாலும் இதையே வேறு விதமாக பார்த்தால், யாரும் தொடாத கதைக்கரு, அல்லது யாரும் காட்டாத காட்சிகளைக் காட்டுவது அல்லது காட்டிய காட்சியை சற்றி அதீதமாக அழுத்தம் தோய்த்து காட்டுவது. அது வன்முறையானாலும், ஆபாசமானாலும், sentiments ஆனாலும் முடிந்த வரை அதன் எல்லையை தொடுவது. இவர்களுக்குத் தேவை, தாங்கள் சொல்ல வந்தது ‘நச்’சென்று இருக்கவேண்டும். அதற்கு பார்வையாளர்கள் எப்படி போனாலும் கவலையில்லை. வில்லன் கெட்டவன் அப்படீன்னு காண்பிக்க என்னவெல்லாம் காண்பிப்பார்கள். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

முன்பெல்லாம் ஒரு படத்தில் பெண்ணை கதாநாயகனோ, வில்லன் பெண்களை அடிப்பது, கொல்வது போன்ற காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள் அல்லது மேலோட்டமாக காட்டுவார்கள். ஆனால், சமீபத்தில் வந்த புதுப்பேட்டை படத்தில் சினேகாவை பாலாசிங் வயிற்றில் ஓங்கி ஒரு உதை விடுவார். சினேகாவால் கத்தக் கூட முடியாமல் மூச்சிறைக்கும். அதே போல கஜினியில் நயன்தாரா வயிற்றில் உதை வாங்குவார். அதாவது வில்லனின் குரூரம் பார்வையாளர்களுக்கு கோபத்தை வரவழைக்க வேண்டும். கதாநாயகன் வில்லனை கொல்வதை நியாப்படுத்த வேண்டும்.

செல்வராகவன் தொடாத விடயங்களை மட்டுமே தொடுவார். pre-marital sex (துள்ளுவதோ இளமை, 7G ரெயின்போ காலனி), sexual abusement of children (காதல் கொண்டேன், புதுப்பேட்டை), உச்சகட்ட வன்முறை (புதுப்பேட்டை) போன்று. “வெளையாட்டு காட்டிட்டுதான்ணே முடிப்பாங்க. நாம அவன் ஆளு ஒருத்தன முடிச்சத மறந்திடுவானுங்களா என்ன?”-ன்னு தனுஷை ரத்தம் சொட்ட சொட்ட அடிக்கும் காட்சி, மனநிலை பாதிக்கப்பட்ட serial killer-கள் மட்டுமே செய்வது. இத போன்ற serial killer-கள் அமெரிக்காவிலும், ஹாலிவுட்டிலும் மட்டுமே கேள்விபட்டிருக்கிறோம். நம் நாட்டுக்குப் புதுசு என்பதால் இவை வரவேற்கப்படுகின்றன. அதுவும் தாதாயிசம் குறைவாக இருக்கும் சென்னையில் வெறும் தாதாக்களை வைத்தே படம் வருவது ஆச்சரியம். கேட்டால், தான் தமிழ் நாட்டிற்கு படம் எடுப்பதை விட பிரான்சு போன்ற நாடுகளில் படம் எடுக்கக் கூடிய தகுதியான ஆள் என்பார்.

சூர்யா ரவுடியின் மண்டையை பீர் பாட்டிலால் உடைக்க சரியான காரணம் வேண்டும். கல்லூரி ராகிங்கை புதிதாய் காட்டவேண்டும். நந்தாவில் கல்லூரி பெண் ஒருவரை நிற்க வைத்து, வரிசையாக ஒவ்வொருவராய் வந்து முத்தம் கொடுக்க வைப்பது, நந்தா அவன் மண்டையை பீர் பாட்டிலால் உடைப்பது, பார்வையாளர்கள் ஆரவாரம் செய்ய அப்பப்பா. பரவசத்தின் எல்லைக்கே சென்று வரலாம். கற்பழித்தவனின் *** நறுக்-குவது, தாயே தன் மகனை விஷம் வைத்து கொல்வது எந்தப் படத்திலும் வராதது, அப்புறம் நண்பனை கொன்ற எதிரியின் குரல்வளையை கடித்தே கொல்வது (பிதாமகன்-ல்). முக்கியமாக, மாமனாரை கொல்ல மூக்குப் பொடியே போதுமானது என்று புது புது விஷயங்களாஅக கூறுகிறார்கள். பாலாவே சொன்னார், “எல்லோருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், நான் சற்றே அதிகமாக பாதிக்கப்பட்டவன்” என்று.

பிரசாந்த் பொன்னம்பலத்தை அடிக்கவேண்டும் என்பதற்காக, அண்ணியைப் பற்றி கேவலமாக பேச விட்டார் ஹரி தமிழ்-ல். சாமி-ல் கே-னா கூ-னாவும், மூ-னா கூ-னாவும். “காக்க காக்க” பாண்டியா கதாபாத்திரத்தை (தலை இல்லாத முண்டத்தை பார்த்து வசனம் பேசும் ஜீவன்) கதாநாயகன் கதாபாத்திரமாக shape செய்து, ஹரி “ஆறு” படத்தில் சூர்யாவை உலவ விட்டார். ஹீரோ ஒரு வித ஹிஸ்டீரியா நோயாளி போல மூச்சு விடாமல் கத்திக் கொண்டே இருப்பார்.

“காக்க காக்க”-ல் புது யுக்தியை கொடுத்தார் கெளதம். காவல்துறைக்கு தகவல் சொன்னதால் கடத்திய சிறுவனை கொலைசெய்து, பின் அந்த சிறுவனின் தங்கையை மறுபடியும் கடத்தி பணம் வசூல் செய்யும் காட்சி, “பசங்க தான் பொன்னு (சிறுமி) கெடக்கலையேன்னு கடுப்பாயிட்டானுங்க” என்று ஜீவன் சொல்லும் காட்சி கொடுமை.

ஐந்து விடலைப் பையன்கள் ஒருத்தியை வீட்டுக்கே வரவழைப்பது, பிறகு அதன் தொடர்பான censor செய்யப்படாத காட்சிகள், Feelings வந்தா என்ன செய்யனும், Exercise Techniques என்று பாய்ஸ்-ல் ஒரு பட்டியலே தந்திருப்பார் ஷங்கர். கேட்டுப் பார்த்தால் அவையெல்லாம் “close to reality”-யாம். ஒருவேளை 7ஜி ரெயின்போ காலனி செல்வராகவனின் சொந்தக் கதை போல, பாய்ஸ்-ம் ஷங்கரின் சொந்தக் கதையோ?

இவர்களுக்கெல்லாம் குரு ஒருவர் இருக்கிறார். கரெக்ட்! நம்ம எஸ்.ஜே.சூர்யா தான். “நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு. அதை மதிச்சு நடக்கனும்”-ன்னு 14வது ரீலில் தமிழ்வாணன் (என்னா பேரு பாருங்க) சொன்னதும் தியேட்டரில் (உண்மையாகவே) பலத்த சிரிப்பு. “நல்லவன் கூட தப்பு செய்வான். ஆனா, தப்பு செஞ்சு திருந்தினவன் மறுபடியும் தப்பு செய்யமாட்டான்”-ன்னு நயந்தாரா உதிர்ப்பாங்க பாருங்க. எஸ்.ஜே.சூர்யா-வை மத்தவங்க இயக்கும் போதே இப்படீன்னா, அவரே இயக்கினா? No double meanings. Everything is just single and straight forward meaning. (உதாரணம் வேற எழுதனுமா?). தமிழ் தெரியாததால நிலா அ.ஆ.வில் பேசிட்டாங்க. நிலாவுக்கு டப்பிங் கொடுத்தவங்க பாடு தான் பாவம்.

முக்கியமாக, வியாபார ரீதியிலான படங்களின் நாடித்துடிப்பை(!) அறிந்து வைத்திருப்பதில் முன்னிலையில் இருப்பவர், அல்டிமேட் ஸ்டாரையே ஓரங்கட்டிய, “பாட்ஷா” பேரரசு. அண்ணன் பிரகாஷ்ராஜை அடிப்பதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும் என்பதற்காக ஒர் மட்டமான வசனம் வரும். “இப்படியெல்லாம் செய்யுரியே, நீ என் பையன் தானா”-ன்னு ராஜேஷ் தன் பையனிடம் கேட்பார். “அத ஏன் என்கிட்ட கேக்குற. போய் உன் பொண்டாட்டிகிட்ட கேளு நான் யாருக்கு பொறந்தேன்னு”. உடனே விஜய்க்கு கோவம் வந்து பிரகாஷ் ராஜை “சொல்லுவியா?”-ன்னு அடி அடின்னு அடிப்பார். எங்கே போய் முட்டிக்கிறதுன்னு தெரியல.

படத்தை கமர்ஷியலா ஓட்ட ஆயிரம் வழி இருக்கு. அதை தெரியாமல், கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் அல்லது ஆர்வமிகுதியால் இயக்குனர்களே மேற்படி திரைக்கதைகளையும், வசனங்களையும் புகுத்துவர். இதற்கு நல்ல உதாரணம் தரணி மற்றும் லிங்குசாமி. கமர்ஷியல் இயக்குனர் தான் என்றாலும், ஒரு எல்லையை மீறமட்டார். இவர் படங்களில் glamour இருக்கும், ஆனால் அதை ஆபாசமாக இருக்காமல் பார்த்துக் கொள்வார். அதற்காக கவர்ச்சி இருக்கலாமென்று அர்த்தமில்லை. Worse is better than worst. வாலி, மன்மதன், திருட்டுப் பயலே ஆகியவை A சான்றிதழ் பெற்ற படங்கள் தான். ஆனால், கதையின் ஊடே செல்வதால் ஆபாசம் அவ்வளவாக தெரியாது. பிரச்சினை கதைக்குத் தேவையில்லாமல் வெளிக்காட்டபடும் காட்சிகள் தான்.

நம் தமிழ் படங்கள் தான் இப்படி என்றால், நேத்து MI:3 பார்த்தேன். அதில் ஒரு பெண் உளவாளியை காப்பாற்றி கூட்டி வருவார்கள். அவள் மண்டையில் ஒரு capsule அளாவில் ஒரு டெட்டணேட்டரை வைத்திருப்பார்கள். Battery charge இறாங்கயதால் அது வெடித்துவிடும் அபாயம் இருகும். சார்ஜ் ஏற்றிக்கொண்டிருப்பார்கள். அவள் டாம் க்ரூஸின் கையை பிடித்து “thanks” என்று சொல்லுவாள். ஐந்து வினாடி மட்டுமே இருக்கும். அப்பொழுது உள்ளிருக்கும் டெட்டணேட்டர் வெடித்துவிடும். ட்யூப் லைட் பியூஸ் போவது போல அவள் கண்கள் (கண்ணாடி மேல் கல்லடித்தால் ஒரு விதமாக crack விழுமே, அதுபோல்) பியூஸ் ஆகி இறந்து விடுவாள். உண்மையில் என்னை பாத்த்த காட்சி அது. ஹும்…புதுசு புதுசா கண்டுபிடிக்கிறாங்களே. ஒக்காந்து யோசிப்பாங்களோ?

சமீபத்தில் பாரிஜாதம் படம் பார்த்தேன். பார்ப்பவர்கள் மத்தியில் அந்தப் படத்தைப் பற்றி அபிப்பிறாயங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், எனக்குத் தெரிந்து சமீபத்தில் வந்த படங்களில் குறிப்பிடப்படவேண்டிய ஒரு படம். ஒரு படம் பார்ப்பதற்கு முன், அந்த படத்தில் சிறப்பம்சம் (speciality) என்ன என்பதை வைத்து படம் பார்ப்பேன். மற்ற இயக்குனர்கள் கதைப் பஞ்சம் வந்து தள்ளாட, பாக்கியராஜோ ஒரே படத்தில் இரண்டு(ம்) அழுத்தமான கதைகளைக் கொண்டு அசத்தியிருக்கிறார். என்ன, ஆங்காங்கே sentiment கொஞ்சம் அதீதமாக இருக்கும். (அதுவும் டி.ஆர்-ஐ கலாய்த்தது execellent + சற்றே ஓவர்). அதனால் தான் பாக்கியராஜ் இந்தியாவில் உள்ள சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராக உள்ளார். இயக்குனர்கள் பாக்கியராஜை பார்த்து திரைக்கதை அமைப்பதை பற்றி கற்றுக் கொள்ளலாம்.

4 comments ஜூன் 30, 2006

தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் இப்படியா இருக்கனும்…?

7 comments ஜூன் 30, 2006

"செல்லம்மாள்" பாரதி

நேற்று அதிகாலை House Drop-ல் வீட்டிற்கு போகும் வழியில், எல்லை இல்லாத, புத்தி எங்கெங்கோ சுற்றி மாகாகவியிடம் வந்து நின்றது. உடனே கைபேசியில் ஒரு reminder வைத்துவிட்டேன். பாரதியைப் பற்றி எத்தனையோ படைப்புகள். “பாரதி” என்றொரு திரைப்படம். மற்றும் இன்ன பிற இத்யாதிகள். ஒவ்வொரு முறை இதைப் பார்க்கும் பொழுதும் என்னுள் எழுந்த கேள்வி, பாரதியின் மனைவி செல்லம்மாள் பற்றி.

எனக்கு பாரதியை திரைப்படம் மற்றும் ஊடகங்கள் வழியாக மட்டுமே தெரியும். அதனால் எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். கண்டிப்பாக பிழையிருக்கும். சுட்டிக் காட்டவும். பாரதியை மிகவும் மதிப்பவன் நான். அதற்காக நான் நினைப்பதை சொல்லாமல் இருக்க முடியாது. (அடச்சே! நிலைமையை பார்த்தா எல்லத்துக்கும் ஒரு disclaimer போட வேண்டியிருக்கே!!).

பாரதியை இருக்கும் வரை யாரும் மதிக்கவில்லை. சமுதாயம் அவன் இறந்த பிறகு வருத்தப்பட்டது. வருத்தப்படுகிறது. ஒரு வேளை பாரதி இப்பொழுது இதே மண்ணில் இருப்பதாய் வைத்துக் கொள்ளுங்கள். இன்னமும் அவனுக்கு அதே நிலைமை தானா? அதே treatment தானா? எனக்குத் தெரிந்த வரை விடை “ஆமாம்” என்பதே. அது சமுதாயத்தின் குற்றமல்ல. பின்னே குடும்பம், குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் கவிதை எழுதுவதும், பாடல் எழுதுவதும், நாட்டிற்காக உழைப்பதும் எப்படி சோறு போடும். நான் பாரதியை குறை கூறுகிறேன். காரணம், பாரதி ஒரு bachelor-ஆ இருந்திருந்தால் எப்படியோ வாழட்டும். ஆனால் சிறுவயதில் கல்யாணம் செய்வித்து, குடும்பபாரம் சுமப்பவர்கள் குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது தப்பென்று நினைக்கிறேன். பின் செல்லம்மாள் திட்டாமல் என்ன செய்வாள்.

பாரதி ஒரு கவிஞனாக, தமிழனாக, இந்தியனாக, மனிதனாக வேண்டுமானால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், ஒரு கணவனாக, தந்தையாக அவர் வெற்றிப் பெற்றிருக்கிறாரா? ஒரு சாதாரண பிரஜையாக நினைத்துக் கொள்ளுங்கள். சுப்பிரமணி பாரதி என்னும் ஓர் மனிதன், செல்லம்மாள் என்ற மனைவி, இரண்டு பெண் குழந்தைகள். இவையே பாரதியின் குடும்பம். அவரின் தினசரி அலுவல் என்ன? தோட்டத்தில் நண்பர்களுடம் அமர்ந்து கொண்டு “இன்று இலக்கியம், அரசியல் எதுவும் வேண்டாம். வேறு ஏதாவது பேசுவோம்” என்று தான் தன் அலுவல்களை(?) பார்க்கிறார். தன் குழந்தைகள் பசியால் வாடும்பொழுது அதனைப் பற்றி கவலைப்படாமல், தூரத்தில் பிஜி தீவில் வாடும் இந்தியர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். “உன் கணவன் ஒரு ஏழை. உன் குடும்பம் பசியால் கிடந்து சாகவேண்டும் என்பது உன் விதி. ஆனால், பாரதி ஏழை இல்லை. அவன் ஒரு உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகை பார்க்கிறான்.” என்கிறார். எனக்கென்னவோ இது MPD என்றே தோன்றுகிறது.

பாரதியின் கவிதைகளை பொருத்தவரை சொல்லப் போனால், பாரதி அந்த காலத்து கானா கவிஞர். வெண்பாக்களை பாடல்களாக வடித்த காலத்தில், அனைவருக்கும் புரியவேண்டும் என்று பேச்சுத் தமிழில் பாடல்களை, கவிதைகளை கொடுத்தவர். அதனாலேயே பலர் குறை கூறினர். என்ன இப்பொழுது அந்த கவிதைகள் “தூய” தமிழில் இருப்பதால் அவை மதிக்கப்படுகின்றன. உதா, அந்த காலத்து டப்பாங்குத்தான “மச்சானப் பாத்தீங்களா”, இப்பொழுது classical ஆகவில்லையா?

செல்லம்மாள் என்ன பாவம் செய்தாள், இப்படி ஒருத்தருக்கு மனைவியாய் வாய்த்து துன்பப்பட? கலப்புத் திருமணம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்களுக்கு மத்தியில் தன் மகளுக்கு கலப்புத் திருமணம் செய்விக்க ஆசைப்பட்டார். ஆனால், செல்லம்மாள் அதனை தவிர்பதற்காக பிறந்தகம் சென்றாள். செல்லம்மாள் பார்வையில், அது தவறாகாது (இது நடந்தது சென்ற நூற்றாண்டு என்பதை நினைவில் கொள்க).

“நான் எத்தனையோ முறை உன்னை கை நீட்டி அடித்திருக்கிறேன்”, “புருஷான்னா ஆம்படையாளை அடிக்கத் தான் செய்வா” என்று செல்லம்மாவின் பதில், அந்த காலகட்டத்தில் இருந்த பெண்ணடிமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

இதுவே பாரதி ஒரு கவிஞனாக, சுதந்திர போராட்ட வீரனாக இருந்தத்னால் தானே நாம் இத்துனை negative-களுக்கு மத்தியிலும் பாரதியை மதிக்கிறோம். இந்த extra fittings இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும்.

“காலத்தை மீறி கனவு காண்பவர்கள் சக கால மனிதர்களாலேயே ஒதுக்கப்படுவார்கள்” என்று பாரதி உணர்ந்திருந்தால் செல்லம்மாள் இப்படி கஷ்டப்படவேண்டியிருந்திருக்காது. உணராததால் நமக்கு ஒரு பாரதி கிடைத்தார். (இதுக்குப் பேர்தான் Mutually Exclusive-வோ?)

10 comments ஜூன் 22, 2006

19 comments ஜூன் 21, 2006

மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

Kannan மேல் இந்து மதம் Vs மூட நம்பிக்…
sivaji rasigan மேல் சிவாஜி கணேசன் – ஒரு…
சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்

சுவடுகள்

Blog Stats