48. புத்தாண்டு, மெரீனா, அரவாணிகள் – வாலிப வக்கிரம்

ஜனவரி 1, 2007

கடந்த இரு வருடங்களாக சென்னையில் வாசம். சென்ற வருட புத்தாண்டை என்னுடன் பனிபுரியும் ஆந்திர நண்பர்களுடன் கழித்தேன். இந்த வருடம் என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது, சரி போன வருடமே தவறிவிடப்பட்டது, இந்த வருடமாவது மெரீனா போகலாமென்று முடிவெடுத்து இரவு சுமார் 11 மணியளவில் என் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். கையில் தான் காமெரா இருக்கிறதே, எதற்கு விடுவானேன் என்று கொண்டு போனேன். அங்கு சென்று சேரும் பொழுது 11:45 மணி. சுமார் ஆயிரக்கணக்கில் இருந்தது கூட்டம். ஒரே ஆர்ப்பரிப்புடன் குதூகலமாக இருந்தது.

புத்தாண்டும் பிறந்தது. அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாரிக் கொண்டனர். மணி 12:30 ஆனது. சரி கிளம்பலாம் என்று வண்டியை எடுத்துக் கொண்டு கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சாலையில் வந்தேன். அப்பொழுது சாலையில் ஒரு அரவாணி சென்று கொண்டிருந்தார். அவர் பார்ப்பதற்கு சராசரி பெண் போலவே தான் தெரிந்தார். அந்த அளவுக்கு மேக் அப் இருந்தது. அவளை கடந்து போன இரு வாலிபர்கள் அவளைப் பார்த்து ஏளானமாக சிரித்தனர். எனக்கு முதலில் புரியவில்லை. பின் தான் அது ஒரு அரவாணி என்று தெரிந்தது. அவளும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. கேலி கிண்டலுக்கு ஆளாகி பழக்கம் ஆனதால் போல. எனக்கு பரிதாமாக இருந்தது (பின்ன, நாங்க பாலா பாசறை ஆச்சே, மனுஷர் தான் எனக்கு அரவாணிகள் மேல் ஒரு பரிதாபம் கொள்ள கற்றுத் தந்தார்). பின் என் பார்வையில் இருந்து மறைந்து போனாள்.

பயங்கர கூட்டம் மற்றும் ஒரு வழிப்பாதையில் எதிரில் வந்த ஒரு அம்பாசடார் கார், ‘சின்ன யானை’ வண்டி ஆகியவையால் ஜாம் ஆகியது. அந்த இடத்திலேயே ஒரு அரை மணி நேரம் அங்கும் இங்கும் அசைய முடியாமல் ஆணியடித்தது போல மாட்டிக் கொண்டேன். அடடா! கொஞ்சம் போல தாமதமாக கிளம்பியிருக்கலாமே என்று (வழக்கம் போல) தாமதமாக யோசித்தேன்.

கடற்கரை சாலை, அந்த சாலையை ஒட்டி உள்ளே நான் நின்றிருந்த சாலை. இதற்கு நடுவில் பூங்கா போல புல் தரையுடன் அமைக்கப்பட்டிருந்தது. என் வண்டி நின்றிருந்த இடத்தில் ஒரு விளக்கு கம்பம் இருந்தது. திடீரென்று அங்கு ஒரே ஆர்ப்பரிப்பு தெரிந்தது. என்னவென்று பார்த்தால், அங்கு, மற்றொரு, அரவாணி (ஆண் போல தெரிந்தார்) ஆடிக்கொண்டிருந்தார். ஆட்டமென்றால், ‘வசீகரா’ பாடல் ஸ்டைலில் விளக்கு கம்பத்தை பிடித்துக் கொண்டு. அங்கிருந்த கூட்டமும் அவர் ஆடியதற்கு கை தட்டி உறசாகக் குரல்கள் எழுப்பின. எல்லாமே வாலிப கூட்டம். (இவருக்கு அந்த கூட்டம் வெத்த பெயர் ‘ரீமா சென்’). முதலில் பார்த்த அரவாணிக்கு ‘நயன்தாரா’.

இதற்கிடையில் அங்கு வந்து சேர்ந்த நயன்தாரா, இவர் ஆடும் ஆட்டம் பார்த்து அவனை ரெண்டு அடி அடித்தாள். அப்பொழுது அந்த இளவட்டங்கள் செய்த சேட்டைகள் படு கேவலமாக இருந்தன. அவளுக்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் கட்டிப்பிடித்து அவளை ஒரு வழி செய்தனர், கண்ட இடத்தில் ‘கை’ வைப்பது என்று. அந்த மின்சார கம்பத்தை தாண்டி கொஞ்ச தூரத்திற்கு ‘சற்றே’ இருட்டாக இருந்தது. இரண்டு மூன்று பேர் அவளை தள்ளி சென்றனர். அங்கே வாழ்த்த வந்த அனைவருக்கும் இலவசமாக ஒவ்வொரு ‘கிஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தாள்!!! அந்த பசங்களும் அவளை வலுக்கட்டாயமாக இம்சித்துக் கொண்டிருந்தனர். முதலில் திமிரியவள், பின் அவர்களுடன் சகஜமானாள். அங்கு 2, 3 என்று பின் அங்கு கணிசமான அளவில் அரவாணி கூட்டம் வந்து சேர்ந்தது. அங்கிருந்தவர்கள் சொன்னது, அவர்கள் அனைவரும் பாலியல் தொழிலாலர்கள் என்று. (இந்த இடத்தில் காவலர்கள் இல்லை, காரணம், காமராசர் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்).

அந்த பெண்ணும் ஒவ்வொரு முறை அந்த வாலிப கூட்டத்தில் இருந்து விடுபட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அப்படி வரும்பொழுது அவள் சட்டையில் பொத்தான்களை மாட்டிக் கொண்டே வந்தாள். இதில் கொடுமை என்னவென்றால், எனக்கு அருகில் இருந்த ஒரு ஆட்டோவில் நான்கு பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு முதலில் புரியவில்லை போலும். ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டி அங்கு நடந்த கூத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். இதில் ஒரு சின்ன பெண்ணும் அடக்கம். பின் தான் அவர்களுக்கு அந்த நிலைமையில் தீவிரம் புரிந்திருக்க வேண்டும். தர்ம சங்கடத்தில் நெளிந்தார்கள். ஆட்டோவோ அங்கும் நகர முடியாத நிலை. அதை விட கொடுமை, அந்த ஆட்டோவிற்கு பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு ஜோடி, கணவனும் மனைவியும் போல. அந்த பெண்மனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, தலை கீழே குனிந்து கொள்வதைத் தவிற!!!

கொண்டு சென்ற காமெராவில் இந்த கருமத்தை எல்லாம் படம் பிடித்தேன். ஆனால் இருள் என்பதால் சரியாக விழவில்லை மற்றும் அந்த கேவலத்தை இங்கு வேறு டமாரம் அடிக்க வேண்டுமா என்று விட்டுவிட்டேன். நடந்த எல்லாவற்றிற்கும் அங்கிருந்த கூட்டம் செய்த சப்போர்ட் தான் என்னை அதிர்ச்சி ஆக்கியது. எங்கே போகிறது இளவட்டம்?

வாழ்க வாலிப வயசு வக்கிரம்!!! :(

Entry Filed under: அரவாணிகள் Transgenders Newyear Marina. .

18 Comments Add your own

  • 1. Anonymous  |  ஜனவரி 1, 2007 at 7:04 பிற்பகல்

    எல்லாருமே வக்கிரம் பிடுச்ச பய மக்கள் பெத்த பயல்கள். எயிட்சிலதான் முடியும்.

    புதிதாக வந்த பாடல் ஒன்று,
    பிரித்தானிய பென்களுக்கும் இந்திய ஆண்களுக்கும் அடங்காத(அடக்கமுடியாத) ஆசையாம்.உணமைபொய் தெரியவில்லை, நீங்கள் சொல்வதைபாத்தால் பாதி சரிபோல் இருக்கு:-))

    பதில்
  • 2. Anonymous  |  ஜனவரி 1, 2007 at 7:04 பிற்பகல்

    எல்லாருமே வக்கிரம் பிடுச்ச பய மக்கள் பெத்த பயல்கள். எயிட்சிலதான் முடியும்.புதிதாக வந்த பாடல் ஒன்று,பிரித்தானிய பென்களுக்கும் இந்திய ஆண்களுக்கும் அடங்காத(அடக்கமுடியாத) ஆசையாம்.உணமைபொய் தெரியவில்லை, நீங்கள் சொல்வதைபாத்தால் பாதி சரிபோல் இருக்கு:-))

    பதில்
  • 3. சந்தோஷ் aka Santhosh  |  ஜனவரி 1, 2007 at 7:18 பிற்பகல்

    ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் இது சீனு :(

    பதில்
  • 4. சந்தோஷ் aka Santhosh  |  ஜனவரி 1, 2007 at 7:18 பிற்பகல்

    ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் இது சீனு :(

    பதில்
  • 5. சீனு  |  ஜனவரி 1, 2007 at 8:29 பிற்பகல்

    //எல்லாருமே வக்கிரம் பிடுச்ச பய மக்கள் பெத்த பயல்கள்//
    ஆஹா அனானி! நோ…நோ பாட் வேர்ட்ஸ்! மம்மி பாவம்! மம்மி பாவம்!

    பசங்க பன்ற தப்புக்கு பெத்தவங்களா ஏன் இழுக்கரீங்க? அவங்க என்ன பன்னுவாங்க?

    //ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் இது சீனு :( //
    ஆமாம் சந்தோஷ். :(

    பதில்
  • 6. சீனு  |  ஜனவரி 1, 2007 at 8:29 பிற்பகல்

    //எல்லாருமே வக்கிரம் பிடுச்ச பய மக்கள் பெத்த பயல்கள்//ஆஹா அனானி! நோ…நோ பாட் வேர்ட்ஸ்! மம்மி பாவம்! மம்மி பாவம்! பசங்க பன்ற தப்புக்கு பெத்தவங்களா ஏன் இழுக்கரீங்க? அவங்க என்ன பன்னுவாங்க?//ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் இது சீனு :( //ஆமாம் சந்தோஷ். :(

    பதில்
  • 7. tamilmagani  |  ஜனவரி 2, 2007 at 5:17 மு.பகல்

    படிச்சவுடனே ரொம்ப கஷ்டமா போச்சு! ஒரு புது வருடத்தை இப்படி வரவேற்கும் இந்த பயல்களை என்ன செய்வது? பல இளையர்கள் இப்படி இருந்தா.. இந்தியாவின் நாளைய தலையெழுத்து எப்படி இருக்க போகுது??

    ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு..:(

    பதில்
  • 8. tamilmagani  |  ஜனவரி 2, 2007 at 5:17 மு.பகல்

    படிச்சவுடனே ரொம்ப கஷ்டமா போச்சு! ஒரு புது வருடத்தை இப்படி வரவேற்கும் இந்த பயல்களை என்ன செய்வது? பல இளையர்கள் இப்படி இருந்தா.. இந்தியாவின் நாளைய தலையெழுத்து எப்படி இருக்க போகுது?? ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு..:(

    பதில்
  • 9. Anonymous  |  ஜனவரி 2, 2007 at 6:29 மு.பகல்

    :-( (((

    ஆக… புத்தாண்டு ஒரு மாதிரியான வலியோடு தான் துவங்கி இருக்கு.

    பதில்
  • 10. Anonymous  |  ஜனவரி 2, 2007 at 6:29 மு.பகல்

    :-( (((ஆக… புத்தாண்டு ஒரு மாதிரியான வலியோடு தான் துவங்கி இருக்கு.

    பதில்
  • 11. சீனு  |  ஜனவரி 2, 2007 at 1:35 பிற்பகல்

    //புத்தாண்டு ஒரு மாதிரியான வலியோடு தான் துவங்கி இருக்கு.//
    ஏதேனும் உள் குத்து இல்லையே, பாலா?

    பதில்
  • 12. சீனு  |  ஜனவரி 2, 2007 at 1:35 பிற்பகல்

    //புத்தாண்டு ஒரு மாதிரியான வலியோடு தான் துவங்கி இருக்கு.//ஏதேனும் உள் குத்து இல்லையே, பாலா?

    பதில்
  • 13. திரு  |  ஜனவரி 3, 2007 at 6:15 பிற்பகல்

    :( ((

    பதில்
  • 14. திரு  |  ஜனவரி 3, 2007 at 6:15 பிற்பகல்

    :( ((

    பதில்
  • 15. Anonymous  |  ஜனவரி 4, 2007 at 2:57 பிற்பகல்

    இந்தியாவிலுள்ள மெட்ரோ சிட்டியில் சென்னை மட்டும் தான் கட்டுப்பெட்டியான கலாச்சார அமைப்பினை தக்கவைத்துக்கொண்டுள்ளது. (இப்போதும் உள்ளதாக நம்புகிறேன்)

    ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கே இருந்தது இத்தகைய புத்தாண்டு கொண்டாட்டங்கள். று சில ஆண்டுகளில் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் உருவாக யார்காரணம். சென்னைவாசிகளா?
    சென்னைக்கும் மும்பைக்கும் ஏக வித்தியாசம் = கலாச்சாரத்தில். ஆனால் தற்போதைய கூத்துக்கள் சென்னையினை மும்பை போல் ஆக்கிவருகின்றன.
    முதல் காரணம். பன்னாட்டுக்கம்பெனிகளும், அதன் ஆளுமைத் தன்மையுமே. இது தான் முதல் காரணம் (இந்த காரணத்தினை விளக்கவேண்டுமானால் ஏ4 காகித அளவில் ஒரு பத்துபக்கத்து எழுதலாம்)
    அடுத்தது, அவர்களின் செயல்பாட்டினை நெய் ஊற்றி பெரிய தீப்பந்தமாக்கி அதில் வருவாய் என்னும் குளிர் காயும்….நட்சத்திர ஓட்டல்கள்.
    இதனை எல்லாம் கட்டுப்படுத்த காவல்துறை ஒன்றால் மட்டும் தான் முடியும். ஏதாவது ஒரு பெண்ணை எவனாது கற்பழச்சிட்டடான்னாக்கா… யாரு பொறுப்பு….
    இந்த வருசம் பத்தாயிரம் பேர் மெரினாவில் கூடியிருந்தால், அதை தெரிஞ்சிக்கிட்ட மற்ற பேர்வழிகள் அடுத்த வருஷம் டிரைப்பண்ணிப் பார்ப்பானுங்க….
    சென்னையை கெடுக்குறாங்கையா கெடுக்குறாங்க…..

    பதில்
  • 16. Anonymous  |  ஜனவரி 4, 2007 at 2:57 பிற்பகல்

    இந்தியாவிலுள்ள மெட்ரோ சிட்டியில் சென்னை மட்டும் தான் கட்டுப்பெட்டியான கலாச்சார அமைப்பினை தக்கவைத்துக்கொண்டுள்ளது. (இப்போதும் உள்ளதாக நம்புகிறேன்) ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் எங்கே இருந்தது இத்தகைய புத்தாண்டு கொண்டாட்டங்கள். று சில ஆண்டுகளில் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் உருவாக யார்காரணம். சென்னைவாசிகளா? சென்னைக்கும் மும்பைக்கும் ஏக வித்தியாசம் = கலாச்சாரத்தில். ஆனால் தற்போதைய கூத்துக்கள் சென்னையினை மும்பை போல் ஆக்கிவருகின்றன. முதல் காரணம். பன்னாட்டுக்கம்பெனிகளும், அதன் ஆளுமைத் தன்மையுமே. இது தான் முதல் காரணம் (இந்த காரணத்தினை விளக்கவேண்டுமானால் ஏ4 காகித அளவில் ஒரு பத்துபக்கத்து எழுதலாம்) அடுத்தது, அவர்களின் செயல்பாட்டினை நெய் ஊற்றி பெரிய தீப்பந்தமாக்கி அதில் வருவாய் என்னும் குளிர் காயும்….நட்சத்திர ஓட்டல்கள். இதனை எல்லாம் கட்டுப்படுத்த காவல்துறை ஒன்றால் மட்டும் தான் முடியும். ஏதாவது ஒரு பெண்ணை எவனாது கற்பழச்சிட்டடான்னாக்கா… யாரு பொறுப்பு…. இந்த வருசம் பத்தாயிரம் பேர் மெரினாவில் கூடியிருந்தால், அதை தெரிஞ்சிக்கிட்ட மற்ற பேர்வழிகள் அடுத்த வருஷம் டிரைப்பண்ணிப் பார்ப்பானுங்க…. சென்னையை கெடுக்குறாங்கையா கெடுக்குறாங்க…..

    பதில்
  • 17. சீனு  |  ஜனவரி 4, 2007 at 8:37 பிற்பகல்

    நாகு,

    //இப்போதும் உள்ளதாக நம்புகிறேன்//
    ம்ம்…மற்ற நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் சென்னை என்னவோ தன் கலாச்சார அமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ளது தான். (உதா, மும்பை கால்சென்டரில் சாக்கடையில் அடைபட்ட காண்டம்கள் இங்கு இல்லைதான்).

    //ஆனால் தற்போதைய கூத்துக்கள் சென்னையினை மும்பை போல் ஆக்கிவருகின்றன.//
    ம்ஹூம்…மும்பையில் கேள்விப்பட்டீர்களா? ஒரு ஜோடியை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, இந்தியா கேட்டில், சுமார் 75 பேர் வரை அந்த பெண்ணை 10 நிமிடத்திற்கு sexual harrasment செய்திருக்கிறார்கள். அவள் ஸ்கர்டை உருவி உள்ளாடையுடன்…எதேச்சையாக ஒரு பத்திரிக்கையாளர் அதனை தன் காமெராவில் எடுத்துள்ளார். அவள் கூட வந்தவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    காவல்துறைக்கும் அந்த ஜோடி எந்த புகாரையும் தரவில்லை. அந்த ஜோடியில் முகமும் தெரியவில்லை. ஆனால், காவல்துறை இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தில் தெரியும் ஆண்களை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறது…

    இந்த விஷயத்தில் சென்னை கொஞ்சம் லேட் தான் :( ஆனால், கூடிய விரைவில் முந்திவிடுவோம்.

    //இந்த வருசம் பத்தாயிரம் பேர் மெரினாவில் கூடியிருந்தால், அதை தெரிஞ்சிக்கிட்ட மற்ற பேர்வழிகள் அடுத்த வருஷம் டிரைப்பண்ணிப் பார்ப்பானுங்க….//
    போன வருஷம் மிஸ் பன்னினதுனால தான, நான் இந்த வருஷம் போனேன் (சும்மா பார்க்குறதுக்கு தான்).

    பதில்
  • 18. சீனு  |  ஜனவரி 4, 2007 at 8:37 பிற்பகல்

    நாகு,//இப்போதும் உள்ளதாக நம்புகிறேன்//ம்ம்…மற்ற நகரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் சென்னை என்னவோ தன் கலாச்சார அமைப்பினை தக்கவைத்துக் கொண்டுள்ளது தான். (உதா, மும்பை கால்சென்டரில் சாக்கடையில் அடைபட்ட காண்டம்கள் இங்கு இல்லைதான்).//ஆனால் தற்போதைய கூத்துக்கள் சென்னையினை மும்பை போல் ஆக்கிவருகின்றன.//ம்ஹூம்…மும்பையில் கேள்விப்பட்டீர்களா? ஒரு ஜோடியை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, இந்தியா கேட்டில், சுமார் 75 பேர் வரை அந்த பெண்ணை 10 நிமிடத்திற்கு sexual harrasment செய்திருக்கிறார்கள். அவள் ஸ்கர்டை உருவி உள்ளாடையுடன்…எதேச்சையாக ஒரு பத்திரிக்கையாளர் அதனை தன் காமெராவில் எடுத்துள்ளார். அவள் கூட வந்தவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.காவல்துறைக்கும் அந்த ஜோடி எந்த புகாரையும் தரவில்லை. அந்த ஜோடியில் முகமும் தெரியவில்லை. ஆனால், காவல்துறை இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தில் தெரியும் ஆண்களை வேட்டையாட ஆரம்பித்திருக்கிறது…இந்த விஷயத்தில் சென்னை கொஞ்சம் லேட் தான் :( ஆனால், கூடிய விரைவில் முந்திவிடுவோம்.//இந்த வருசம் பத்தாயிரம் பேர் மெரினாவில் கூடியிருந்தால், அதை தெரிஞ்சிக்கிட்ட மற்ற பேர்வழிகள் அடுத்த வருஷம் டிரைப்பண்ணிப் பார்ப்பானுங்க….//போன வருஷம் மிஸ் பன்னினதுனால தான, நான் இந்த வருஷம் போனேன் (சும்மா பார்க்குறதுக்கு தான்).

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

Kannan மேல் இந்து மதம் Vs மூட நம்பிக்…
sivaji rasigan மேல் சிவாஜி கணேசன் – ஒரு…
சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்

சுவடுகள்

Blog Stats